அமெரிக்காவில் சில தினங்களாக பனி மக்களை வாட்டி வதைக்கிறது. வரலாறு காணாத அளவிற்கு பனி சூழ்ந்துள்ளது. துருவ பகுதிகளில் காணப்படும் அளவிற்கு வெப்பநிலை மிகவும் குறைந்து காணப்படுகிறது.
இது வெறும் ஆரம்பம் மட்டுமே. மனிதனின் இரக்கமற்ற இயற்கைக்கு விரோதமான நடவடிக்கைகளால் இயற்கை மனிதனுக்கு திருப்பி செய்யும் கைம்மாறு இது என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். அறிவியலில் எவ்வளவோ சாதித்துவிட்ட மனிதனால் இயற்கையை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதை தெரிந்தும் தெரியாமல் இருப்பதுபோல் நடிக்கிறான்.
இந்த அவலநிலை தொடரத்தான் செய்யும். இயற்கையோடு ஒத்து வாழும் வாழ்க்கையே என்றும் மனித இனத்துக்கும் அத்தனை உயிரினத்துக்கும் நன்மைபயக்கும். இதை மனிதன் உணரும் நேரம் வரும்போது மனித இனத்தில் பெரும்பகுதி அழிந்திருக்கும் !!
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment