உள்ளதைச் சொன்னா குத்தமில்லை...

Saturday, December 21, 2019


“ஒரு குறையும் செய்யாமே
ஒலகத்திலே யாருமில்லை - அப்படி
உத்தமனாய் வாழ்ந்தவனை - இந்த ஒலகம்
ஒதைக்காம விட்டதில்லை”

இருக்கும் பொழுதை ரசிக்கணும் - அட
இன்பமாகக் கழிக்கணும்
எதிலும் துணிஞ்சு இறங்கணும் - நீ
ஏங்கி எதுக்குத் துடிக்கணும் ?

நாளை நாளை என்று பொன்னான
நாளைக் கெடுப்பவன் குருடன்
நடந்து போனதை நெனச்சு ஒடம்பு
நலிஞ்சு போறவன் மடையன் - சுத்த மடையன்
நம்மைப்போல கெடச்சதைத் தின்னு
நெனச்சதைச் செய்யிறவன் மனுஷன்”

ஆடி ஓடிப் பொருளைத் தேடி....
அவனும் திங்காமே பதுக்கி வைப்பான்....
அதிலே இதிலே பணத்தைச் சேத்து
வெளியிடப் பயந்து மறச்சுவைப்பான்;
அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை
ஆருக்கும் சொல்லாம பொதச்சு வைப்பான்
ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான் - ஆமா
பொதச்சு வைப்பான்

நல்ல வழியிலே வாழ நெனச்சு
நாயாக அலையாதே - அது இந்த
நாளில் முடியாதே
நரியைப் போல எலியைப் போல
நடக்கத் தெரிஞ்சுக்கணும் - தம்பி
உடம்பு அழுக்கு; உடையும் அழுக்கு !
உள்ளம் அழுக்குங்க - அதுலேதான்
உலகம் கிடக்குங்க - இது
உமக்கும் எமக்கும் கழுதைக்கும் தெரியும்
ஒண்ணும் சுத்தமில்லை.. உள்ளதைச்
சொன்னா குத்தமில்லை...

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
திரைப்படம்: கண் திறந்தது

* தினேஷ்மாயா *

காசேதான் கடவுளோ !

Friday, December 20, 2019



“காசு தந்தால்தான் உன்னைக்
காணும் வழிகாட்டுவதாய்
கதவு போட்டு பூட்டி வைத்துக்
கட்டாயம் பண்ணுவதைப் பார்த்தாயா”

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

* தினேஷ்மாயா *


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்..



2010-ம் ஆண்டு நான் வாங்கிய ”பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  பாடல்கள்” நூலை இன்று வாசிக்க எடுத்தேன். அதிலிருந்து, என் மனம் கவர்ந்த சில வரிகளை இங்கே பகிர விரும்புகிறேன்.

இவரின் மொழி ஆளுமையும், புலமையும், சமூக அக்கறையும் இவர்தம் பாடல்களில் வழிந்தோடுகிறது. என்னை நனைத்த சில வரிகளை இனிவரும் சில பதிவுகளில் பகிர்கிறேன்.

“ பக்த ஜனங்கள் கவனமெல்லாம் தினமும் கிடைக்கும் சுண்டலிலே..
பசியும் சுண்டல் ருசியும் போனால் பக்தியில்லே பஜனையில்லே..”

இன்றும் கூட, பல கடைநிலை மாந்தர்கள் கோயிலை நோக்கி படையெடுக்க அங்கே கிடைக்கும் சுண்டலும் புளியோதரையும்தானே காரணமாய் இருக்கிறது. பக்தி என்பதி வெளி போர்வையாகவும், பசியே உண்மை முகமாகவும் இருக்கும் மனிதர்களின் உணர்வை வெளிப்படுத்தும் வரிகளாக இவை எனக்கு தெரிகின்றது.\

* தினேஷ்மாயா *

இயர்ஃபோன்ஸ்

Thursday, December 19, 2019



விளிம்புநிலை மாந்தரின்

அவலக்குரல் கேட்காதிருக்க

அனைவரின் காதுகளையும்

மூடியே வைத்திருக்கிறது

"இயர்ஃபோன்ஸ்"

* தினேஷ்மாயா *

என்னவென்று அழைக்க ?!

Wednesday, December 18, 2019




திசம்பரில் மட்டுமே பூக்கும் பூவை

திசம்பர் பூ என்று அழைப்போம்..

தினம் தினம் பூக்கும் உன்னை

என்னவென்று அழைப்பேனடி ??

* தினேஷ்மாயா *

உடனடி கவிதை !!


            நானும் என்னவளும் நடந்து சென்றுக்கொண்டிருந்தோம். அப்போது சில வீடுகளில், மாடி வீட்டிலிருந்து கீழே ஒரு துணிப்பையை கட்டித் தொங்க விட்டிருந்தனர். மேலே இருப்பவர்களுக்கு எந்தவொரு பொருளை சேர்க்க விரும்பினாலும், அதை இந்த பையில் வைத்துவிட வேண்டும். அதை அவர்கள் மேல் வீட்டில் இருந்தபடியே கயிறால் இழுத்து அப்பொருளை எடுத்துக்கொள்வர்.

இந்த காட்சியை கண்டதும் உடனடி கவிதை தோன்றியது. அதை உங்கள் சிந்தனைக்கு சமர்ப்பிக்கிறேன்.

" மாடிவீட்டு மாமியின்
தொப்பைத் தொல்லையால்,
தூக்கில் தொங்கியது துணிப்பை"

* தினேஷ்மாயா *

வாழ்வின் பயணம்

Friday, December 13, 2019



வாழ்வின் இரகசியம்

வாழ்வதில் இல்லை

வாழ்க்கைப் பயணத்திலே என்பதை

உணரும்போது

வாழ்க்கை - முடியும் தருவாயில்

வந்து நின்றிருப்போம் !!

* தினேஷ்மாயா *

கை கூடும் நாளை !!

Monday, December 09, 2019



பெருங்கனாக் கண்டேன்..

முயன்றேன்..

தோற்றேன்...

அழுதேன்...

எழுதேன்...

பின் உணர்ந்தேன்...

அழுவதில் இல்லை வெற்றி..

எழுவதிலே உள்ளது வெற்றி..

இன்று எழுந்துவிட்டேன்..

நாளை நிச்சயம் வென்றிடுவேன்....

* தினேஷ்மாயா *

என் கண்கள் வழியே

Saturday, December 07, 2019



அவள் எவ்வளவு பேரழகி தெரியுமா ??

என் கண்கள் வழியே பார்த்தால் மட்டுமே

அவளின் பேரழகு தெரியும் !!

* தினேஷ்மாயா *

புதுக்கவிதை

Thursday, December 05, 2019



புதிதாய் ஒரு கவிதை சொல் என பணித்தாள் !

அவள் முன்

கற்பனைகள் வரண்டு

வார்த்தைகள் வரண்டு

நாவும் வரண்டு...

ஏதும் சொல்ல முடியாமல் நிற்க முடியாமல் -

படக்கென்று சொல்லிவிட்டு சென்றேன்

ஒரு புதுக்கவிதையை !

என் இதழால் -

அவள் தேன் இதழ்களில் !!

* தினேஷ்மாயா *

நான்காம் பால்



வள்ளுவன் சொல்லாத நான்காம் பாலை

இருவரும் படித்து உணர்ந்து புணர்ந்து

அன்பால் உரையெழுதுவோம் வா !!

* தினேஷ்மாயா *

மறுபிறவி



மறுபிறவியில் எனக்கு நம்பிக்கையுண்டு..

உன்னை காண்கையில் இறந்தும்,

உன் கண்ணை காண்கையில் மீண்டும் பிறந்தும்

நொடிக்கு நொடி மறுபிறவி எடுத்துக்கொண்டேதான் இருக்கிறேன்..

* தினேஷ்மாயா *

முள்


முள் குத்தினால் வலிக்குமாமே !

எனக்கேன் வலிக்கவில்லை ?

என்னை குத்தியது - உன்

மோகமுள் !

* தினேஷ்மாயா *

வர்ணம்




தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி:

வேதங்களில் கூறப்படும் நான்கு வர்ணங்கள் யாவை ?

ஆறாம் வகுப்பு மாணவனின் பதில்:
1. சூத்திரா
2. வைசியா
3. ஷத்ரியா
4. பிராமனா

மாணவனின் மதிப்பெண்: பூஜ்ஜியம் !!

ஆசிரியர் சொன்ன காரணம் : நீ எழுதிய வரிசை தவறு. முதலில் பிராமனா வரவேண்டும் கடைசியில்தான் சூத்திரா வரவேண்டும்.

என் மனக்கேள்வி : இங்கும் கூட சூத்திரர்களை மேலே இருக்கவிட மாட்டார்களா !?

* தினேஷ்மாயா *

இதுதான் சமூகம் !

Wednesday, December 04, 2019




குற்றம் சாட்டப்பட்டவரையும்

நம் சமூகம், எப்போதுமே

குற்றவாளியென்றே அழைக்கும்..

* தினேஷ்மாயா *

தீப்பொறி



மங்கையே ...

உருகும் மெழுகாய் இருந்தது போதும்

உரசினால் தீப்பொறிக்கும்

தீக்குச்சியாய் இரு...

* தினேஷ்மாயா *

மழை சிறை



மழை -

நம்மை சிறைப்பிடிக்கிறது

குடைக்குள் !

* தினேஷ்மாயா *

வேர் கிளை

Friday, November 22, 2019




நிலத்தில் நீரில்லாததால்

தன் தாகம் தீர்த்துக்கொள்ள

கிளைகளை வேர்களாய் மாற்றி

வானத்தை நோக்கி செல்கிறதோ

இம்மரம் ?!

* தினேஷ்மாயா *

மேரா நாம் அப்துல் ரஹ்மான்

Thursday, November 21, 2019




எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் !
அன்புள்ள தோழர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் !

ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜ்மானாம்
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜ்மானாம்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..

ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்
இரண்டும் உலகில் தேவை
ஆடும் போதும் நேர்மை வேண்டும்
என்றோர் கொள்கை தேவை
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..

யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..

உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும் !!!

ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜ்மானாம் !
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான் !

படம்: சிரித்து வாழ வேண்டும்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
வரிகள்: புலமைப்பித்தன்
பாடியவர்: டி.எம்.எஸ்.


* தினேஷ்மாயா *

சுதந்திர பறவைகள்

Saturday, November 16, 2019


        நேற்று சாலையில் வருகையில், ஒரு பள்ளிக்கூட பேருந்து ஒன்று என்னை கடந்து சென்றது. அது வேறொரு ஊரிலிருந்து இங்கே சுற்றுலா வந்திருக்கும் பேருந்து. அதெப்படி எனக்கு தெரியும் என்கிறீர்களா ? அந்த பேருந்தில் இருக்கும் மாணவர்கள் அனைவரும் ‘ஓ’வென கத்திக்கொண்டும், ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்ததை என்னால் காண முடிந்தது. அதை காண்கையில் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. இது ஒன்றும் ஒழுங்கீனமான செயல் இல்லை. ஆனால், பள்ளியில் இவர்கள் இப்படி இருக்கமாட்டார்கள், மாறாக இதுபோல் சுற்றுலாக்களில் இவர்கள் அதிகம் துள்ளளோடு இருப்பார்கள். இதன் முக்கிய காரணம் என்னவென்றால், பள்ளியில் இவர்களை அடைத்து வைத்து, இவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள், இதுப்போன்ற தருணங்களில் மட்டுமே இவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் இப்படி செல்வதை சாலையில் செல்லும் மற்ற பயணிகள் இரசிப்பார்கள் என்று சொல்லிட முடியாது. இவர்களுடன் வரும் ஆசிரியர்களும் இவர்களை கட்டுப்படுத்த விரும்புவதில்லை. 

                     கூண்டில் அடைத்துவைக்கும் பறவைகள் திறந்துவிட்டால், வானில் சிறகடித்து சுதந்திரமாய் பறக்கத்தானே செய்யும் ! குழந்தைகளை, மாணவர்களை பள்ளிக்கூடம் என்னும் மனக்கூண்டில் அடைத்துவைத்து இரசிக்கும் இனமாக நாம் மாறிவிட்டோம் என்பதே நிதர்சனம்....

* தினேஷ்மாயா *
                   

கத்தியும் புத்தியும்

Thursday, November 14, 2019




- பகிர்ந்தது

* தினேஷ்மாயா *

அக்கறை

Tuesday, November 12, 2019



நண்பன் எடுத்துரைப்பான்

மனைவி இடித்துரைப்பாள்

இரண்டுமே நம்மீது இருக்கும் அக்கறையே

* தினேஷ்மாயா *

பெண்ணுக்காக..

Saturday, November 02, 2019



பெண்ணுக்காக அடித்துக்கொள்ள கூடாது என்பார்கள்.

ஆனால்,  நாங்கள் அடித்துக்கொள்கிறோம்.

நானுன் என் மனைவியும்!

எங்கள் பெண் குழந்தையை யார்

அதிகம் கொஞ்சுவது என்று ....

* தினேஷ்மாயா *

நம்பிக்கை மட்டுமே !


வாழ்க்கையில் நான் உடைந்து போகும் போதெல்லாம்

நம்பிக்கை மட்டுமே என்னை மீண்டும் மீண்டும் ஒட்ட வைக்கிறது..

* தினேஷ்மாயா *

வெள்ளாட்டு கண்ணழகி

Monday, September 09, 2019



தாநநே தநநேநாநாநா
தாநநே தநநேநாநாநா
தாநநா தாநநா ஓஓ
தாநநா தாநநா ஓஓஓ…….
ஓஓஓஓஓ….

வெள்ளாட்டு கண்ணழகி
வெண்ணக்கட்டி பல்லழகி
ஊரான ஊருக்குள்ள படை எடுத்தா

காணாத கட்டழகி
காட்டுமல்லி செட்டழகி
பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா

வெள்ளாட்டு கண்ணழகி
வெண்ணக்கட்டி பல்லழகி
ஊரான ஊருக்குள்ள படை எடுத்தா

காணாத கட்டழகி
காட்டுமல்லி செட்டழகி
பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா

பேசாமலே என்ன வாட்டி எடுத்தா
கத்தி வீசாமலே பல காயம் கொடுத்தா
வாட்டி எடுத்தா
பல காயம் கொடுத்தா
வாட்டி எடுத்தா
பல காயம் கொடுத்தா

பொண்ணே இல்ல
இவ ரோசா குடம்
கண்ண மூடாம
நான் பார்த்து பாராட்டிடும்
நல்ல காதல் படம்

ஹே பொய்யே இல்ல
இவ கோயில் ரதம்
ஒத்த பார்வைக்கு முன்னால
என்னாகுமோ இந்த சாதி மதம்

ஓ.. நாடு நகரம் அறியா அழக
காட்டுறாலே தினுசா
ஆசை மனச ஹவுஸ்புல்லாக
ஆனேனே நான் சர்க்கஸ்ஸா

வெள்ளாட்டு கண்ணழகி
வெண்ணக்கட்டி பல்லழகி

வெள்ளாட்டு கண்ணழகி
வெண்ணக்கட்டி பல்லழகி
ஊரான ஊருக்குள்ள படை எடுத்தா

காணாத கட்டழகி
காட்டுமல்லி செட்டழகி
பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா

தாநநே தநநேநாநாநா
தாநநே தநநேநாநாநா
தாநநா தாநநா ஓஓ
தாநநா தாநநா ஓஓஓ…….
ஓஓஓஓஓ….

ஜில்லாவுக்கே அவ மேல கண்ணு
வந்து முன்னால நின்னாலே
நான் தேடுறேன் என்ன காணோமுன்னு

ம்ம்.. எல்லாருக்கும் அவ ஹீரோயினு
சந்து பொந்தெல்லாம் வில்லன்கள் நின்னாலுமே
லவ்வ காப்பேன் நின்னு

ஓஓஓ.. ஊரும் தெருவும் கெடயா கெடக்க
யார பாப்பா திரும்பி
கோண சிரிப்பில் கேனயன் ஆகி
போனேனே நான் குழம்பி

வெள்ளாட்டு கண்ணழகி
வெண்ணக்கட்டி பல்லழகி
ஊரான ஊருக்குள்ள படை எடுத்தா

காணாத கட்டழகி
காட்டுமல்லி செட்டழகி
பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா

பேசாமலே என்ன வாட்டி எடுத்தா
கத்தி வீசாமலே பல காயம் கொடுத்தா
வாட்டி எடுத்தா
பல காயம் கொடுத்தா
வாட்டி எடுத்தா
பல காயம் கொடுத்தா

படம்: மெஹந்தி சர்க்கஸ்
இசை: சீன் ரோல்டன்
வரிகள்: யுகபாரதி
குரல்: சீன் ரோல்டன்

* தினேஷ்மாயா *

வெயில் மழையே




வெயில் மழையே
மின்னல் பூவே நீ……
எங்கே ?

மௌனபேச்சு நீ
கொஞ்சம் பேசிடு
உன் வார்த்தை தேடி
பயணம் போகுதே

மேகம் மூடுதே..
காலம் ஓடுதே..
என் பாதை போகும்
தூரம் நீளுதே..

வெயில் மழையே
மின்னல் பூவே நீ……
எங்கே ?

வெயில் மழையே
மின்னல் பூவே நீ……
எங்கே ?

ஆயிரம் முகங்கள்
பார்க்கிறேன் நாளும்
உன் முகம் எங்கே
பார்ப்பேனோ ?
நிலம் எங்கும் பறந்து
திரிகிறேன்நானும்
உன்னிடம் வந்து சேர்வேனோ ?

செல்ல குளிரே
தங்க தனலே
அந்தி ஒளி நீயடி
ஒற்றை கனவே
சுற்றும் நிலவே நீதானே

என்னருகில் வந்த இசை
தூரம் தள்ளி போனதடி
அந்த திசை தேடி தேடி
உயிரும் தேயுதே

மௌனபேச்சு நீ
கொஞ்சம் பேசிடு
உன் வார்த்தை தேடி
பயணம் போகுதே

மேகம் மூடுதே..
காலம் ஓடுதே..
என் பாதை போகும்
தூரம் நீளுதே..

வெயில் மழையே
மின்னல் பூவே நீ……
எங்கே ?

வெயில் மழையே
மின்னல் பூவே நீ……
எங்கே ?

படம்: மெஹந்தி சர்க்கஸ்
இசை: சீன் ரோல்டன்
வரிகள்: யுகபாரதி
குரல்: விக்னேஷ் ஈஷ்வர், சுஷா

* தினேஷ்மாயா *

கோடி அருவி கொட்டுதே



கோடி  அருவி கொட்டுதே அடி எம்மேல
அத தேடி உசுர ஒட்டுதே தினம் உன்னால
கோடி  அருவி கொட்டுதே அடி எம்மேல
அத தேடி உசுர ஒட்டுதே தினம் உன்னால

மலைக்கோவில் விளக்காக ஒளியா வந்தவளே
மனசோட துளபோட்டு எனையே கண்டவளே
கண்ணமூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ணமூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

கோடி  அருவி கொட்டுதே அடி எம்மேல
அத தேடி உசுர ஒட்டுதே தினம் உன்னால

நள்ளிரவு ஏங்க நம்ம இசைஞானி
மெட்டமைச்ச பாட்டா பொங்கி வழிஞ்சேன்
பொட்டலில வீசும் உச்சிமல காத்தா
புன்னைகையில் ஏன்டா என்ன புளிஞ்ச
சாராயம் இல்லாம சாஞ்சேன்டி கண்ணால
கூழாங்கல் சேராதோ செங்கல்ல
அடகாத்து உனநானும் சுகமா வெச்சுக்குறேன்
உனசேர பொறந்தேன்னு என நான் மெச்சுக்குறேன்

கண்ணமூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ணமூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

உன்ன நெனெச்சாலெ  செந்தமிழ போல
இந்தி மொழித்தாண்டி நெஞ்சத்தொடுதே
என்ன இது கூத்து சுண்டு வெரல் தீண்ட
பொம்பளய போல வெக்கம் வருதே
ராசாவே உன்னால ஆகாசம் மண்மேல
உன் ஜோடி நான்தானே பொய்யில்ல

கோடி  அருவி கொட்டுதே அடி எம்மேல
அத தேடி உசுர ஒட்டுதே தினம் உன்னால
கோடி  அருவி கொட்டுதே அடி எம்மேல
அத தேடி உசுர ஒட்டுதே தினம் உன்னால

மலைக்கோவில் விளக்காக ஒளியா வந்தவளே
மனசோட துளபோட்டு எனையே கண்டவளே
கண்ணமூடி கண்ட கனவே…..
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே…..
தந்நா நாநா தந்நா நாநா
தந்நா நாநா தந்நா நாநா

படம்: மெஹந்தி சர்க்கஸ்
இசை: சீன் ரோல்டன்
வரிகள்: யுகபாரதி
குரல்: பிரதீப் குமார், நித்யஸ்ரீ மகாதேவன்p

* தினேஷ்மாயா *

புவியீர்ப்புவிசை

Thursday, August 15, 2019


தேவதைகள் ஊஞ்சலாட வேறெதுவும் வேண்டா..

புவியீர்ப்புவிசை போதும்..

* தினேஷ்மாயா *

ஆத்மார்த்த விலங்கு


     சுயநலமில்லா பெருவாழ்வு அனைவருக்கும் சாத்தியமில்லை. பிறர் நலன் கருதி வாழ்வதே இயற்கையின் பண்பு. இயற்கை என்றுமே தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாது. இந்த பண்பு இயற்கையிலேயே மனிதனிடத்தில் இருந்ததுதான், ஆனால் இப்போது இந்த பண்பை மனிதனிடத்தில் காண்பது அரிதாகிவிட்டது. ஒவ்வொரு மனிதனும் ஒரு கை ஓசை-யிலேயே கவனம் செலுத்துகிறான். கூடிவாழும் பழக்கமும், பொதுநலன் கருதி வாழ்வதும் குறைந்துவருகிறது. இந்த விஷயத்தில், விலங்குகள் எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றுகிறது.

மனிதன் ஒரு சமுதாய விலங்கு

விலங்கு ஒரு ஆத்மார்த்த மனிதன் !!

* தினேஷ்மாயா *

அன்பும் பண்பும்


திகட்டாத அன்பு

திட்டாத பண்பு

வேறென்ன வேண்டுமெனக்கு !

* தினேஷ்மாயா *


காயம்


அன்பு..

பல நேரங்களில் காயங்களை தேற்றும்..

சில நேரங்களில் காயங்களை அள்ளித்தரும்..

* தினேஷ்மாயா *

முக்தி

Saturday, August 10, 2019


உன் புன்சிரிப்பே போதுமே..

முக்தி இப்பிறவியிலேயே கிட்டுமே !!

* தினேஷ்மாயா *

செல்(வ)ல மகள்


அவள் செல்லமாய் கோபித்துக்கொள்கையில்

அவளிடம் வேண்டுமென்றே மன்னிப்பு கேட்டு

மன்றாடுவதில் எப்போதும் என் மனம் இலயித்திருக்கும்...

* தினேஷ்மாய

தங்கமயில்


தோகை விரித்தாடும் ஆண்மயில்..

தோகையில்லா பெண்மயில்..

ஆனாலும் நீயொரு தங்கமயில் !!

நீயே பேரழகு !!

* தினேஷ்மாயா *

திரும்ப திரும்ப


என்னை திரும்பி பார்க்கவைத்தவளும் நீதான்

உன்னை திரும்ப திரும்ப பார்க்கவைத்தவளும்

நீ மட்டும்தான் !

* தினேஷ்மாயா *

அடைக்கும் தாழ்


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?

- வள்ளுவன்

* தினேஷ்மாயா *

அறுசுவை இதழ்

Friday, August 09, 2019




அறுசுவைகளில் உயர்ந்த சுவையான

இனிப்பு சுவையை -

உன் இதழ்களில் ஒளித்து வைத்திருக்கிறாய்.

ஆனால், அதை ஏன்

எனக்கு தராமல் மறைத்து வைத்திருக்கிறாய் ?

* தினேஷ்மாயா *

நீ கொடுக்காத முத்தம்





மேகம் கீழிறங்கி வந்து

உன்னை - முத்தமிட்டு

என்னையும் உரசிவிட்டு செல்கிறது..

* தினேஷ்மாயா *

தீர காதல் காண கண்டேனே

Saturday, August 03, 2019



தீர காதல் காண கண்டேனே
அதில் தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே

கனவே நனவாய் எழுந்தாயே
மனமே இறகாய் பறந்தாயே

தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா

சுறு சுறு சுறு அணிலை
எந்தன் வீட்டினில் அனுமதிப்பேன்
சிறு சிறு சிறு உணவாய்
முழு பிரியங்கள் சமைத்து வைப்பேன்

அடுப்பறையினில் பரவும்
புது வெளிச்சத்தை பரிசளிப்பேன்
அருட்பெருஞ்சுடர் ஒளியில்
தனி தனிமையை ரசித்திருப்பேன்

நேற்றின் வானம் பூனை போலே
ஓடி ஒளிகின்றதே
ஈசி சாரில் சாய்ந்து கொண்டு
காலம் சிரிக்கின்றதே

வாழ்க்கை வந்து வீடும் வந்ததே
என்தேக்கம் செங்கல் தோற்றம் கொண்டதே


தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா

அடிக்கலையை அழைத்து
அதை ரசித்திட அடம் பிடிப்பேன்
சுவர்க்கோழியின் ஒலியை
பெரும் இசையென லயித்திருப்பேன்

தரை விழுகிற ஒளி மேல்
சிறு நிழலென படுத்திருப்பேன்
நரை விழுகிற வரையில்
இந்த அறைகளை ரசித்திருப்பேன்

தூறல் யாவும் தீர்ந்த போதும்
ஈரப்பதம் உள்ளதே
காலம் யாவும் காண காண
காட்சியாகின்றதே

காத்திருப்பில் ஜீவன் உள்ளதே
என் ஜீவன் வந்து வாசல் நின்றதே

தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா

தீர காதல் காண கண்டேனே
அதில் தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே


படம்: மான்ஸ்டர்
வரிகள் : கார்த்திக் நேத்தா
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
குரல்: சத்யபிரகாஷ்

நரை


நரை - சிலருக்கு மூப்பின் அடையாளம்

சிலருக்கோ அது மனமுதிர்ச்சி !

* தினேஷ்மாயா *