2010-ம் ஆண்டு நான் வாங்கிய ”பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்” நூலை இன்று வாசிக்க எடுத்தேன். அதிலிருந்து, என் மனம் கவர்ந்த சில வரிகளை இங்கே பகிர விரும்புகிறேன்.
இவரின் மொழி ஆளுமையும், புலமையும், சமூக அக்கறையும் இவர்தம் பாடல்களில் வழிந்தோடுகிறது. என்னை நனைத்த சில வரிகளை இனிவரும் சில பதிவுகளில் பகிர்கிறேன்.
“ பக்த ஜனங்கள் கவனமெல்லாம் தினமும் கிடைக்கும் சுண்டலிலே..
பசியும் சுண்டல் ருசியும் போனால் பக்தியில்லே பஜனையில்லே..”
இன்றும் கூட, பல கடைநிலை மாந்தர்கள் கோயிலை நோக்கி படையெடுக்க அங்கே கிடைக்கும் சுண்டலும் புளியோதரையும்தானே காரணமாய் இருக்கிறது. பக்தி என்பதி வெளி போர்வையாகவும், பசியே உண்மை முகமாகவும் இருக்கும் மனிதர்களின் உணர்வை வெளிப்படுத்தும் வரிகளாக இவை எனக்கு தெரிகின்றது.\
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment