“நேசனைக் காணா இடத்தில் நெஞ்சு ஆரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே, வாச
மனையாளைப் பஞ்சணையில், மைந்தர் தமை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்”
- ஔவையார்
பொருள்:
நண்பனை அவன் இல்லாதபோது பாராட்டவேண்டும். ஆசானை எல்லா இடத்திலும்
பாராட்டலாம். அவர் இருக்கும் போதும் பாராட்டலாம், இல்லாதபோதும் பாராட்டலாம். மனைவியை
படுக்கையறையில் மட்டுமே பாராட்டவேண்டும். மகனை மனதில் மட்டுமே பாராட்டவேண்டும். வேலையாளை
அவன் வேலை முடிந்தவுடன் தான் பாராட்டவேண்டும்.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment