விழியிலே மணி விழியில்

Thursday, January 24, 2019

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்

ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்

கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
பா பா பா பா…னா னா னா னா

காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய என் பேரை உச்சரி

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்

திரைப்படம்: நூறாவது நாள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

* தினேஷ்மாயா *

0 Comments: