எனக்கு இரு முரண்பட்ட பழக்கங்கள் இருக்கிறது. ஒன்று, நிறைய புத்தகங்கள் படிப்பேன். தமிழ், ஆங்கிலம் எதுவானாலும், சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து படிப்பேன். இரண்டு, எந்த புத்தகமானாலும் பாதியோடு படிப்பதை நிறுத்திவிடுவேன். ஆனால், இந்த இரண்டாவது பழக்கத்தை நான் இன்றிலிருந்து கைவிடுகிறேன். இனி எந்த ஒரு புத்தகத்தை எடுத்தாலும் அதை முடித்துவிட்டுதான் அடுத்த புத்தகத்தை படிக்க வேம்டும் என்று ஒரு குறிக்கோள் கொண்டுள்ளென்.
என் அலுவலகத்தில் நூலகம் இருக்கிறது. எனக்கு என் அலுவலகத்தில் மிக பிடித்த விஷயம் இதுதான். ஒரு அரசு அலுவலகத்தில் நூலகம் வைத்திருப்பது. மதிய உணவு இடைவெளியில், அங்கு செல்வேன். நேற்று நூலகத்தில் இருந்து, ஓஷோ அவர்கள் எழுதிய " ஒரு கோப்பைத் தேநீர்" புத்தகத்தை எடுத்து வந்தேன். கொஞ்சம் தத்துவ அலைகள் அதிகமாக அடிக்கும்படியான புத்தகம்தான். இந்த புத்தகத்தை நேற்றே படிக்க தொடங்கிவிட்டேன். முடித்துவிட்டு இப்புத்தகத்தை பற்றி பகிர்கிறேன்..
இந்நூலில் இருந்து ஒரு பக்கம்.. உங்கள் பார்வைக்கு..
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment