மழை நின்ற பின்பும்..

Monday, July 17, 2017


மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்


நீர் துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை
வானும் இணைந்து நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பனி துளி கலைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா


மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்


கண்ணிமைகள் கை தட்டியே
உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நான் இருந்தும்
உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு



மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

படம் : ராமன் தேடிய சீதை
இசை : வித்யா சாகர்
பாடியவர் : கல்யாணி

இன்று அதிகாலை, கோவை இரயில் நிலையத்தில் இருந்து வீடு வரும் வழியில் பேருந்தில் இந்த பாடல் ஒலித்தது. கேட்க சுகமாக இருந்தது. பாடலை பதிவிறக்கம் செய்து கேட்டேன். வரிகள் அத்துனை இனிமை. என் மனதிற்கு இந்த தருணத்தில் தேவையான வரிகளை போட்டு எழுதிய பாடல்போல நான் உணர்தேன். படத்தின் தலைப்பை பார்த்தேன். ராமன் தேடிய சீதை ! அட இதுவும் கூட, என் மனதின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு ஏற்றார் போல இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டு உள்ளூர மகிழ்ந்தேன்.. 


* தினேஷ்மாயா *

0 Comments: