சமீபகாலமாக எனக்கு ஒரு சிந்தனை. திருமணம் செய்த பிறகு, இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வது பெரும்பாலான நம் இந்தியர்களின் எண்ணம். இதில் தவறேதும் இல்லை என்றாலும், பெருகிவரும் மக்கள்தொகையை மனதில் கொண்டு, ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்ளலாம் என அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. நான் என்ன நினைக்கிறேன் என்றால், இரண்டு குழந்தைகள் தானே உங்களுக்கு வேண்டும். ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளுங்கள். ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கும் இரண்டு குழந்தைகள் என்றாச்சு, ஒரு அநாதை குழந்தைக்கும் அம்மா அப்பா கிடைச்சாச்சு. இதற்கு நிச்சயம் பெரிய மனசு வேண்டும். இதுநாள் வரையில், திருமணத்திற்குப்பிறகு இரண்டு குழந்தைகள் என்ற நினைப்போடுதான் நானும் இருந்தேன். இந்த ஞானஒளி பிறந்தபிறகு, வரப்போகும் என்னவளிடம் என் கருத்தை தெரிவித்து, ஒரு குழந்தை பெற்றெடுத்து, ஒரு குழந்தையை தத்தெடுத்து, ஒரு எடுத்துக்காட்டாய் இருக்க விரும்புகிறேன். இதை மற்றவர்களும் பின்பற்றினால், மக்கள்தொகையையும் கட்டுப்படுத்தலாம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு வாழ்க்கையும் கொடுக்கலாம். சிந்தியுங்கள் !!
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment