சமீபத்தில் எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் ஒரு விவாதம் வந்தது. ஒரு கடையில் ஆங்கில வார்த்தைகள் சிலவற்றை தவறாக எழுதியிருந்தார்கள். அதற்கு அவர் கேலியாக சிரித்தார். ஆங்கில வார்த்தையை தவறாக எழுதியிருக்கிறார்கள் பாருங்கள் என்று சொன்னார். நான் சொன்னேன், இதில் என்ன தவறு இருக்கிறதென்று. அதற்கு அவர் என்னிடம் கேட்டார், சரியாக ஆங்கில வார்த்தையை எழுத தெரிந்தால் மட்டுமே பயன்படுத்தலாமே, ஏன் தவறாக உச்சரிக்க வேண்டும், ஏன் தவறாக எழுத வேண்டும் என்றார். நான் சொன்னேன், ஆங்கிலம் என்பது நமது பூர்வீக மொழி அல்ல. அந்நியர்களின் மொழி, அவர்கள் கற்றுத்தந்த மொழி. அதை நாம் சரியாக பின்பற்றியே ஆகவேண்டும் என்று எந்தவொரு கட்டாயமும் இல்லை. இங்கு பலருக்கு தங்கள் தாய்மொழியையே சரியாக எழுதவும், படிக்கவும் தெரியாது. தமிழின் சிறப்பு ‘ழ’கரத்தை எத்தனைப்பேர் சரியாக உச்சரிக்கிறோம் சொல்லுங்கள். ஆங்கிலேயர்கள், அவர்களின் வசதிக்கு ஏற்ப தமிழ் சொற்களையும், நமது ஊர் பேர்களையும் மாற்றிக்கொண்டார்கள். அப்படியிருக்க, இந்தியர்கள் நாம், அவர்களின் மொழியை நமது வசதிக்கேற்ப மாற்றினால் அது ஒன்றும் கொலைக்குற்றம் ஆகாது. ஆனாலும், எந்த மொழியை கற்கும்போதும், கசடற கற்க வேண்டும் என்றேன்...
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment