ஜோ மல்லூரி அவர்கள் எழுதிய புத்தகம். அவர் எழுத்தில் நான் வாங்கிய இரண்டாவது புத்தகம்.
இந்த புத்தகத்தில் இருந்து என்னை கவர்ந்த வரிகள் சில..
- காதல் - பேச முடியாமல் ஏங்கும்!
காமம் - பேசி முடிந்தாலும் ஏங்கும்! - அவள் பிறந்தபிறகு
உலகில் அழகு தீர்ந்துப்போனது என்ற
எனது கனவுகளில்
யாரும் கல்லெறிந்து விடாதீர்கள் - பிரம்ம வரம்பை மீறிய பிரம்மாண்டமே!
- முன்பெல்லாம்
காலையில்
இயங்குவதற்காகப்
படிப்பேன்.
மாலையில்
மயங்குவதற்காகக்
குடிப்பேன்.
இப்போது
இரண்டையும்
விட்டுவிட்டேன்.
அதுதான் - நீ இருக்கிறாயே ! - அடடா,
ஐந்தடி உயரத்தில் பூகம்பம்! - அன்று -
கல்லூரி வாழ்க்கையின்
கடைசி நாள் !
உனது ஆட்டோஃகிராபில்
நான் எழுதிய வரிகள் !
‘ நீ முந்திப்போனால்
என் காதருகே வந்து
சொல்லி விட்டுப் போ !
நான் முந்திப் போனால்
என் கல்லறைக்கு ஒருமுறை
வந்து விட்டுப் போ!’ - நீ காதலியாக இருந்தால்
இடைவெளி தேவையில்லை
நீ தோழியாக இருந்தால்
இடைவெளி பிரச்சனையில்லை. - என்னைக் காதலித்துக்
கொண்டேயிரு!
எனக்கு
மரணம் கூடத் தெரியாது!
காதல் கவிதைகளின் தொகுப்பு. பல இடங்களில் வார்த்தைகளால் விளையாடினாலும், சில இடங்களில் மனதில் வார்த்தைகள் ஏதுமின்றியே கவிதையின் உணர்வை என்னுள் புகுத்திவிடுகிறார்..
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment