நான் திண்டுக்கல்லில் இருந்தபோது வைகறை பதிப்பகத்தில் “ஆகஸ்ட் 26” என்னும் புத்தகத்தை வாங்கினேன். அந்த தலைப்பு அன்னை தெரசாவின் பிறந்ததினத்தை குறிக்கும். என் அக்காவிற்கும் அதே நாள் பிறந்தநாள் என்பதால் இந்த புத்தகத்தையும் நான் படிக்கு முன்னமே அக்காவிற்கு அன்பளிப்பாய் கொடுத்துவிட்டேன். அந்த புத்தகத்தையும் புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.
தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய இந்நூலில் இருந்தி சில கவிதைகள்..
- கோவிலில் இந்து
தேவாலயத்தில் கிறித்தவர்
மசூதியில் இஸ்லாமியர்
எங்கே மனிதர்? - லெட்சுமி என்றால்
பணம் தானே!
பணக்காரர்களின்
படுக்கையறைகளில் மட்டும்
அதிகம் புரளும்
விலைமகளுக்கும் இவளுக்கும்
என்ன வித்தியாசம்... - மனிதநேயத்திற்காக
உலக அரங்குகளில்
இந்தியாவிற்கு பற்பல விருதுகள்!
மனதில் கொள்ளுங்கள்...
இன்னும் இந்தியாவில்
மனிதர்கள் மலம் அள்ளுகின்றனர்! - “இங்கே செருப்புகள்
பாதுகாக்கப்படும்”
செருப்புக்குக்கூட
பாதுகாப்பு இல்லாத
“சுதந்திர இந்தியா”! - பேச்சுப் போட்டிகளுக்காக
மட்டுமே பயன்படும்
பாரதி...
மதிப்பெண்களுக்காக
மட்டுமே பயன்படும்
வள்ளுவன்...
ஆகஸ்ட் 15-இல்
மட்டுமே பயன்படும்
தேசிய கீதம்...
இதை நினைத்து
அழ மட்டுமே பயன்படும்
எழுத்தாளியின் பேனா ! - சந்தோஷத்தை
சம்பாதிப்பதென்பது
மிகக் கடினம்...
ஏனெனில்
பிறருக்காக அதை
நீ
செலவழித்தால் மட்டுமே
அது உன்னை
வந்து சேரும்!
முற்போக்கான சிந்தனையையும் அன்பின் தேவையையும் அருமையாக கவிதையாய் வடித்திருக்கிறார் திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள்.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment