தரம் குறைகிறது

Thursday, October 31, 2013


செல்வம் அதிகம் சேரும்போது,

மனிதனின் பண்பு, தரம்

குறைந்து விடுகிறது..!

நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

புது உறவு


நெருங்கி பழகிய ஒருவரை

தொலைத்து பின்னர்

உறவைப் புதுப்பித்துக்க

முயலும் போது,

அவர் அதே ஆளாக நமக்கு

திரும்பக் கிடைப்பதில்லை...!

நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

இதயம் வலித்தது



நீ என் கைகளை உதறி விட்டு

சென்ற போது வலித்தது,

கைகள் அல்ல,

என் இதயம்.. !

நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

மேலானவர்கள்



பிடிக்கவில்லையென்றால்

ஒப்புக்காக

நடிப்பதைவிட்டு ஒதுங்கி

நிற்பவர்கள்

மேலானவர்கள்..!

நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

தெரிந்துக்கொள்


  1. நீ வேண்டும் முன் - நம்பு
  2. நீ பேசும் முன் - கவனி
  3. நீ செலவு செய்யும் முன் - சம்பாதி
  4. நீ எழுதும் முன் - யோசி
  5. நீ விலகும் முன் - முயற்சி செய்
  6. நீ இறக்கும் முன் - வாழ்ந்து பார் !!
நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

ஏற்றுக்கொள்


ஒன்றை

ஏற்றுக்கொண்டால்

இன்னொன்றை

இழந்தே ஆக

வேண்டியிருக்கிறது.. !

நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

வெற்றி தோல்வி


வெற்றி பெற்றவன்

சாதனை படைப்பான்..!

தோல்வி அடைந்தவன்

சரித்திரம் படைப்பான்..!

நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

கொடுமையிலும் கொடுமை


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

Wednesday, October 30, 2013



என்னருமை வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்..

* தினேஷ்மாயா *

ஏன் வெட்கப்படுவதில்லை




   நாம் ஆங்கிலத்தில் பேசும்போது, ஒரு வார்த்தைக்கூட தமிழ் வார்த்தை கலந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். அப்படியே ஆங்கிலம் பேசும்போது நமக்கே தெரியாமல் தமிழ் வார்த்தை வந்துவிட்டால் அதற்காக சிறிதேனும் வெட்கப்படுவோம்.

ஆனால், தமிழில் பேசும்போது ஒரு வார்த்தைக்கூட ஆங்கிலம் கலக்காமல் பேச வேண்டும் என்று ஏன் நம் மனம் எண்ணுவதில்லை ? அப்படியே ஆங்கில வார்த்தை கலந்துவந்தாலும் அதற்காக ஏன் எவரும் வெட்கப்படுவதில்லை ?

- நானும் என் நண்பனும் உரையாடிய பொழுது உதிர்ந்த எண்ணம் இது -

* தினேஷ்மாயா *

காதல் திருமணங்கள் வளரட்டும்



காதல் திருமணங்கள் வளரட்டும்...

               - தந்தை பெரியார்


* தினேஷ்மாயா *

வாழ்வின் அருமையான தருணங்கள்


 நாம் காதலில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் வாழ்வின் அருமையான தருணங்கள்.

BEING IN LOVE IS A GREAT FEEL !

* தினேஷ்மாயா *

வாய்மையே வெல்லும்


லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருக்கும்போது பல கஷ்டங்களை, வலிகளை சந்திக்க நேரிடும். ஆனால் அந்த வலியிலும் ஒரு நிம்மதி இருக்கும். நேர்மையாய் இருப்பவனை எவரும் எதுவும் செய்துவிட முடியாது.

ஆனால் லஞ்சம் வாங்கி எவ்வளவு சேர்த்துவைத்தாலும் நிம்மதியாய் இருக்கவே முடியாது. அந்த நிம்மதி சென்று சொல்லிக்கொள்ளு வாழ்க்கையில் நிச்சயம் வலி இருக்கத்தான் செய்யும்..

@ நான் அரசாங்க வேலைக்கு என்று வந்தேனோ அன்றே இந்த வாசகத்தை என் மனதில் எழுதிவைத்துக்கொண்டேன். @

- வாய்மையே வெல்லும் -

* தினேஷ்மாயா *

ஆதி திராவிடர்



  நம் இந்திய மண்ணில் ஆரியர்களின் படையெடுப்பிற்கு பின்னர்தான் இந்தியாவின் சரித்திரம் பெரும் மாற்றங்களை கண்டுள்ளது. ஆனால் அவர்களின் வருகைக்கு முன்னரே நம் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் திராவிட இன மக்கள். ஆதி திராவிடர்கள் பெரும்பாலும் நம் முன்னோர்களை குறிக்கும். இந்தியர்கள் முதலில் பழங்குடியின மக்களாகத்தான் இருந்தனர். திராவிட இனம்தான் நம் மண்ணின் தனித்துவம் வாய்ந்த இனம். ஆரியர்களின் இனம் நம் இனத்தோடு கலந்தது. பின்னர் வந்த மேலை நாட்டவர்களின் இனமும் நம் இனத்தோடு கலந்து இன்னும் பல இனங்களின் கலப்படம்தான் இன்று நம் இந்தியாவில் இருக்கிறது. ஆனால் இன்னமும் நம் இந்தியாவில் பழங்குடியின மக்கள் இருக்கிறார்கள். இன்றளவும் தங்கள் இனத்தின் கலாச்சாரத்தை கட்டி காப்பாற்றுகிறார்கள்.

   இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், தற்கால இந்தியா எவ்வளவோ வளர்ச்சியை கண்டாலும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் இன்னும் பாதாளத்திலேயேதான் இருக்கிறது. அரசாங்கமும் எவ்வளவோ கோடியை அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்த செலவு செய்தாலும் அது அவர்களுக்கு முழுவதுமாய் சென்று சேர்வதில்லை. ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைக்கொள்வதுமில்லை.

     ஆனால் கலாச்சாரத்தில் உயர்துவிட்டதாய் கருதும் மக்கள் இவர்களை ஒரு காட்சிப்பொருளாய் பார்ப்பதுதான் வேதனையளிக்கிறது. இவர்களைவைத்து சுற்றுலா என்னும் பெயரில் வியாபாரம் நடக்கிறது. இதை அண்மையில் உச்ச நீதிமன்றமும் கண்டித்தது. இருப்பினும் நம் மண்ணின் பூர்வீக மக்களை நம் மக்களே மதிக்காமல் இருப்பது வேதனையாய் இருக்கிறது. அவர்களும் இந்தியர்கள்தான் அவர்கள்தான் உண்மையான இந்தியர்கள் என்பதை உணருவோமாக.

* தினேஷ்மாயா *

கனவெல்லாம் நீதானே



கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்..
நினைவெல்லாம் நீதானே, கலையாத யுகம் சுகம் தானே..
பார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அணைக்கிறதே..
அந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைக்கின்றதே..

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே, கலையாதே யுகம் சுகம் தானே..

சாரல் மழை துளியில், உன் ரகசியத்தை வெளிப்பார்த்தேன்..
நாணம் நான் அறிந்தேன், கொஞ்சம் பணி பூவாய் நீ குறுக..
எனை அறியாமல் மனம் பறித்தாய், உன்னை மறவேனடி..
நிஜம் புரியாத  நிலை  அறிந்தேன் , எதுவரை சொல்லடி..
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்..

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்..
நினைவெல்லாம் நீதானே, கலையாதே யுகம் சுகம் தானே..

தேடல் வரும் பொழுது, என் உணர்வுகளும் கலங்குதடி..
கானலாய் கிடந்தேன், நான் உன் வரவால் விழி திறந்தேன்..
இணை பிரியாதே நிலை பெறவே, நெஞ்சில் யாகமே..
தவித்திடும் போது ஆறுதலை உன்மடி  சாய்கிறேன்
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்..

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்..
பார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அணைக்கிறதே..
அந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைக்கின்றதே..

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்..
நினைவெல்லாம் நீதானே, கலையாத யுகம் சுகம் தானே..

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்..
பார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அணைக்கிறதே..
அந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைக்கின்றதே..

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்..

 From a Private Album By Dilip Varman..

சில தினங்களுக்கு முன்னர் என் நண்பர் இந்த பாடலை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். நான்கு நாட்களில் 400 முறை கேட்டிருப்பேன் இந்த பாடலை. மனதுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வரிகள் வாட்டி வதைக்கிறது. இசையும் குரலும் அனைத்தும் அருமை. பல நாட்களுக்கு பிறகு மனதையும் உயிரையும் வருடும் பாடல்.

http://download.tamiltunes.com/songs/Private%20Albums/DhilipVarman/Kanavellam%20Neethane%20-%20TamilWire.com.mp3

மேலே இருக்கும் இணைப்பில் இந்த பாடலை பதிவிறக்கம் செய்து கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

* தினேஷ்மாயா *

தன்னந்தனியாய் !!


என் வலைப்பக்கத்தை ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. என்னுடன் அவள் இருந்த போது என் வலைப்பக்கம் தினம் தினம் நிரம்பிவழிந்தது. ஆனால் அவள் பிரிந்து சென்ற சில மாதங்கள் என் வலையை சரிவர பிண்ண என்னால் முடியவில்லை. ஆனால் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன். இனி என் வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். என்னை தடுக்க இனி எதுவும் இல்லை. தன்னந்தனியாய் இருக்கிறேன். அவள் பிரிந்து சென்ற ஒன்றரை ஆண்டுகள் ஆகியபின்னரும் என் வலையில் சென்ற வருடத்தைவிடவும் அவள் என்னுடம் இருந்தபோது பதிவு செய்ததைவிடவும் இந்த வருடம் அதிகம் பதிவு செய்திருக்கிறேன். இதுவே போதும் என்னால் அவள் இல்லாமலும் என் வாழ்க்கையை என்னால் வழிநடத்தி செல்லமுடியும் என்பதற்கு. வலிகள், நினைவுகள் ஆயிரம் ஆயிரம் வரும் செல்லும். அதற்காக ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருந்தால் எப்படி. வாழ்க்கையைப் பார்த்து நடக்க ஆரம்பித்துவிட்டேன்.

* தினேஷ்மாயா *

வாழ்க்கை

Tuesday, October 22, 2013


வாழ்க்கை கடினமானது தான்..

ஆனால் முடியாதது இல்லை..

நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

என்ன பெயர் ?



     மனிதன் பிறக்கும்போது குழந்தை எனப்படுகிறான். வாழும்போது அவனுக்கு இடப்பட்ட பெயரில் அழைக்கப்படுகிறான். இறந்தபிறகு பிணம் என அழைக்கப்படுகிறான். பிறந்து ஓரிரண்டு வயதுவரை மனிதனை அனைவரும் குழந்தை என அழைக்கிறோம். குழந்தை என்ன செய்யறான், குழந்தை சாப்பிட்டானா இப்படியெல்லாம் அழைக்கிறோம். அதற்குபிறகு இறக்கும்வரை அவனை பெயர் சொல்லி அழைக்கிறோம். இதெல்லாம் இருக்கட்டும். நான் இந்த பதிவை இங்கே எழுத காரணம் மனிதனின் கடைசி பெயர்தான். 

            இன்று ஒரு இரங்கல் செய்தியை கேள்விப்பட்டேன். எட்டாவது படிக்கும் ஒரு சிறுவன் மன அழுத்தத்தின் காரணமாக தன் உடலில் தீவைத்துக்கொண்டு இறந்துவிட்டான் என்று. இதைப்பற்றி நண்பர் ஒருவர் தன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார். BODY-ய எப்ப வீட்டுக்கு கொண்டு வராங்க என்று அவர் பேசியது என் காதில் கேட்டது. அந்த வார்த்தை மனதில் ஏதோ போல ஒலித்தது. இருக்கும் வரை ஒரு மனிதனுக்கு எவ்வளவு விஷயங்கள் நடக்கிறது. அவனை அரசன் என்கிறார்கள், ஆண்டி என்கிறார்கள். அவனவன் இருக்கும் நிலைக்கேற்ப மரியாதை என்ன வணக்கங்கள் என்ன பயம் என்ன பணம் என்ன பதவி என்ன அப்பப்பா.. என்னென்னவெல்லாம் அனுபவிக்கிறான் பாருங்கள் ஒரு  மனிதன். இவ்வளவு இருந்தும், என்னதான் உலகையே தன் காலுக்கு கீழ் வைத்திருந்த ஆட்சியாளனேயானாலும், அவன் இறந்த பின் அவனை அவன் பெயர் சொல்லி அழைக்காமல் பிணம் என்று சொல்லித்தான் அழைக்கிறார்கள். இந்த உண்மை அனைவருக்குமே தெரியும் என்றாலும் அதை ஏற்க மறுத்து இறப்பதற்கு முன் எவ்வளவு ஆட முடியுமோ அவ்வளவு ஆடிவிடுகிறான் மனிதன்.

         நிம்மதியான அமைதியான வாழ்க்கையைத்தான் அனைவரும் வாழ ஆசைப்படுகிறோம். நிம்மதியையும் அமைதியையும் ஏற்படுத்திக்கொள்வது நம் கைகளில்தான் உள்ளது. மற்றவர்க்கு தீங்கு விளைவிக்காமல் நம் வாழ்க்கையை அறநெறிகளுக்கு உட்பட்டு ஒழுங்காய் நடத்தி சென்றாலே நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். அப்படி வாழ்ந்து இறக்கும்போது நம்மையும் பிணம் என்றுதான் சொல்வார்கள், ஆனால் அதற்கும் மேல் ஒரு வார்த்தை சொல்வார்கள். 

“நல்ல மனுஷன்பா...”

* தினேஷ்மாயா *

இஸ்திரி ஏன் செய்யறோம்

Monday, October 21, 2013


      என் சிறு வயதில் என் அப்பா துணிகளை நான் தான் இஸ்திரி செய்வேன். என் அம்மா எனக்கு சிறுவயதிலேயே இஸ்திரி செய்வது எப்படி என்று சொல்லிகொடுத்தாச்சு. இன்றுவரை என் துணிகளை நான்தான் இஸ்திரி செய்துவருகிறேன். இன்று காலை இஸ்திரி செய்யும்போது என் சிறுவயது நினைவு லேசாக எட்டிப்பார்த்தது. 

    சித்திரை வெயில் காலம் அது. அப்போது அப்பாவின் துணியை இஸ்திரி செய்யச்சொல்லி அம்மா கொடுத்தார்கள். நான் சொன்னேன், இதுதான் வெயில் காலமாச்சே இப்போ எதுக்கு இஸ்திரி செய்யனும்னு கேட்டேன். உடனே அம்மா எதுக்கு நாம துணியை இஸ்திரி செய்து அணிகிறோம் என்று தெரியுமா என்றார்கள். நான் உடனே, குளிர் காலத்தில் இஸ்திரி செய்து அணிந்தால் கொஞ்சம் இதமாக இருக்குமே என்றுதான் அப்படி செய்கிறோம் என்றேன். அம்மா சிரித்துவிட்டு, இல்லப்பா, நாம் துணியை துவைக்கும்போது நிறைய சுறுக்கங்கள் ஏற்படும். அதை சரி செய்யவே நாம் துணியை இஸ்திரி செய்து அணிகிறோம் என்றார். 

     அந்த நிகழ்வை நினைத்து இன்று காலை சிரித்துக்கொண்டேன். அவ்வளவு வெகுளியாய் இருந்திருக்கிறேன் என்று..

* தினேஷ்மாயா *

என் தேசம் என் மக்கள்


     பரப்பளவில் இந்தியா உலகின் ஏழாவது பெரிய நாடு. மக்கள் தொகையில் உலகளவில் இரண்டாவது பெரிய நாடு. இதை வாக்கியமாக படிப்பது சுலபம். ஆனால் உண்மையில் எண்ணிப்பாருங்கள். உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 18 விழுக்காடு இந்தியாவில் வாழ்கிறார்கள். இவ்வளவு பெரிய பரந்து விரிந்த நாட்டில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுணர்வுடன் இருக்கின்றனர் என்கிற கருத்து நம் அனைவரின் மனதிலும் இருக்கிறது. ஆனால் நிஜமாகவே நம் அனைவர் மனதிலும் இந்த ஒற்றுமையுணர்வு இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். தமிழன், மலையாளி, வடஇந்தியன், பஞ்சாபி இப்படி பலவாறாக பிரிந்து கிடக்கிறோம். 

     மதுரையில் இருப்பவன் பிழைப்புத்தேடி பெரும்பாலும் சென்னைக்கும், திரிச்சூரில் இருப்பவன் திருவனந்தபுரத்துக்கும், குண்டூரில் இருப்பவன் ஐதரபாத்துக்கும் வடஇந்தியர்கள் புதுடில்லிக்கும் படையெடுக்கின்றனர். ஆனால், புதுடில்லியில் இருக்கும் ஒருவன் ஏன் தென்னிந்தியாவிற்கு பிழைப்புத்தேடி வருவதில்லை, நம் தென் தமிழக மக்கள் ஏன் வடகிழக்கு பகுதிக்கு பிழைக்க செல்வதில்லை. என்னதான் இந்தியராக இருந்தாலும் மனதளவில் நம் அனைவருக்குள்ளும் ஒரு வேலி இருக்கத்தான் செய்கிறது. மொழி நம்மை அதிகம் பிளவுபடுத்துகிறது. நம் மக்கள் சுற்றுலாவிற்காக வட இந்தியாவிற்கு செல்லும்போது மொழி தெரியாமல் பல இன்னல்களை சந்திக்கின்றனர். மொழி கலாச்சாரம் இப்படி அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுகிறது. இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனக்கென தனியாய் ஒரு அடையாளம் கொண்டிருக்கும்போது இந்தியாவுக்கான பொதுவான அடையாளமாய் எதை சொல்வோம் நாம் ?

     வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை அந்நியர்களாய் பார்ப்பதும், தென்னிந்தியர்கள் வடஇந்தியர்களை அந்நியர்களாக பார்ப்பதும், வடகிழக்கு இந்தியர்களை மற்ற இந்தியர்கள் அந்நியர்களாய் பார்க்கும் அவலம் இன்றளவும் பெரும்பாலான மக்கள் மத்தியில் இருக்கிறது. இல்லை என்று ஒருவராவது மறுத்து கூற முடியுமா. நீங்கள் வேண்டுமானால் அப்படி இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்களை சுற்றியிருக்கும் 10 பேரில் 8 பேரிடம் இந்த குணம் இருக்கிறதே. 

       இது என் தேசம். இதில் வசிப்பவர்கள் அனைவரும் என் மக்கள் என்கிற கருத்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே இல்லாமல் மனதளவிலும் இருக்கவேண்டும். நம் அனைவருக்குள்ளும் ஒரு ஒற்றுமையுணர்வு இல்லாவிடில் அந்நியன் என்ன நம் மக்களே நம்மை எளிதாக வீழ்த்திடுவார்கள். அதான் இன்றைய அரசியவாதிகள் செய்துவருகிறார்கள். 

     ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு..

* தினேஷ்மாயா *

கல்வி


  கல்வி ஒருவனுக்கு தன்னடகத்தை கற்றுத்தர வேண்டும். ஆனால் இன்றைய கல்வி, கல்வி கற்ற ஒவ்வொருவனுக்கும் தலைக்கனத்தையே கற்றுத்தருகிறது என்பதே வேதனையான உண்மை. நாலு எழுத்து படித்துவிட்டோம் என்பதால் இந்த படித்தவர்கள் ஆடும் ஆட்டம் தாங்கமுடியாததாய் இருக்கிறது. ஆங்கிலப்புலமை என்று சுற்றித்திரிபவர்கள் வேறு. நீ இருக்கும் இடத்தில் அனைவருக்கும் என்ன மொழி தெரிகிறதோ அந்த மொழியில் பேசுவதுதான் இயற்கை. ஆனால் உன்னைச்சுற்றி இருப்பவர்கள் ஒரு மொழி அறிந்திருக்க நீ வேறு ஒரு மொழியில் பேசுவதுதான் நீ கற்ற கல்வியா ? சான்றோர்கள் நிறைந்த சபையில்தான் உன் திறமையை நீ வெளிகாட்ட வேண்டுமே தவிர உன்னைவிட திறமை குறைவானவர்கள் இருக்கும் சபையில் நீ அதை வெளிபடுத்தக்கூடாது. 

  நம் முன்னோர்களின் அனுபவ கல்விக்கு ஈடாகுமா நாம் கற்று வைத்திருக்கும் இந்த ஏட்டு சுரைக்காயான புத்தக கல்வி ? சூரியனைப்பார்த்து மணி சொல்ல தெரியும் அவர்களுக்கு. ஆனால் கடிகாரம் இருந்தால் மட்டுமே உன்னால் மணி என்னவென்று சொல்லமுடியும். இந்த ஒரு உதாரணம் போதாதா நீ கற்ற கல்வி உனக்கு எவ்வளவு உறுதுணையாய் இருக்கிறது என்று.

   கல்வி எப்போது ஒருவருக்கு அறிவை தராமல் ஆணவத்தை தருகிறதோ அப்போதே அவனுக்கு அந்த கல்வி அழிவையும் தருகிறது என்று அர்த்தம்.

   கற்றது கையளவு. கல்லாதது உலகளவு.

* தினேஷ்மாயா *

எங்கே செல்வோம்


    நேற்று ஒரு நாளிதழில் சிரியா உள்நாட்டு போர் பற்றிய ஒரு கட்டுரையை படித்துக்கொண்டிருந்தேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தும், பல லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக தஞ்சமும் அடைந்திருக்கின்றனர். இதைப்படித்துக்கொண்டிருந்த அதே வேளையில் என் மனதில் ஒரு எண்ணம் உதித்தது.

   இதுப்போன்ற நிலை நம் இந்தியாவில் ஏற்பட்டால் நாம் எல்லோரும் எங்கே செல்வோம் ? உள்நாட்டு கிளர்ச்சியாக இருக்கட்டும் அல்லது அயல்நாட்டின் படையெடுப்பு போர் என எதுவாகவேனும் இருக்கட்டும். அப்படியொரு நிலை நமக்கு ஏற்பட்டால் நாம் அனைவரும் என்ன செய்வோம் நாம் எல்லோரும் எங்குதான் செல்வோம் ?

   நேபாளம், பூட்டான், வங்காளதேசம், பாக்கிஸ்தான், மியான்மர், ஆப்கானிஸ்தான், சீனா, இலங்கை இப்படி நம்மை சுற்றியிருக்கும் எந்த நாட்டிற்கு செல்வோம் ? எங்கே சென்றாலும் அங்கு நாம் அகதிகள்தான். ஊரைவிட்டு உறவைவிட்டு வீடு வாசலைவிட்டு பிறந்த மண்ணைவிட்டு இப்படி எல்லாவற்றையும் விட்டு ஒருவாய் உணவுக்காக அடித்துக்கொண்டும் என்றாவது விடிவுகாலம் வரும் நம் நாட்டிற்கு பழையபடி திரும்பிடலாம் என்ற கனவோடும் நாமும் அங்கு அகதிகளாய் வாழ வேண்டியதுதான். இதுப்போன்ற ஒரு நிலையை மனதளவில் நினைத்துப்பார்க்கும்போதே மனம் துடித்தது. அப்படி இருக்கையில் இன்று நிஜமாகவே அகதிகளாய் வாழ்ந்துக்கொண்டிருக்கும் அனைத்து நாட்டு மக்களின் நிலையை எண்ணி கண்கள் கலங்குகின்றன. அண்டை நாடான இலங்கையில் நம் தமிழ் மக்கள் படும் துயரமும் அவர்கள் இங்கே அகதிகளாய் வருவதும் சில நாடுகளுக்கு அகதிகளாய் சென்று வாழ்வதும்தான் பலருக்கு இங்கே தெரியும். ஆனால் அதையும்விட பல மடங்கு அகதிகள் இந்த உலகெங்கிலும் அனைத்து நாடுகளிலும் நிச்சயம் சொல்லமுடியா துயரங்களை அனுபவித்துதான் வருகிறார்கள். 

      அன்பை பாராட்டுவோம். அனைவரிடத்தும் அன்பை கொடுத்து அன்பை பெறுவோம். போர் என்று வரிந்துக்கட்டி சண்டைப்போட்டாலும் சரி, நாம் எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் சரி. போர் என்று வந்துவிட்டால் இரு பக்கங்களுமே சேதத்தை அனுபவிக்கும். இயன்றவரை போருக்கு ஆயத்தமாவதை தவிர்த்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டாலே போரை தவிர்க்கலாம். அமைதியான வாழ்க்கையை வாழலாம்.

* தினேஷ்மாயா *


ராணுவ வீரன்


பெரும்பாலும் ராணுவத்தில் திருமணம் ஆகாத ஆண்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஏன் என்று தெரியுமா ??

திருமணம் ஆகாத ஆண்கள் இங்கே போரில் இறப்பார்கள், திருமணம் ஆன ஆண்கள் அங்கே வீட்டில் தினம் தினம் இறப்பார்கள் ( மனைவி படுத்தும் பாடு ) என்று ராணுவம் நினைக்கிறதோ என்னவோ !!

* தினேஷ்மாயா *

நம்பினால் நம்புங்கள்

Saturday, October 19, 2013



நம்பினால் நம்புங்கள்..

அன்பும் கூட

ஒருவகை போதைதான்..

* தினேஷ்மாயா *

அவசியம் இல்லை

Wednesday, October 09, 2013


நல்லவனாய் இரு..

ஆனால்,

அதை நிரூபித்தாக வேண்டும் என்று

அவசியம் இல்லை..

* தினேஷ்மாயா *

நெருடலான உண்மை


ஆயிரம் நினைத்தாலும், ஒன்றிரண்டே பேசுகிறோம் !!

* தினேஷ்மாயா *

உருவாக்கு


பிரச்சனைகளில் இருந்து விடுபட, பாதைகளை தேடுவதைவிட, பாதைகளை உருவாக்கு..

* தினேஷ்மாயா *

என்ன விலை அழகே ?



* தினேஷ்மாயா *

பலம்


உன்னுடைய இன்றைய போராட்டங்கள்தான்

நாளை உனக்கு தேவையான பலத்தை உருவாக்குகிறது !

* தினேஷ்மாயா *

இது நான் தான்


* தினேஷ்மாயா *

அக்கறை


உனக்கே தெரியாமல், 

உன் மீது அக்கறை செலுத்த

நிச்சயம் ஒருவர் இருப்பார் !!

* தினேஷ்மாயா *

தவறுகள் மட்டுமே


உன் கண்ணீரை ஒருவரும் கவனிப்பதில்லை..

உன் கவலைகளை ஒருவரும் கவனிப்பதில்லை..

உன் வலிகளை ஒருவரும் கவனிப்பதில்லை..

ஆனால்,

ஒவ்வொருவரும் உன் தவறுகளை மட்டுமே 

உற்று கவனிப்பார்கள்..

அதுப்போன்றோரிடம் -

நீ கவனமாய் இரு..

* தினேஷ்மாயா *

கஷ்டம் இருக்கத்தான் செய்யும்


எந்த விஷயத்திலும் 

விடாமுயற்சியுடன் இருங்கள்.

தொடக்கம் எப்போதும்

கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்...

* தினேஷ்மாயா *

வாழ்க்கைக்கான மாற்றம்


உன் வாழ்க்கைக்கான மாற்றம்,

 நீ உணரும் வலியில்தான் இருக்கிறது 

* தினேஷ்மாயா *

வந்து சேரும்


உனக்கு சேர வேண்டிய அனைத்தும், சரியான் நேரத்தில் உன்னிடம் வந்து சேரும் !!

* தினேஷ்மாயா *

உரக்க சொல்லுங்கள்


உண்மை எதுவென நீங்கள் நினைக்கிறீர்களோ, அதை உரக்க சொல்லுங்கள்.

அதை நீங்கள் மட்டும்தான் சொல்கிறீர்கள் என்ற போதிலும் ...

* தினேஷ்மாயா *

நல் மேய்ப்பன்


வழிதவறும் ஆடுகளுக்கே இறைவன் தோழ்மீது இடம் கிடைக்கிறது !!

- எங்கோ படித்தது 

* தினேஷ்மாயா *

குடி குடியை கெடுக்கும் !


 என்னதான் பழமொழி ஆயிரம்வாட்டி சொன்னாலும், வலியை மறக்க பலரும் இதையே நாடி செல்கின்றனர் !!

இது வெறும் வியாபாரமா இல்லை விஷபானமா ??

* தினேஷ்மாயா *

சிறு சேமிப்பு


எட்டு மாதத்தில் என் சிறு சேமிப்பு - ரூ.1283/-

* தினேஷ்மாயா *

தினேஷ்மாயா


நாங்கெல்லாம் அப்பவே அந்த மாதிரி..

இப்ப , சொல்லவா வேணும் !!

* தினேஷ்மாயா *

ஐ ! பொறி உருண்டை !!


 ஐ ! பொறி உருண்டை !!

நம்ம Favorite !!

* தினேஷ்மாயா *

சூதாட்டம்


வாழ்க்கை ஒரு சூதாட்டம். உனக்கும் சூது தெரிந்திருக்காவிட்டால், தோல்வி நிச்சயம். 

* தினேஷ்மாயா *

விவசாயி


எல்லோருக்கும் பல கனவுகள் இலட்சியங்கள் இருக்கும். எனக்கும் பல கனவுகள் இருக்கிறது. ஆனால், என் மனதிற்கு மிகவும் பிடித்த விஷயங்கள் மூன்று இந்த மூன்றில் எதையாச்சும் ஒன்றை என் வாழ்க்கை பாதையாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கருதுவேன். முதலில் கணக்கு ஆசிரியர். இரண்டாவது திரைப்பட இயக்குனர். மூன்றாவது விவசாயி.

என் பாக்கியம் என்னவோ தெரியவில்லை, விவசாய குடும்பத்தில் பிறக்கவில்லை நான். என் முன்னோர்கள் கூலித் தொழிலாளிகளாகவே வாழ்ந்துவிட்டனர். அதனால் விவசாயம் செய்யும் பாக்கியம் எனக்கு கிட்டியதே இல்லை. ஆனால், என் கடைசி காலத்தில் எவ்வளவு கஷ்டமானாலும் சரி, விவசாயம் செய்து பிழைப்பதென்று முடிவெடுத்திருக்கிறேன். என்னை வாழவைத்த இம்மண்ணிற்கு என்னால் இயன்ற கைம்மாறு இதுவாகத்தான் இருக்க முடியும் என்று கருதுகிறேன்.

* தினேஷ்மாயா *

மிதிவண்டி


    மிதிவண்டி ஓட்டுவது என்றால் எனக்கு அலாதி பிரியம். ஏன் என்றுதான் இன்றுவரை புரியவில்லை. வண்டியில் செல்வதைக்காட்டிலும் மிதிவண்டியில் செல்வதையே அதிகம் விரும்புகிறேன். சுற்றுசூழல் நன்மைக்காகவும் நமது உடல்நலத்திற்காகவும் இயன்றவரை எந்த கௌரவமும் பாராமல் வயது வித்தியாசமும் பாராமல் அனைவரும் மிதிவண்டியை ஓட்ட பழகிக்கொள்ள வேண்டும். இன்னும் பத்தாண்டுகளில் உலகளவில் அல்லது நம் இந்தியாவில் இது கட்டாயமாகக்கூடும் !!

* தினேஷ்மாயா *

பொற்றாமரை குளம்


இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தபோது எடுத்தது இது. பொற்றாமரை குளத்திற்கு என்று தனி வரலாறு உண்டு. ஆனால், எவ்வளவு சிறப்பு வாய்ந்த வரலாறு இருந்தும் என்ன பிரயோஜனம். இதை குளம் என்று சொல்ல அதில் தண்ணீர் இல்லையே. பொற்றாமரை குளமேயாயினும் தண்ணீர் இல்லாதது குற்றம் குற்றமே !!

* தினேஷ்மாயா *

திரும்பி பார்


* தினேஷ்மாயா *

தவறான வாழ்க்கை

Friday, October 04, 2013


* தினேஷ்மாயா *

சரியான பாதை


     இரண்டு பாதைகள் பிரியும்போது நம் வாழ்க்கைகான சரியான பாதையை தேர்ந்தெடுப்பதுதான் வாழ்வின் மிகப்பெரிய சவால். எந்த பாதையை தேர்ந்தெடுக்கிறோம் என்பது ஒவ்வொருவரின் துணிவைப் பொறுத்தது.

* தினேஷ்மாயா *

நமக்கு ரொம்ப பிடிச்சவங்க


    “நம்ம Life-ல நமக்கு ரொம்ப பிடிச்சவங்க நம்மவிட்டு போனா, நாமும் போனும்னு இல்ல. என்னைக்காச்சும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி நம்ம Life மாறும். ”

- ராஜா ராணி திரைப்படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச வசனம்..

* தினேஷ்மாயா *

வாழ்க்கைச் சக்கரம்


இதுதான் வாழ்க்கைச் சக்கரம் !!

* தினேஷ்மாயா *