குறள்:
நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.
பொருள்:
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை என்னும் செருக்கை உடையது இவ்வுலகம்.
குறள்: 336
அதிகாரம் : நிலையாமை
இந்த உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் மரணம் பொதுவானது. ஆனால் அதை அறியா மனிதர்கள் எல்லாம் நிலையானவை என்றும் தம் வாழ்வும் நிலையானது என்றும் கருதி பலருக்கு துன்பம் தரும் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், நேற்று இருந்தவன் இன்றில்லை என்பதை தினம் தினம் இந்த உலகம் நமக்கு உணர்த்துகிறது. இந்த உண்மையை நமக்கு மட்டுமின்றி ஆண்டாண்டு காலமாய் அனைவர்க்கும் உணர்த்தும் பெருமைக்குறியது இந்த உலகம்.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment