பாரதியின் புதிய ஆத்திச்சூடி

Thursday, May 31, 2012







அச்சம் தவிர்


ஆண்மை தவறேல்.

இளைத்தல் இகழ்ச்சி

ஈகை திறன்

உடலினை உறுதிசெய்

ஊண்மிக விரும்பு

எண்ணுவது உயர்வு

ஏறுபோல் நட

ஐம்பொறி ஆட்சிக்கொள்

ஒற்றுமை வலிமையாம்.

ஓய்தல் ஒழி.

ஓளடதம் குறை.

கற்றது ஒழுகு.

காலம் அழியேல்.

கிளைபல தாங்கேல்.

கீழோர்க்கு அஞ்சேல்.

குன்றென நிமர்ந்து நில்.

கூடித் தொழில் செய்.

கெடுப்பது சோர்வு

கேட்டிலும் துணிந்து நில்.

கைத்தொழில் போற்று

கொடுமையை எதிர்த்து நில்.

கோல்கைக் கொண்டுவாழ்

கவ்வியதை விடேல்.

சரித்திரச் தேர்ச்சி கொள்

சாவதற்கு அஞ்சேல்

சிதையா நெஞ்சு கொள்.

சீறுவோர்ச் சீறு.

சுமையினுக்கு இளைத்திடேல்.

சூரரைப் போற்று

செய்வது துணிந்து செய்

சேர்க்கை அழியேல்.

சைகையில் பொருளுணர்.

சொல்வது தெளிந்து சொல்

சோதிடந் தளை யிகழ்.

சௌரியம் தவறேல்.

ஞமலிபோல் வாழேல்.

ஞாயிறு போற்று

ஞிமறென இன்புறு.

ஞெகிழ்வது அருளின்.

ஞேயம் காத்தல்செய்.

தன்மை இழவேல்.

தாழ்ந்து நடவேல்.

திருவினை வென்று வாழ்.

தீயோர்க்கு அஞ்சேல்.

துன்பம் மறந்திடு

தூற்றுதல் ஒழி.

தெய்வம் நீ என் றுணர்.

தேசத்தைக் காத்தல் செய்.

தையலை உணர்வு செய்.

தொன்மைக்கு அஞ்சேல்.

தோல்வியில் கலங்கேல்.

தவத்தினை நிதம் புரி.

நன்று கருது.

நாளெலாம் வினை செய்;

நினைப்பது முடியும்

நீதிநூல் பயில்.

நுனியளவு செல்.

நூலினைப் பகுத்துணர்.

நெற்றி சுருக்கிடேல்.

நேர்படப் பேசு.

நையப் புடை.

நொந்தது சாகும்.

நோற்பது கைவிடேல்.

பணத்தினைப் பெருக்கு.

பாட்டினில் அன்பு செய்.

பிணத்தினைப் போற்றேல்.

பீழைக்கு இடங்கொடேல்.

புதியன விரும்பு.

பூமி இழந்திடேல்.

பெரிதினும் பெரிது கேள்.

பேய்களுக்கு அஞ்சேல்.

கொய்மை இகழ்.

போர்த் தொழில் பழகு.

மந்திரம் வலிமை.

மானம் போற்று.

மிடிமையில் அழிந்திடேல்.

மீளுமாறு உணர்ந்துகொள்.

முனையிலே முகத்து நில்.

மூப்பினுக்கு இடங் கொடேல்.

மெல்லத் தெரிந்து சொல்.

மேழி போற்று.

மொய்ம்புறத் தவஞ் செய்.

மோனம் போற்று.

மௌட்டியந் தனைக் கொல்.

யவனர்போல் முயற்சிகொள்.

யாரையும் மதித்து வாழ்.

யௌவனம் காத்தல் செய்.

ரஸத்திலே தேர்ச்சிகொள்.

ராஜஸம் பயில்.

ரீதி தவறேல்.

ருசிபல வென்றுணர்.

ரூபம் செம்மை செய்.

ரேகையில் கனி கொல்.

ரோதனம் தவிர்.

ரௌத்திரம் பழகு.

லவம் பல வெள்ளமாம்.

லாகவம் பியற்சி செய்.

லீலை இவ் வுலகு.

(உ)லோக நூல் கற்றுணர்.

லௌகிகம் ஆற்று.

வருவதை மகிழ்ந்துண்.

வான நூற் பயிற்சி கொள்.

விதையினைத் தெரிந்திடு.

வீரியம் பெருக்கு

வெடிப்புறப் பேசு.

வேதம் புதுமை செய்.

வையத் தலைமை கொள்.

வௌவுதல் நீக்கு.

 
எழுதியவர் : பாரதியார்
 
 
 
 
- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா

26 Comments:

இரா.முத்துமாரியப்பன் -Muthumariappan.R said...

அருமை அருமை மிகவும் அருமை

NAGERCOIL said...

நல்ல முயற்சி.
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தினேஷ்.

Unknown said...

வாழ்க எம் பாரதி புகழும் கவியும் தமிழோடு கோடான கோடியாண்டுகள் செந்தமிழோடு

krishnakumar said...

நன்று செய்தீர், வாழ்த்துகள்

S.NEDUMARAN , said...

பொருள்விளக்கம் வேண்டுகிறோம்

S.NEDUMARAN , said...

பொருள்விளக்கம் வேண்டுகிறோம்

Unknown said...

superapu
very useful to me thank u very much

Antony said...

https://youtu.be/Z8h83U6Hv6Y

Unknown said...

பொருள் விளக்கம் வேண்டுகிறோம். என் பாரதி
அய்யனுக்கு கோயில் எடுக்க வேண்டும்.

தினேஷ்மாயா said...

தேவைப்படும் வரிகளை இங்கே பதிவு செய்யுங்கள். அதற்கான பொருள் விளக்கத்தை நான் சொல்கிறேன். அனைத்து வரிகளுக்கும் பொருள்விளக்கத்தோடு என் புதிய பதிவை விரைவில் பதிவு செய்கிறேன்.

நன்றி
- தினேஷ்மாயா

Vijay said...

மௌட்டியந்தனை கொல்

தினேஷ்மாயா said...

மௌட்டியந்தனை கொல் - மூடத்துவத்தை கொல். மூடநம்பிக்கைகளை கொல்ல வேண்டும் என்கிறார்...

விஜய் said...

ஐயா புதிய ஆத்திச்சூடி மிக அருமை. ஆனால் ஔவையார் எழுதிய ஆத்திசூடியை பாடத்திட்டத்திலிருந்து எடுத்து விட்டு புதிய ஆத்திச்சூடி வைத்தது மிகவும் வருந்தக்கூடியது. நாமே நம் வரலாற்றை அழிக்கின்றனர்

விஜய் said...

ஐயா புதிய ஆத்திச்சூடி மிகவும் அருமை

தினேஷ்மாயா said...

உங்கள் வருத்தம் எனக்குப் புரிகிறது. ஆனால், பாடத்திட்டத்திலிருந்து எடுத்தால் என்ன? தாய் தந்தையர் தங்கள் பிள்ளைகளுக்கு இதுப்போன்ற நன்னெறி புகட்டும் நூல்களை அறிமுகம் செய்துவைத்து, அதில் இருக்கும் நல்ல கருத்துக்களை பகிரவேண்டும். அவ்வாறே அவர்களை நடக்க செய்ய வேண்டும். இது ஒவ்வொரு பெற்றோரின் கடமையும் கூட. வெறுமனே பாடத்திட்டத்தில் வைத்துவிடுவதால் ஏதும் உதவாது. அதில் இருந்து நீக்கம் செய்தது ஒருவித வருத்தமே என்றாலும், பாடங்களை நம் குழந்தைகள் நம்மிடம் இருந்துதான் கற்றல் நன்று, பாடப்புத்தகங்களில் இருந்து அல்ல...

Unknown said...

ஞிமறென இன்புறு.

vision said...

ரேகையில் கனி கொல் ..என்பதன் பொருள் கூறவும்

vision said...

ரேகையில் கனி கொல் ..என்பதன் பொருள் கூறவும்

தினேஷ்மாயா said...

ரேகையில் கனி கொள் - இதற்கு பல்வேறு அறிஞர்கள் பலவாறு பொருள் கூறுகின்றனர். அதில் ஒன்று, வஞ்சனை செய்வோரைக் கண்டால் பெருங்கோபம் கொள் என்பது. இதுவும் ரௌத்திரம் பழகு என்பதும் ஒருசேர ஒத்துப்போவதால், இந்த பொருளை நான் ஆமோதிக்கிறேன்.

தினேஷ்மாயா said...

ஞிமறென இன்புறு - ஞிமிறு என்றால் தேனீ என்று பொருள். தேனீக்களைப் போல் உழைத்து வாழ்ந்து அதில் இன்பம் காணும்படி சொல்கிறார் பாரதி

Yogasree said...

பெரிதினும் பெரிது கேள் என்பதற்கு எடுத்துக்காட்டுடன் விளக்கம் கூறவும்

தினேஷ்மாயா said...

பாரதியார் ஒரு புதுமை விரும்பி. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்கிற பழைய வாக்கியத்தை விட்டொழித்து பெரிதினும் பெரிது கேள் என்றான்.

இதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்.

ஒரு எடுத்துக்காட்டாக அறிவை சொல்கிறேன். கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பார்கள். ஒரு விஷயத்தை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கிறோம் என்றால் அதில் நம்முடைய அறிவு என்பது கையளவு தான். ஆகையால் அந்த விஷயத்தைப் பற்றி மேலும் மேலும் ஆர்வமுடன் ஆராய்ந்து அறிந்து தெளிந்து அதில் நம் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இன்னொரு உதாரணமாக நம் தொழிலை சொல்லலாம். ஒரு அலுவலகத்தில் சிறிய கணக்காளராக வேலைக்கு சேரும் ஒருவர் இதுவே எனக்கு போதும் என்று நினைக்கலாம். ஆனால் அவர் தன் அறிவையும் ஆற்றலையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி பதவிக்கு உயர்வது என்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பெரிதினும் பெரிது கேட்டதால் தான் அவர் தன் வாழ்க்கையில் உயர்ந்துள்ளார்.

பாரதியார் தன் கவிதைகளை எழுதும் பொழுது சுதந்திரப்போராட்ட கருத்துக்களை மனதில் வைத்தே அதிகம் எழுதியுள்ளார். பெரிதினும் பெரிது கேள் என்பது இந்தப் பார்வையில் பார்க்கும்போது, ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு ஒரு தன்னாட்சி முறையையே கொடுக்க நினைத்தார்கள். ஆனால் அப்போதைய காங்கிரஸார் எங்களுக்கு சுதந்திரமான ஒரு அமைப்பு வேண்டும் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாத முழு விடுதலை வேண்டும் என்று கேட்டார்கள். பாரதியார் இதை மனதில் வைத்தும் கூட இந்த வரிகளை எழுதி இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து..

உதாரணங்கள் மிக எளிமையாக மனதில் தோன்றிய மிகவும் சாதாரண உதாரணங்களை தான் கொடுத்திருக்கிறேன் இது உங்களுக்கு போதுமென படாவிட்டால் மேலும் தொடர்பு கொள்ளுங்கள்
பல ஆக்கபூர்வமான எடுத்துக்காட்டுகளை தர தயாராக இருக்கிறேன்.

நன்றி

தினேஷ்மாயா said...

ஞிமறென இன்புறு - ஞிமிறு என்றால் தேனீ என்று பொருள். தேனீக்களைப் போல் உழைத்து வாழ்ந்து அதில் இன்பம் காணும்படி சொல்கிறார் பாரதி

Unknown said...

சுமையினுகிழைத்திடேல் என்பதற்கு எடுத்துக்காட்டுடன் விளக்கம் தாருங்கள் ஜயா

தினேஷ்மாயா said...

சுமையினுக்கு இளைத்திடேல் - நமது சுமைகளைக் கண்டு கலங்கக்கூடாது. இங்கே சுமை என்பது பொறுப்புகளை குறிக்கும். பொறுப்புகளை சுமை என்று சொல்வதைவிட கடமையென்றே சொல்லலாம். உதாரணமாக, திருமணமான ஒரு ஆண் தன் குடும்பத்திற்காக தன் ஆசைகளை தியாகம் செய்து உழைத்து குடும்பத்தை உயர்த்துவதென்பது அந்த ஆணின் சுமையல்ல. அது கடமையே. அந்த கடமை என்னும் சுமையைக் கண்டு இளைத்திடல் கூடாது. ஒரு ஆட்சியாளன் தன் மக்கள் அனைவரையும் காக்கும் தொழிலில் பல இடர்கள் வந்தாலும் அவைகளை சுமை என்று எண்ணாமல் கடமையாக கருதி செயலாற்றல் வேண்டும்.

Unknown said...

வேதம் புதுமை செய் இதற்கு ஒரு உதாரண கதை ஒன்று கூறுங்கள் ஐயா. நன்றி