தேவதையே வா என் தேவதையே வா
உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்
பூமழையே வா என் பூமழையே வா
உன் விரல்தொடும் தொலைவினில் விழுகிற அருவி நான்
நீரில்லாமல் மீன்களும் வேரில்லாமல் பூக்களும்
பாவம் தானே பூமியில்
சிலுவைளும் சிறகெனப் பறந்திடு
தேவதையே வா என் தேவதையே வா
உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்
விளையும் பூமி தண்ணீரை விலகச் சொல்லாது
அலைகடல் சென்று பாயாமல் நதிகள் ஓயாது
சிதைவுகள் இல்லை என்றாலே சிலைகள் இங்கேது
வருவதை எல்லாம் ஏற்காமல் போனால் வாழ்வேது
பாதை தேடும் கால்கள் தான் ஊரைச் சேரும்
குழலை சேரும் தென்றல் தான் கீதமாகும்
சுற்றும் இந்த பூமியை சுழலச் செய்யும் காதலை
கற்றுக் கொண்டேன் உன்னிடம்
இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை
அடைமழை நம்மைத் தொட்டாலே வெயிலே வாவென்போம்
அனலாய் வெயில் சுட்டாலே மழையே தூவென்போம்
தனிமைகள் தொல்லை தந்தாலே துணையைக் கேட்கின்றோம்
துணைவரும் நெஞ்சைக் கொள்ளாமல் தனியே தேய்கின்றோம்
ஆசை மட்டும் இல்லையேல் ஏது நாட்கள்
கைகள் தொட்டு சூடவே காதல் பூக்கள்
கண்ணை விற்று ஓவியம் வாங்கும் இந்த ஊரிலே
அன்பை வைத்து வாழலாம்
சுகமென தினம் சுமைகளில் மகிழ்ந்திரு
தேவதையே வா என் தேவதையே வா
உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்
பூமழையே வா என் பூமழையே வா
உன் விரல்தொடும் தொலைவினில் விழுகிற அருவி நான்
நீரில்லாமல் மீன்களும் வேரில்லாமல் பூக்களும்
பாவம் தானே பூமியில்
சிலுவைளும் சிறகெனப் பறந்திடு
படம்: மலைக்கோட்டை
இசை: மணிசர்மா
பாடியவர்: விஜய் யேசுதாஸ்
வரிகள்: யுகபாரதி
- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment