மனிதனுக்கு மனிதன் என்பதைவிட எவ்வளவு பெயர்கள் இருக்கு தெரியுமா..
- முரடன்
- திருடன்
- முட்டாள்
- பைத்தியம்
- கோழை
- கொலைக்காரன்
- கொள்ளைக்காரன்
- பொய்யாக நடிப்பவன்
- மற்றவர் காலை வாரி விடுபவன்
- நம்பிக்கை துரோகி
- கூட்டிக்கொடுப்பவன்
- மற்றவர் குடியை கெடுப்பவன்
- தான் வாழ பிறரை அழிப்பவன்
- பொய் உரைப்பவன்
- ......................................................................................................
சொல்ல முற்பட்டால் சொல்லிக்கொண்டே போகலாம். இது எண்ணிக்கையில் அடங்காது. மனிதனாக இருப்பதற்கு ஒருவகையில் பெருமைப்பட்டாலும் மனிதனாக இருப்பதற்கு ஒருவகையில் நான் மிகவும் வெட்கப்படுகிறேன்..
ஏனென்றால் மிருகம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நம்மால் சொல்லிவிட முடியும். மனிதனை இப்படித்தான் இருப்பான் என்று சொல்லிவிடமுடியாது. மிருகங்களைக்கூட நம்பிவிடலாம், ஆனால் மனிதன் மனிதனை நம்ப முடியவில்லை.. காலம் களி காலம் என்று சொல்லிவிட்டு செல்ல நான் தயாராக இல்லை. எல்லா தவறுகளையும் நாம் செய்துவிட்டு கடவுளை பழிப்போடுவது என்ன நியாயம். மனிதன் என்று மனிதனாக மாறுகிறானோ அன்றுதான் பூமி சுழல்வதற்கே அர்த்தம் இருக்கிறது என்பேன் நான்...
- என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா
1 Comments:
vazhthukal mayaaaaaaa.
Post a Comment