நான்
இப்போது வங்கியில் இணை மேலாளராக இருக்கிறேன். மனசுக்கு ரொம்ப பிடிச்ச வேலை. எனக்கு
முழு சுதந்திரம் இருக்கு. ஏன் இந்த வேலையை செய்யவில்லை ஏன் இந்த வேலையை செய்கிறாய்
என்று யாரும் என்னை கேட்க முடியாது. எனக்கென்று சில அதிகாரம் இருக்கிறது. என் அதிகாரத்திற்கு
ஏற்ப என் வேலைகளை செவ்வனே செய்து வருகிறேன். வேலைப்பொழுதில் செல்போனை சைலண்ட் மோட்-ல்
வைக்க வேண்டிய அவசியம் இல்லை. விடுப்பு வேண்டுமானால் உயரதிகாரிகளிடம் கெஞ்ச வேண்டியதில்லை.
என் விடுப்பை நான் எடுத்துக் கொள்கிறேன். அதை யாரும் தடுக்க முடியாது. எனக்கென தனி
மேஜை தனி போன் தனி கணிணி மற்றும் எனக்கென்ன தனித்தனி வசதிகள் செய்து தந்திருக்கிறார்கள்.
எதாச்சும் வேணும்னா அதை செய்து கொடுக்க ஒரு ஆளையும் அமர்த்தியிருக்கிறார்கள். என்னிடம்
வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் எனக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுதான் என்னிடம் பேச
ஆரம்பிப்பார்கள். எனக்கு என்பதைவிட நான் இருக்கும் பதவிதான் எனக்கு இவ்வளவு மரியாதையை பெற்று தந்திருக்கிறது.
அதும் ஒருசில வாடிக்கையாளர்கள் கைகூப்பி நன்றி தெரிவிப்பார்கள் அது என் மனசுக்கு எவ்வளவு
சந்தோஷத்தை தருகிறது தெரியுமா. சம்பளம் 20-25 ஆயிரம் வரைதான் கிடைக்கிறது. ஆனால் அரசு
தரும் மற்ற சலுகைகள் எல்லவற்றையும் சேர்த்தால் ஒரு IT துறையில்
வேலை செய்யும் நபரைவிட நான் அதிகமாகவேதான் சம்பளம் வாங்குகிறேன். சம்பளம் என்பதைவிட
மக்களுக்கு சேவை செய்வதால் ந்ன் மனதிற்கு கிடைக்கும் மகிழ்ச்சி எவ்வளவு பணம் கொடுத்தாலும்
கிடைக்காது. வேலை அதிகம் என்று சொல்லிவிட முடியாது ஆனால் எப்படியும் மாலை 7 மணி வரையாச்சும்
ஆகிவிடுகிறது என் தினசரி வேலைகளை முடிக்க. அது ஒன்றும் பெரிதாக எனக்கு தெரியவில்லை.
அதைவிட மிகப்பெரிய சந்தோஷம் என்னவென்றால், தேவை என்று வரும் மக்களுக்கு கடன் வழங்கி
அவர்களின் அவசரத்தேவைக்கு உதவி செய்வது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. மேலிடத்தில்
இருந்து எந்தவித நச்சரிப்பும் இல்லை. என் பாட்டுக்கு நான் என் சேவையை தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கிறேன்.
அரசுத்துறை
வேலை என்பது மக்களுக்கு உன்னதமாக சேவை செய்ய ஒரு வாய்ப்பு. அதை எத்தனைபேர் என்னைப்போல்
உணர்ந்து செயல்படுகிறார்கள் என்று எனக்குத்தெரியாது ஆனால் நான் என் மனதார மக்களுக்கு
சேவை செய்வதையே குறிக்கோளாய்க்கொண்டு சேவைப்புரிந்து வருகிறேன்..
- என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment