வாழ்க்கை சொல்லித்தந்த பாடம்.....

Thursday, January 28, 2010



அனைவர்க்கும் வணக்கம்...

உலகை மாற்ற அனைவரும் விரும்புகின்றனர்..
ஆனால் தங்களை யாரும் மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை...

நானும் இவ்வுலகை மாற்ற நினைத்து,முடியாமல் தவித்தபோது,
ஒவ்வொரு மனிதனும் தன்னை மாற்றிக்கொண்டால் இவ்வுலகம் தானாகவே மாறிவிடும் என்ற உண்மையை உணர்ந்துக் கொண்டேன்.

நான் என்னை மாற்றிக்கொண்டப்பின் இவ்வுலகம் எனக்கு புதிதாய் தெரிந்தது.
உலகை மாற்ற நினைக்கும் அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் இது சமர்ப்பணம்.

இங்கே என் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
இதை அனைவரும் பின்பற்றினால் வாழ்க்கை சிறப்பாக அமையும்...


  • சூரிய உதயத்திற்கு முன் கண் விழி.


  • இறைவனை தொழு. அது உன் கடமை.


  • நன்றி மறவாமல் இரு.


  • விட்டுக்கொடுத்து வாழ்.


  • அனைவரையும் நேசி.


  • உடலினை உறுதி செய். - பாரதி சொன்னது.


  • பொய் பேசுவதை தவிர்.


  • எப்பேர்பட்ட துயரமானலும் கவலைப்படாதே.


  • கேட்டத்தையெல்லாம் நம்பிவிடாதே.


  • நம்பியதையெல்லாம் சொல்லிவிடாதே.


  • சோம்பலை விட்டொழி.


  • தினமும் ஒரு மணிநேரமாவது இசை கேள்.


  • சொன்ன சொல் தவறாதே.


  • இயற்கையை நேசி.


  • அதிகம் பேசாதே.


  • எப்போதும் பொறுமையாய் இரு.


  • பிறர் பொருளுக்கு ஆசை படாதே.


  • அனைவரும் சமம் என்பதை மறக்காதே.


  • பிறர்க்கு உதவி செய்ய கலெக்டராகவோ, மந்திரியாகவோ இருக்கவேண்டும் என்பதல்ல.
    நல்ல மனிதனாய் இருந்தால் போதும்.


  • எதிலும் உண்மையாய் இரு.


  • சோதனைகள்தான் உன்னை உறுதியான மனிதனாக்கும்.


  • தோல்வியைக் கண்டு அஞ்சாதே.


  • மனிதநேயம் இல்லாதவன் மனிதனே இல்லை.


  • அதிகமாய் உண்ணாதே. எப்போது பாதி வயிறுமட்டுமே உண்ண வேண்டும்.


  • தியானம் பழகு. அது நீ யார் என்பதை கண்டுபிடிக்க உதவும்.


  • தூங்கும்போதும் விழிப்புணர்வுடன் இரு.


  • பிறர் உழைப்பை நம்பி இருக்காதே.


  • உனக்குத் தெரிந்த நல்ல செய்திகளை பிறர்க்கும் தெரிவி.


  • பிறர்க்கு வழி்காட்டியாய் இரு.


  • தினமும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்.


  • மண், பொன், பெண் இவைமீதான ஆசைகளை அழித்துவிடு, இல்லையேல் அந்த ஆசைகள் உன்னை அழித்துவிடும்.


  • நேரத்தை வீணாக்காதே.


  • உன்னிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டிக் கொள்ளாதே.


  • தெரியாது என்பதை தைரியமாக ஒப்புக்கொள்.


  • எவர்க்கும் சுமையாய் இருக்காதே.


  • உன் வேலையை நீயே செய்.


  • எதையும் இலவசமாக பெறாதே.


  • இன்றைய வேலையை இன்றே செய்.


  • மற்றவரை மகிழ்வித்து அதில் நீ மகிழ்ச்சி காண்.


  • செய்வன திருந்த செய்.


  • தினமும் உடற்பயிற்சி செய்.


  • அதிகம் தண்ணீர் பருகு.


  • சூரிய ஒளி உடலில்படும்படி செயல்படு.


  • இயன்றவரை செயற்கை மருந்துகளை தவிர்.


  • உன்னால் முடியாதது எதுவும் இல்லையென்பதை உணர்.


  • இழப்பதற்கு உயிரை தவிர எதுவும் இல்லை. வெல்ல உலகமே உள்ளது.


  • எல்லாம் மாயை.


  • எதுவும் உனக்கு சொந்தமில்லை.


  • வாய்மையே வெல்லும்.


  • கால் போன போக்கில் போகாதே. மனதை அடக்கி பழகு.


  • பகையை வளர்க்காதே.


  • கர்வத்தை மறந்துவிட்டு, தன்னடக்கத்தை வளர்த்துக்கொள்.


  • மரணம் என்பது ஒருமுறைதான். எதற்கும் பயப்படாதே.


  • நீ இருக்குமிடத்தில் இல்லாத ஒருவரைப்பற்றி ஒருபோதும் பேசாதே.


  • எதையும் வெளிப்படையாய் பேசிவிடு.


  • எந்த உயிர்க்கும் தீங்கு விளைவிக்காதே.


  • சுத்தமாய் இரு.


  • ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய். அப்போதுதான் அந்த வேலை விரைவிலும், நல்ல முறையிலும் முடியும்.


  • கலைஞனை ஊக்கப்படுத்து.


  • வதந்தியை பரப்பாதே.


  • வதந்தியை நம்பாதே.


  • தாய் தந்தையர் சொல்படி நட.


  • எந்த வேலையை செய்யும் முன்னர் யோசித்து செய்.


  • எந்த விஷயத்தையும் பரந்த மனத்துடன் பார்.


  • பிறரின் துன்பங்களை நீக்க முயற்சி செய்.


  • எப்போதும் மனசை லேசாக வைத்திரு.


  • உன் மனதிற்க்கு சரியென பட்டதை செய். அதற்க்குமுன் உன் மனதை நல்வழிப்படுத்து.



    இன்னமும் சொல்கிறேன்...ஆனால் அப்புறம் சொல்கிறேன்... :)

    இதை எளிதில் சொல்லிவிடலாம். ஆனால் அதை பின்பற்றுவது சுலபமல்ல..

    மேலே நான் சொல்லியதை இன்றுவரை என் வாழ்க்கையில் என்னால் முயன்றவரை பின்பற்றிவருகிறேன்.

    இவைகளை கற்றுக்கொள்ள நான் தந்த விலை மிக உயர்ந்தது. எத்தனையோ வலிகள், தோல்விகள், அவமானங்கள், ஏமாற்றங்கள், தடுமாற்றங்கள், இழிவுப்பேச்சுகள், புறக்கணிப்புகள், கண்ணீர் துளிகள், துயரங்கள்.... இன்னும் பல..

    என் அனுபவத்தின் மூலம் பிறரை நல்வழிப்படுத்த நினைக்கிறேன்.

    நீங்கள் பிறர்க்கு நல்லவராக தெரிய வேண்டுமானால், முதலில் நீங்கள் உங்களுக்கு நல்லவராக இருங்கள்.....

    ...வாழ்க வளமுடன்....


    என்றும் அன்புடன் -

    தினேஷ்மாயா

    Ph : +919791155982
    Email : mddinesh@yahoo.co.in
  • 0 Comments: