அவளை நேரில்
பார்க்கும் தைரியம்
எனக்கு இல்லை...
ஆனால் அவளோ
ஏதோ ஒர்வடிவில்
என் கண்முன்
தோன்றிகொண்டே இருக்கிறாள்...
அவளைத்தான் மறக்க முடியவில்லை...
அவள் ஏற்படுத்திய வலியையாவது
மறக்கலாமென்றால்........
இந்த பெண்களே இப்படிதானோ?
புதிய கவிதைப் புத்தகம்..
நாங்கள் இருவரும்
பார்த்துக் கொண்ட
பார்வைகளால்
நிரம்பியிருக்கிறது...
சொல்ல வேண்டிய காதலை
சொல்லாமலும்...
சொல்லக் கூடாத நன்றியை
சொல்லியும்...
நானும் அவளும்
பிரிந்து சென்றோம்
வலியுடனும் !
காதலுடனும் !
நான் படித்திருக்கிறேன்..
என் மனதை
நீ படித்திருக்கிறாய்..
இருப்பினும், நம்
காதலை சொல்ல
இருவரும் ஏன்
இன்னமும் தயங்குகிறோம்....
இருக்கிறேன் என்பதை
உன் செயல்கள்
எனக்கு புரியவைத்துவிட்டது..
ஆனால் உன்
மௌனம்தான் என்னை
தடுமாற்றம் கொள்ளச்செய்கிறது...
நண்பர்களோடு சேர்ந்து
நாம் விளையாடியபோது
நீ எழுதித்தந்த
துண்டுச் சீட்டுக்களை
இன்னமும் நான்
பத்திரமாக வைத்துள்ளேன்...
நாமிருவர் மட்டும்
இரவு முழுதும்
நம் எண்ணங்களை
பகிர்ந்துக் கொண்டிருந்தோம்..
அன்று தொலைத்தவந்தான்...
இன்னமும் கிடைக்கவில்லை
எனக்கு-
என் உறக்கம்...
ரோஜா இருப்பதைப்போல
எனக்குள்ளும் காதல்
தோன்றியது...
உன்னை பார்த்த பின்பு.
ரோஜாவின் கீழ்
முட்களும் இருப்பதைப்போல
உனக்குள்ளும் நடிப்பு
தோன்றியது...
என்னை உண்மையாய்
காதலித்துவிட்டு-
ஒரு நொடியில்
என்னை காதலிக்கவில்லை
என்று கூறினாயே....
என்னை தனியாய்
விட்டுச்செல்ல
உனக்கு எப்படி
மனம் வந்தது...?
கோர்வையாய்
கவிதை எழுத
தெரியாது-
உன்னை
உலக அழகி
என்று வர்ணிக்க
தெரியாது-
பிறர்போல்
வண்டியில் வைத்து
சுற்றி வரத்
தெரியாது-
உன்னையே
பின் தொடர்ந்து
அலைந்துத் திரிய
தெரியாது-
காதலித்தால்
இவையெல்லாம்
செய்யனும் என்று
சத்தியமாக எனக்கு
தெரியாது..
எனக்கு தெரிந்ததெல்லாம்....
உன்னை
என் உயிர்போல்
வைத்து, காக்க
தெரியும்-
உன்னுடைய
மனதின் ஆசையை
புரிந்து, நடக்க
தெரியும்-
உன்னையே
எண்ணிக் கொண்டு
உறங்காமல் இருக்க
தெரியும்-
இவ்வுலகில்
நான் வாழும்வரை
உன்னைமட்டுமே நினைக்க
தெரியும்-
உன்னை
மனதில் வைத்து
இதுபோல் கொஞ்சம்
கவிதைகளை கிறுக்க
தெரியும்-
நீ பிரிந்தால்
உனக்கு முன்னர்
இறக்கத் தெரியுமடி
என் காதலியே !
நாம் ஒன்றாக
இருந்தோம்..
எனை பிரியும்
எண்ணம் உனக்கு
முன்னரே இருந்திருந்தால்
முதல்நாளே சொல்லியிருக்கலாமே..
நான் காதலை
வளர்த்திருக்க மாட்டேனே.
இப்போது நான்
என் காதலை
உனக்கு தந்துவிட்டேன்..
கைம்மாறாக வலியையும்
வேதனையையும் நீ
எனக்கு தந்துவிட்டயடி..
நீ என் வலைப்பக்கத்தை
படிப்பாய் என்னும்
பேராசையில்தான்
நான் என்
நினைவுகளை இங்கே
பதிவு செய்துக் கொண்டிருக்கிறேன்..
இதைப் படிக்கும்போது
தயவுசெய்து கண்ணீர் வடிக்காதே..
நீயாகவே காதலிப்பதாய் சொன்னாய்..
நீயாகவே காதலிக்கவில்லையென்றும் சொன்னாய்..
நீ பிரிந்தபோது
நான் வடித்த கண்ணீரைவிட
நீ ஒன்றும்
அதிகமாய் அழுதிருக்க மாட்டாய்..
என் நினைவுகளை
படித்துப் பார்க்கும்
உரிமை மட்டும்தான்
உனக்கு உண்டு..
நானும் ஒருகணம்
நினைத்துப் பார்த்தேன்..
நீ என்னைவிட்டு
பிரிந்து சென்றபின்
என் வாழ்க்கை
கேள்விகுறியகிவிடுமோ என்று..
என் நண்பர்கள்
சொன்னார்கள்-
என்னை கைப்பிடிக்கும்
பாக்கியம் உனக்குத்தான்
இல்லையென்று..
அது வெறும்
கண்துடைப்பு என்றுதான்
நான் எடுத்துக்கொண்டேன்..
உன் வாழ்க்கையை
நீ அமைத்துக் கொண்டாய்..
ஒரு வேளை
என் மனதுக்குப்பிடித்த
பெண்ணை நான்
காண நேர்ந்தால்?
இப்படி ஒரு
கேள்வி என்னுள்
எழுந்தது..
ஆனால் மீண்டும்
இன்னொருமுறை வலியைதாங்கும்
தைரியம் எனக்கில்லை..
அவளும் உன்னைப்போல்
சொல்லிவிட்டால்......!?!
நேசித்தது தவறா?
பிரிந்து சென்றதிலும்
ஒரு சிறிய
நன்மை இருக்கிறது..
உலகத்தை பற்றி
எனக்கு நன்றாக
புரியவைத்துவிட்டாயடி....
உதட்டில் மறைத்து
போலியாய் புன்னகைக்கும்
பேதை பெண்ணே..
கடைசியாய் ஒரு
வேண்டுகோள்..
எனக்கும் சேர்த்து
நீ வாழ்ந்துவிடு...
உனக்கும் சேர்த்து
நான் இறந்த்துவிடுகிறேன்....
...சமர்ப்பணம்...
என்னவளுக்கும்....
அவள் நினைவுகளுக்கும்....
என்றும் அன்புடன் -
தினேஷ்மாயா
Ph: 9791155982
Email : mddinesh@yahoo.co.in
0 Comments:
Post a Comment