கலைஞானி

Monday, February 11, 2013


 கமல்ஹாசன்

பலர் என்னிடம் கேட்டதுண்டு. உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும் என்று. இருப்பது ஒரே நடிகர் அதுவும் கமல் மட்டும்தான். அப்புறம் வேறுயாரை பிடிக்கும் என்று சொல்லட்டும்னு கேட்பேன்.




  சாதிக்க பிறந்தவன் என்று பலர் தங்களை சொல்லிக்கொள்வார்கள். ஆனால் கலைக்காகவே பிறந்தவன் இவன் என்று சொல்வேன் நான்.






      இவரைப்பற்றி எழுத கோடி கோடி வார்த்தைகளும் வரிகளும் வரிசையில் 
காத்திருக்கிறது. ஆனால் அதை இங்கே பதிவு செய்து இவன் பெருமையை வெறும் அந்த கோடி வார்த்தைகளில் மட்டுமே அடைத்துவிட விரும்பவில்லை நான். கலைஞானி கமல்ஹாசனின் கலைத்தாகம் என்றும் எனக்கு பிடிக்கும். உன்னைப்பற்றி பேசாதோரில்லை எழுதாதோரில்லை. என் வலையில் உனக்கும் ஓர் இடமுண்டு என்பதை சொல்லவே இந்த பதிவு.


- தினேஷ்மாயா -

நாத வினோதங்கள்





வாகர்தாவிவ  ஸ்ம்ப்ருக்தெள வாகர்த – ப்ரதிபத்தயே  
ஜகத: பிதரெள வந்தே பார்வ்தீ-பரமேச்வரெள
வந்தே பார்வ்தீப ரமேச்வரெள



நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேரு தருமே
பாவங்களில் .. பழகுவதில் ..
கானங்களில் கலையசைவில்
பாவங்களில் பழகுவதில் கானங்களில் கலையசைவில்
உடலொடு உயிர்வந்து இணைகின்ற தவமிது

நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேரு தருமே

கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பௌர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒலி தீபம்
கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பௌர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒலி தீபம்

நவரச நடனம் தனிதனி தனிசா
ஜதி தரும் அமுதம் தனிதனி தனிசா
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்
அவன் விழியசைவில் எழுதுளி அசையும்

பரதமென்னும் நடனம் ..
பிறவி முழுதும் தொடரும் ..
பரதமென்னும் நடனம் ..
பிறவி முழுதும் தொடரும் ..

விழி ஒளி பொழியும் அதில் பகை அழியும்
விழி ஒளி பொழியும் அதில் பகை அழியும்

சிவனின் நயனம் உலகாழும்
திரன திரனனன தகிட தகிடதிமி
திரன திரனனன நடனம்
திரன திரனனன தகிட தகிடதிமி
திரன திரனனன நாட்டியம்

உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம்
நடராஜ பாதம் நவரசம்

திரனன திரனன திரனன திரனன
திரதிர திரதிர திரதிர திரதிர

நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேரு தருமே
vts021muxedavisnapshot0.jpg


படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

- தினேஷ்மாயா -

பூச்சாண்டி


இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் எங்ககிட்ட வேணாம் !!!

- தினேஷ்மாயா -

குடி குடியை கெடுக்காது


   அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது எல்லாவிதத்திலும் உண்மைதான். நம் இந்தியாவில் மட்டும்தான் குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும் என்று எங்கு பார்த்தாலும் வசனங்கள் ஆர்ப்பாட்டங்கள். மது விற்பனையில் முதலில் இருக்கும் தமிழகத்தில் மதுவிலக்குக்கு என தனி ஒரு அமைச்சர் இருக்கிறார் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். 

  மது என்பதை அளவாக எடுத்துக்கொண்டால் அது ஒரு சிறந்த மருந்து. Alcohol நம் உடலுக்கு ஒரு சிறிய அளவில் நிச்சயம் தேவை. இந்தியாவில் மட்டும்தான் மது அருந்திவிட்டு உணவை உண்பார்கள். பொதுவாக உணவருந்திவிட்டு கொஞ்சம் மது எடுத்துக்கொள்ளலாம். அது உணவு செரிக்க உதவும். ஆனால் இங்கே மட்டும்தான் வயிறுமுட்ட குடித்துவிட்டு பின் சுயநினைவே இல்லாமல் எதோ சாப்பிடவேண்டுமென்று அரைகுறையாக தின்பார்கள். 

  குடி ஒன்றும் குடியை கெடுக்காது. தவறாக குடிப்பழக்கமும் அதிகமான குடிப்பழக்கமும்தான் உடலை கெடுக்கும். உங்களை நம்பி உங்கள் குடும்பம் இருந்தால் நிச்சயம் உங்கள் குடிப்பழக்கம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கெடுக்கும்.

  மதுவை அந்த காலத்தில் மன்னர்கள் ஒரு போதைத்தரும் பாணமாக மட்டுமே பருகினார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் மது அருந்துவது ஒரு கௌரவம் எனவும் அக்காலத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மதுவை வெளிநாட்டவர்கள் அறிமுகம் செய்யும் முன்னமே நம்மவர்கள் கள் என்னும் பாணத்தை கண்டறிந்தார்கள். கள் என்பது உடலுக்கு குளிர்ச்சியைத்தரும். அதில் இருக்கும் சுண்ணாம்புச்சத்து உடலுக்கும் குடலுக்கும் சில நல்ல விஷயங்களை செய்துவந்தது. எதையும் அளவோடு எடுத்துக்கொண்டால் தவறில்லை. அளவு மீறினால் மதுவும் சரி மாதுவும் சரி எல்லாமே மரணக்குழிதான் என்பதை மறக்கவேண்டாம்.

- தினேஷ்மாயா -

துணிவு




ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்..

ஒவ்வொரு நொடியும் துணிந்தால்....

நாம் ஜெயித்து விடலாம்......


@ யாரோ சொன்னது


- தினேஷ்மாயா -

கனவு உலகம்



       இன்றுவரை ஒரு கனவில் தான் நானும் வாழ்ந்துவருகிறேன். கனவு என்று எனக்கு நன்றாக தெரிந்தும் அதில் இருந்து வெளியே வர மனசு விரும்பவில்லை. என்னை அந்த கனவிலிருந்து மீட்டெடுக்க எவளாச்சும் ஒருத்தி வருவாள் என்று நான் இன்னமும் கனவு உலகத்திலேயே காத்திருக்கிறேன். யாராச்சும் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. எனக்கு என் கனவு இருக்கிறது. அந்த கனவிற்கு நான் இருக்கிறேன். வேறென்ன வேண்டும் எனக்கு சொல்லுங்கள் ?

- தினேஷ்மாயா -

காதலர் தினம் !





நான் சொல்லவேண்டியது எதுவுமில்லை. நீங்களே படித்துப் புரிந்துக் கொண்டிருப்பீர்கள்.

காதலர்களுக்கும் முக்கியமாக காதலர்கள் அல்லாதவர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்..

- தினேஷ்மாயா -

தண்ணீரில்லா தேசம்


      தண்ணீர் தேசம் என்று வைரமுத்து ஒரு நூல் எழுதினார். தண்ணீரில்லா தேசம் என்று இன்னொரு நூலை அவரை எழுதச்சொல்லுங்கள். நானும் அப்படி ஒரு நூல் எழுதலாம் என்றிருக்கிறேன். 

       நிலத்தடி நீர் தான் உலகில் பெரும்பாலானவர்களுக்கு குடிநீர் ஆதாயமாக இருந்துவருகிறது. முன்பிருந்த நிலத்தடி நீரின் அளவு இன்று இயந்திர மயானமாகிவிட்ட உலகில் குறைவே. போகிறபோக்கில் நிலத்தில் நீரை எடுக்க தோண்டினால் அது பூமியின் இன்னொரு பக்கத்திற்கு சென்றுவிடும்போல. அந்த அளவிற்கு தண்ணீரை நாம் இயற்கையிடமிருந்து திருடிக்கொண்டிருக்கிறோம், இல்லை இல்லை, கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறோம். நாளைய உலகிற்கு நல்லதை விட்டுசெல்லும் எண்ணம் எவர்க்கும் இல்லை இங்கு. இப்போது கச்சா எண்ணெய்க்காக உலக நாடுகளுக்கு இடையே போர் வருவதுபோல சில ஆண்டுகள் கடந்தால் தண்ணீருக்காக உலக போர் வரலாம். வரலாம் என்ன வரலாம், இன்றைய நிலை தொடர்ந்தால் நிச்சயம் தண்ணீருக்காக போர் வரும். அந்த அவலநிலை வராமல் இருக்க இன்றைய சந்ததியினர் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. தண்ணீரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிக்கனமாய் பயன்படுத்துவோம். 

    தேவையில்லாமல் குழாயில் இருந்து சிந்தும் தண்ணீரை நிறுத்தினாலே அதுவும் ஒரு சேமிப்புதான். தேவைக்கு அதிகமாய் எதையும் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். தண்ணீர்தான் உலகை சூழ்ந்திருக்கிறதே என்று தண்ணீரை வீணாக்க வேண்டாம். செலவழித்துவிட்டு கையை பிசைந்துக்கொண்டு நிற்பதைவிட சேமித்துவைத்து கொஞ்சம் கொஞ்சமாய் செலவுசெய்வோம். 

- தினேஷ்மாயா -

கடவுள் இருக்கிறானா ?

Sunday, February 10, 2013



கடவுள் இருக்கிறானா ?

உலகில் பெரும்பாலான மக்களின் கேள்வி இது.

இந்த கேள்விக்கு என் பதில் -

“ இருக்கிறானா என்று தெரியவில்லை. இருந்துவிட்டுத்தான் போகட்டுமே. 700 கோடி மக்கள் இருக்கின்றனர். அதில் ஒருவனாக அவன் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. எல்லோரையும் போல் அவனும் யாரோ ஒருவந்தான் எனக்கு”

- தினேஷ்மாயா -

ஞா-நீ



   விஞ்ஞானம் உலகை பலத்துறைகளில் மாற்றி வருகிறது. இயற்கை வகுத்த நியதிகளை புரிந்துக்கொண்டு அதை பயன்படுத்துவதே விஞ்ஞானம் எனப்படும். 

   மெய்ஞானம் என்பது இயற்கை வகுத்த நியதிகளையும் தாண்டி அந்த இயற்கையையே புரிந்துக்கொள்வது. ஞானத்தை வெளியில் தேடக்கூடாது. மெய்ஞானம் என்பதில் மெய் என்றால் உடல் என்று அர்த்தாம். நம் உடலும் ஒரு ப்ரம்ம அண்டம் தான் அதாவது நம் உடலும் ஒரு ப்ரம்மாண்டம் தான். அந்த அண்டத்தினுள் சென்று உண்மையை உணர்ந்துக்கொள்வதே மெய்ஞானம்.

  ஞானத்தை உன்னுள் தேடு. நீயும் ஒரு ஞானி..

- தினேஷ்மாயா -

சுதந்திரம்




    ஒரு ஆணை ஒரு குறிப்பிட்ட வயதுவரை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அந்த வயதை கடந்ததும் அவனை சுதந்திரமாக விட்டுவிட வேண்டும்.

   ஒரு பெண்ணை ஒரு குறிப்பிட்ட வயது வரை சுதந்திரமாக விட்டுவிட வேண்டும். அந்த வயதை கடந்ததும் அவளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

இதுதான் நம் நாட்டின் கலாச்சாரத்தை சீர்கெடாமல் வைத்திருக்க உதவும். 

- தினேஷ்மாயா -

காதல் அனுபவம்

Saturday, February 09, 2013



  இன்று என் அண்ணிக்கு பிறந்தநாள். அண்ணனும் அண்ணியும் நானும் விருந்திற்கு செம்ன்றிருந்தோம். நிறைய விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அண்ணி என்னை கேட்டார்கள். ஏன் இந்த வயசில் தனியா இருக்கீங்க காதலி யாருமில்லையா என்று. அதற்கு நான் சொன்னேன். எனக்குள்ளும் காதல் இருந்தது. ஏழு வருட காதல், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற காதல் என்னுடையது. ஆனால் இப்போது காதல் தோல்வியால் தனியாய் இருக்கிறேன் என்றேன். அதற்கு அவர் சொன்ன விஷயம் என்னை அதிகம் கவர்ந்தது. 

  காதல் தோல்வி என்று சொல்லாதீர்கள். காதல் அனுபவம் என்று சொல்லுங்கள். காதலில் தோல்வி என்று ஏதுமில்லை. காதல் என்ன போட்டியா வெற்றிப்பெறவும் தோற்றுப்போகவும். அது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம். எப்போதும் காதல் தோல்வி என்று சொல்லாதீர்கள் என்றார்கள்.

   அவர் அப்படி சொன்னதுமே மனதில் அச்சடித்து ஒட்டிக்கொண்டேன் அவர் சொன்னதை. இனி எவர் கேட்டாலும் பெருமையாய் சொல்வேன். காதல் அனுபவம் எனக்கு இருக்கிறது என்று. காதல் தோல்வி என்று இனி ஒருபோதும் சொல்லக்கூடாது என்றும் முடிவெடுத்துவிட்டேன். 

- தினேஷ்மாயா -

சுயசரிதை



என் சுயசரிதை எழுத

எனக்கு நேரமில்லை..

இவ்வுலகில் எவ்வளவோ சரித்திரம்,

எழுதப்படாமலே மறைந்து போயிருக்கிறது.

அதில் என்னுடையதும்

எழுதப்படாத சரித்திரமாய்

இருந்துவிட்டு போகட்டும் !

- தினேஷ்மாயா -

தேவை



தேவையில்லாத பொருட்களை

தேக்கிவைக்கவும் - ஓர் இடம்

தேவை...

- தினேஷ்மாயா -

நவம்பர்

Wednesday, February 06, 2013




என் காலண்டரில்,

நவம்பர் மாதம் மட்டும்

வண்ணம்பூசிக்கொண்டு

ஜொலிக்கின்றன -

அவள் பிறந்த மாதம் என்பதாலோ !?

- தினேஷ்மாயா -

ஆயிரம் முத்தம்



ஒரு இதழ்

இரண்டு கன்னம்

ஆயிரம் முத்தம் !!

- தினேஷ்மாயா -

247 எழுத்துக்கள்




பெரிதாய் ஒன்றையும் பதியப்போவதில்லை இப்போது,

ஆனால் என் தாய்மொழியில் இருக்கும் அனைத்து எழுத்துக்களையும் பதிய ஆசைப்படுகிறேன். யாருக்குத்தெரியும், பின்வரும் சந்ததியினருக்கு இது மிகவும் உதவியாய்கூட இருக்கலாம் இல்லையா..

உயிர் எழுத்துக்கள் - 12

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ 

மெய் எழுத்துக்கள் - 18

க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்

உயிர்மெய் எழுத்துக்கள் - 216

க கா கி கு கூ கெ கே கை கொ கோ கௌ

ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ

ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ

ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ

ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ

ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ

த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ

ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ

ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ

ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ

ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ

ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ

ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ

வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ

ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ

ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ

ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ

ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ

ஆய்த எழுத்து - 1




- தமிழுடன்

****தினேஷ்மாயா****

தலையணை



காதலியை மணந்து,

திருமணத்திற்கு பிறகு

கட்டிப்பிடிக்கும்போது இருக்கும் ஆனந்தத்தைவிட

காதலிக்கும்போது அவளை நினைத்து

தலையணையை கட்டிப்பிடித்து

தூங்கும்போது கிடைக்கும் ஆனந்தமே தனிதான்...


- தினேஷ்மாயா -

இதுவே ஜனநாயகம்

Tuesday, February 05, 2013



மனிதனே

மனிதனை

மனிதனுக்காக

அடிமைப்படுத்தும் ஒரு அமைப்பின் பெயரே

ஜனநாயகம் !!!

- தினேஷ்மாயா -

அன்பென்னும் வலி



- தினேஷ்மாயா -

என் இனிய இயந்திரா

Monday, February 04, 2013



     மனிதர்கள் இன்று இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.  என்றாவது ஒருநாள் நிச்சயம் மனிதனும் ஒரு இயந்திரமாகவே நிச்சயம் மாறத்தான் போகிறான், அவன் மாறாவிட்டாலும் விஞ்ஞானிகள் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் மனித இனத்தையே இருந்த இடம் தெரியாமல் செய்யப்போகிறார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.

என்றுதான் மனிதன் தான் ஒரு மனிதன் என்பதை உணர்ந்து மனிதத்தன்மையோடு வாழப்போகிறானோ தெரியவில்லை..

- தினேஷ்மாயா -

உணர்வு களஞ்சியம்



    தேவையோ இல்லையோ, கிடைக்கும் அனைத்து தகவல்களையும் தெரிந்து வைத்துக்கொண்டு, சில நேரங்களில் தேவையான இடத்தில் பல நேரங்களில் தேவையில்லாத இடத்தில் அந்த தகவல்களை கொட்டித்தீர்க்கும் தகவல் களஞ்சியங்களாய்த்தான் இங்கே பலரும் சுற்றித்திரிகின்றனரே தவிர, உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து மனிதனை மதித்து வாழும் உணர்வு களஞ்சியங்கள் இன்றைய உலகில் வெகுவும் குறைவுதான்..

- தினேஷ்மாயா -

Law of Closure

File:Gestalt closure.svg

Law of Closure என்பார்கள் இதை. முழுமை பெறாத ஒரு உருவத்தை நன் மூளை முழுமை அடைந்ததைப்போல பார்க்கும் தன்மை. இல்லாத ஒன்றை இருப்பது போல பார்க்கும் குணம் நம் மூளைக்கும் மனதிற்கும் எப்போதும் இருக்கும் போல..

- தினேஷ்மாயா -

போர் - பசி

Sunday, February 03, 2013



உலகில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களின் பசியை போக்க தேவைப்படும் பணம், ஒரு வருடத்திற்கு 30 ஆயிரம் கோடி.

இந்த தொகை, இராணுவ படைகளுக்காக உலக நாடுகள் எட்டு நாட்களில் செலவிடும் தொகை இது.

ஆயுதத்தை வாங்குவதைவிட, அன்பை வாங்குவோமே.

எதிரிகளை தாக்குவதைவிட, ஏழைகளை தாங்குவோமே..

- தினேஷ்மாயா -

பாரதி - அஞ்சல்தலை


நம் பாரதியாருக்கு இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல்தலை..

- தினேஷ்மாயா -

Green Tea




இயற்கை அளித்த சுவைமிக்க மருந்தில் இதுவும் ஒன்று...

- தினேஷ்மாயா -




பனிக்குகை


ஐஸ்லேண்ட் நாட்டில் இருக்கும் ஒரு ஐஸ்குகை இது..

- தினேஷ்மாயா -

இயேசு



மனிதர்களின் பாவங்களை போக்க தன் இன்னுயிரை தந்தவனுக்காக ஒரு நிமிடம் இயற்கையிடம் வேண்டிக்கொண்டேன்...


- தினேஷ்மாயா -

அன்பு மதம்


அர்த்தமற்ற இந்து மதம்..

அர்த்தமுள்ள ‘அன்பே’ மதம்..

- தினேஷ்மாயா -

செய்வன திருந்தச்செய்

Saturday, February 02, 2013



செய்வன திருந்தச்செய்
@ சங்க இலக்கியம் ஒன்றில் சொல்லப்பட்டிருக்கிறது..

ஏற்கெனவே நம் தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை கொஞ்சம் மாற்றம் செய்து வெளிநாட்டவர்கள் அந்த கருத்துகளுடன் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்கின்றனர். என்ன செய்ய ??


- தினேஷ்மாயா -

நடைபிணம்



உன் இதயம் உனக்காக துடிப்பதில்

அர்த்தம் ஏதுமில்லை...

பிறரின் துயர் கண்டு,

அவர்க்காக துடிக்காவிடில்

நீயும் ஒரு நடைபிணம் தான்...

- தினேஷ்மாயா -

அடடா !



புத்தாண்டு

நேற்றுதான் பிறந்ததுபோல இருக்கிறது -

இன்றுடன் ஒரு மாதம் கடந்து விட்டது !!!

காலம் கொஞ்சம் வேகமாய்த்தான் சுழல்கிறதோ ?

- தினேஷ்மாயா -

அல்லாஹ் ஒருவனே !!


File Source: http://en.wikipedia.org/wiki/File:Islam_branches_and_schools.svg

இந்து மதத்தில் பல தெய்வங்களை வழிப்படுகின்றனர்.

கிறித்துவ மதத்தில் தேவன் ஒருவனாகவும் அவனின் தூதன் ஏசு என்றும் மேரி அன்னையையும் பலரை வணங்குகின்றனர்.

ஆனால், எனக்கு இசுலாமிய மதத்தில் பிடித்த விஷயமே, இறைவன் ஒருவனே என்கிற கருத்துதான். அதுவும் இறைவனுக்கு உருவம் ஏதும் கொடுக்காமல் மனதார நம்பிக்கையுடன் வணங்கும் மதம் இசுலாமிய மதம். ஆனால், அல்லாஹ் ஒருவனே என்று சொல்லும் மதத்தினுள்ளும் இத்தனை பிரிவுகளா ??

- தினேஷ்மாயா -

ஜிஹாத்



ஜிஹாத் - என்பதற்கு போராட்டம் என்று அர்த்தம்.

ஒருவன் தன்னுடனும் தன் உள்ளத்துடன் போராடி இறைவனை அடையும் வழியாகவே இந்த ஜிஹாத் இருக்க வேண்டும்.

சிலர் அல்லாஹ் மற்றும் இசுலாமிய மதத்தின் எதிரிகள் மீது தொடுக்கும் போர் என்று இந்த ஜிஹாத்தை அர்த்தம் கொண்டிருக்கின்றனர்.

அந்த அன்பர்களை அல்லாஹ் மன்னித்து, அவர்களின் சிந்தனையை உலக அமைதிக்காகவும், அன்பு பரவும்படியும் மாற்றி அமைப்பாராக..

- தினேஷ்மாயா - 

யோகா - தொழுகை


நீங்கள் நினைப்பது போல இது ஒன்றும் யோகா இல்லை. இசுலாமிய தோழர்களின் தொழுகை இது. தொழுகையும் ஒருவகை யோகாதான். தினமும் ஐந்துமுறை தொழும் இசுலாமிய அன்பர்கள் இறைபக்திக்கு உண்மையான எடுத்துக்காட்டு..

- தினேஷ்மாயா -

நாளைய பிணங்கள்




இன்றைய மனிதர்கள் என்று அழைக்கப்படும் நாளைய பிணங்கள்,

பணத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்கின்றனர் !!

- தினேஷ்மாயா -

உயிரிழப்பு



    தமிழக அரசு மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களைவிட அறுவை சிகிச்சை செய்ய ஆளில்லாமல் இறந்தவர்களே அதிகம் இருக்ககூடும்....

- தினேஷ்மாயா -

வாழ்க மனிதநேயம்



இன்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், பிரசவ அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சில மணி நேரத்திற்கு முன்னர் இறந்துவிட்டார். காரணம் வேறொன்றுமில்லை, அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சையோ அல்லது முதலுதவியோ செய்ய மருத்துவர் எவரும் அங்கே இல்லை. தன் தாயை, பிறந்த சில மணி நேரமே ஆன அந்த ஆண் குழந்தைக்கு யார் , என்ன பதில் சொல்வார்கள். அவனுக்கு தாய்ப்பாசன் என்றால் என்ன என்பதை யார் காட்டுவார். சிலரின் அலட்சியத்தால் பலரின் உயிர் பிரிவதை தடுக்க எவனும் முன்வந்ததாய் தெரியவில்லை. ஏன் நானும்தான். இங்கே என்னால் கதறி எழுதத்தான் முடிகிறதே தவிர, எவரையும் தண்டிக்கவோ தட்டி கேட்கவோ முடியவில்லையே. வாழ்க ஜனநாயகம்... வாழ்க மனிதநேயம்..

- தினேஷ்மாயா -

Praise The Lord !!








Jesus said: "...DO THIS IN REMEMBRANCE OF ME" Luke(22:19)

Here, "THIS" refers to eating Bread and having Wine..

அப்போ சரக்கடிக்கலாம்னு “அவரே” சொல்லியிருக்கார் போல !!

Praise The Lord....

பி.கு: யார் மனதையும் புண்படுத்த இதை பதியவில்லை..

- தினேஷ்மாயா -

குடிக்கலாமா !!


இவ்வுலகில் மனிதர்கள் அதிகம் குடிப்பது

1. தண்ணீர்



2. தேநீர்



3. பீர் !!



குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு  கேடு என்றால், ஏன் உலகத்தில் இருக்கும் பெரும்பாலானோர் தண்ணீர், தேநீருக்கு அடுத்து பீரை குடிக்க வேண்டும் !!?


- தினேஷ்மாயா -