அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது எல்லாவிதத்திலும் உண்மைதான். நம் இந்தியாவில் மட்டும்தான் குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும் என்று எங்கு பார்த்தாலும் வசனங்கள் ஆர்ப்பாட்டங்கள். மது விற்பனையில் முதலில் இருக்கும் தமிழகத்தில் மதுவிலக்குக்கு என தனி ஒரு அமைச்சர் இருக்கிறார் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன்.
மது என்பதை அளவாக எடுத்துக்கொண்டால் அது ஒரு சிறந்த மருந்து. Alcohol நம் உடலுக்கு ஒரு சிறிய அளவில் நிச்சயம் தேவை. இந்தியாவில் மட்டும்தான் மது அருந்திவிட்டு உணவை உண்பார்கள். பொதுவாக உணவருந்திவிட்டு கொஞ்சம் மது எடுத்துக்கொள்ளலாம். அது உணவு செரிக்க உதவும். ஆனால் இங்கே மட்டும்தான் வயிறுமுட்ட குடித்துவிட்டு பின் சுயநினைவே இல்லாமல் எதோ சாப்பிடவேண்டுமென்று அரைகுறையாக தின்பார்கள்.
குடி ஒன்றும் குடியை கெடுக்காது. தவறாக குடிப்பழக்கமும் அதிகமான குடிப்பழக்கமும்தான் உடலை கெடுக்கும். உங்களை நம்பி உங்கள் குடும்பம் இருந்தால் நிச்சயம் உங்கள் குடிப்பழக்கம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கெடுக்கும்.
மதுவை அந்த காலத்தில் மன்னர்கள் ஒரு போதைத்தரும் பாணமாக மட்டுமே பருகினார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் மது அருந்துவது ஒரு கௌரவம் எனவும் அக்காலத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மதுவை வெளிநாட்டவர்கள் அறிமுகம் செய்யும் முன்னமே நம்மவர்கள் கள் என்னும் பாணத்தை கண்டறிந்தார்கள். கள் என்பது உடலுக்கு குளிர்ச்சியைத்தரும். அதில் இருக்கும் சுண்ணாம்புச்சத்து உடலுக்கும் குடலுக்கும் சில நல்ல விஷயங்களை செய்துவந்தது. எதையும் அளவோடு எடுத்துக்கொண்டால் தவறில்லை. அளவு மீறினால் மதுவும் சரி மாதுவும் சரி எல்லாமே மரணக்குழிதான் என்பதை மறக்கவேண்டாம்.
- தினேஷ்மாயா -
0 Comments:
Post a Comment