யாருமில்லை

Tuesday, September 06, 2016

இவ்வுலகில் 700 கோடி மக்கள் இருந்தாலும்

உனக்கென ஒருவருமில்லை என நீ

நினைக்கும் அந்த தருணம்

மிக கொடுமையானது..

* தினேஷ்மாயா *

விழித்துக்கொள்

மற்றவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை

உன்மீது திணித்து உன்னை அந்த வாழ்க்கையை வாழ சொல்வார்கள்.

விழித்துக்கொள்..

* தினேஷ்மாயா *

விகடகவி

Friday, August 19, 2016

இவ்வளவு அருமையாக கவிதை எழுதாதீர்கள் என்றால், கேட்கவில்லை..

இன்று அந்த இறைவன் தங்களை அழைத்துக்கொண்டான்..

தன் அரசவையில் உங்களுக்கு அரசவை கவிஞர் பதவி கொடுப்பதற்காக.

கவிஞர், பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்களின் ஆன்மா சாந்தியடைய
எல்லாம்வல்ல இயற்கையை பிரார்த்திக்கிறேன்.

* தினேஷ்மாயா *

நீ அழுகையில்

Monday, August 08, 2016



உன் கண்ணில் சிந்தும் கண்ணீர்
என்னுயிரை எடுத்து செல்கிறது..
உன் கண்களுக்கு மட்டுமல்ல
உன் கண்ணீருக்கும் சக்தி உள்ளதடி..
* தினேஷ்மாயா *

சக்தி



காதலுக்கு இருக்கும் சக்தி...
இப்பிரபஞ்சத்தின் சக்தி..
* தினேஷ்மாயா *

என் வரம்

Friday, July 15, 2016


உன்னுடைய குழந்தைத்தனத்தை

நம் குழந்தையும் ஈடுசெய்ய முடியாதடி..

* தினேஷ்மாயா *

சினிமா

Sunday, June 05, 2016

அக்காலத்தில், உழைத்து களித்த பாமர மக்களை மகிழ்விக்க உருவானதுதான் தெருக்கூத்து..

பின்னர், அது மேடை நாடகமாக உருமாறியது.

பின்னர், அதிக மக்களை சென்றடையும் என்பதால் மேடை நாடகங்கள் சுதந்திர போராட்டத்தின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது..

சினிமா !

நாடகத்தின் எதிர்காலத்தையும் அது சார்ந்த பல கலைகளையும் ஒன்றாக சேர்த்து சினிமா என்னும் 65-வது கலை ஒன்று உருவானது..

இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் நம் சினிமா பயணித்த பாதை வேறு. இன்று பயணிக்கும் பாதை வேறு.

இப்போது வெளியாகும் சில சினிமாக்கள் உலக தரத்தில் இருக்கின்ற நிலையில், பல சினிமாக்கள் ஏன் எடுக்கப்படுகிறது என்ற கேள்வியைதான் என்னுள் எழுகிறது.

சினிமா மீது இருந்த ஆர்வம் மாறி, இன்று சினிமா மீது மோகம்தான் அதிகம் இருக்கிறது. இது நம் இன்றைய சமூகத்தை பெரிதும் நேராகவும் மறைமுகமாகவும் பெரிதும் பாதித்துள்ளது..

இந்நிலை ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு நல்லதல்ல. இதை இந்த சமூகமும் சினிமா துறையும் உணர வேண்டும்..

* தினேஷ்மாயா *

அறிக்கை

அரசியல்வாதிகள் அறிக்கை விடுகிறார்களே..

அது எதற்கு என்பதுதான் எனக்கு ஒன்றுமே புரியவில்லை..

இந்த அறிக்கை கலாச்சாரம் மாறி மக்களோடும் சக அரசியல்வாதிகளிடமும் மனம்விட்டு நேராக பேசும் கலாச்சாரம் வருமேயானால் அன்றுதான் ஜனநாயகம் செழிக்கும்..

* தினேஷ்மாயா *

வருங்காலத்தில்

வருங்காலத்தில்..

" அனைத்து மக்களும் தங்கள் கைப்பேசியில் WiFi-ஐ அனைத்து இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது"

இது போன்ற அறிவிப்புகள் வரும்..

* தினேஷ்மாயா *

என்னத்த சொல்ல ?

தேர்தல் நாடகம்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது அனைத்து மக்களும் அறிந்ததே..

இந்நிலையில், தோல்வியடைந்த கட்சிகள் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்றும் பண பலம் வென்றது எனவும் கூவிக்கொண்டிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது..

* தினேஷ்மாயா *

தொலைத்துவிட்டாயா ?

Friday, April 29, 2016


உன் வாழ்க்கையில் எதையாவது தொலைத்துவிட்டாயா ??
வருந்தாதே..
அது நீ உழைத்து சம்பாதித்த பொருளென்றால், நீ மீண்டும் அதை உன் உழைப்பால் வாங்கிவிடலாம்..
அந்த பொருள் திரும்ப கிடைக்கவே கிடைக்காது என்றால், வருந்தி என்ன பயன்..
அதனால், வருந்தாதே..
* தினேஷ்மாயா *

முழுமை

பணம் தான் வாழ்க்கை என்று முதலில் உணர்ந்து,

பின்னர்...

வாழ்க்கைக்கு பணம் மட்டும் போதாது, பணம் ஒரு பொருட்டே இல்லை என்று உணரும் மனிதன்,

தன் வாழ்வில் முழுமை அடைகிறான்...

* தினேஷ்மாயா *

வாழ்க்கை என்பது

Friday, April 01, 2016


வாழ்க்கை என்பது பிழையின்றி வாழ்வதல்ல..

பிழையை புரிந்து திருத்திக்கொண்டு வாழ்வதே வாழ்க்கை..

* தினேஷ்மாயா *

காதல் பெரியது


எனக்கு கோபம் வந்தால்

அவள் விட்டுக்கொடுத்து போவாள்.

அவள் கோபப்பட்டால்

நான் விட்டுக்கொடுத்து போவேன்.

எங்கள் இருவருக்கும் கோபம் வந்தால்,

முதலில் விட்டுக்கொடுத்து போவது

நானாகத்தான் இருக்கும்..

ஏனென்றால், அவள்மீதான கோபத்தைவிட

எனக்கு அவள்மீதான காதல் பெரியது..

* தினேஷ்மாயா *

உங்கள் ஓட்டு

Monday, March 14, 2016

வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு என்பதை கவனமாக தேர்ந்தெடுங்கள்.
அரசியல் ஆதாயத்திற்காகவும் பதவியை பிடிப்பதற்காகவுமே இங்கே கட்சிகள் கூட்டணி வைத்துக்கொள்கின்றன. தங்களின் கொள்கைக்காகவோ மக்களின் நலனுக்காகவோ இல்லை.
நீங்கள் சிந்தித்து செயல்படும் இந்த ஒரு நொடிதான் உங்களை ஐந்து வருடம் மகிழ்ச்சியாய் வைத்திருக்கும்...

* தினேஷ்மாயா *

பந்தம்

Tuesday, March 08, 2016

பெயர் வைக்கமுடியாத
பந்தம் நம் இருவருக்கும்...
அளவிடமுடியாத அன்பு
நம் இருவருக்கும்...
நம்மை மரணம் பிரித்துவிடும் என்கிற
பயமில்லை எனக்கு..
நான் உன்னோடு கலந்துவிட்டதால் !
* தினேஷ்மாயா *

முத்தம்

Monday, March 07, 2016

முத்தம் இருவகைப்படும்..
அசைவ முத்தம்..
சைவ முத்தம்..
அதிகாலை எழுந்ததும் உன்னருகில்
உறங்கிக்கொண்டிருக்கும் எனக்கு...
நீ என் நெற்றியிலும் உதட்டிலும் பதிப்பது அசைவ முத்தம்..
பின்னர் நீ குளித்து முடித்து இரவு வரை எனக்கு தரும் முத்தம் அனைத்தும் சைவ வகையை சாரும்...
* தினேஷ்மாயா *

உன்னிடம் பிடித்தது

Monday, February 29, 2016



என் மனைவியிடம் அதிகம் பிடித்தது ..

என் அம்மா அப்பா

உன் அம்மா அப்பா என்று பேசமாட்டாள்.

என் அத்தை மாமா

உன் அத்தை மாமா என்றுதான் பேசுவாள், என்னவள்..

* தினேஷ்மாயா *

ஏமாற்றம்

அன்பின் பெயரால் ஏமாற்றிவிடாதே
அன்பின் பெயரால் ஏமாந்துவிடாதே..
* தினேஷ்மாயா *

அன்பு

அன்புதான் என் பலம்
அன்புதான் என் பலவீனமும் ..
* தினேஷ்மாயா *

ஊடலின் தொடக்கம்

Tuesday, February 09, 2016

ஒரு சிலர் மட்டுமே இப்படி..

உறவுகள்..

Think about this...

பணம் மட்டுமா ?

பணம் மட்டுமா வாழ்க்கை ?

* தினேஷ்மாயா *

அன்பு மட்டுமே

நான் கோபமாக பேசுவதுபோல் தெரிந்தாலும்..
என் வார்த்தை ஒவ்வொன்றிலும் அன்பும் அக்கறையும் மட்டுமே இருக்கும்..
அன்பிற்கு மட்டுமே இங்கு தட்டுப்பாடு..
* தினேஷ்மாயா *

Sometimes

Nothing to say

Very True

விடைபெறுகிறேன்

விடைபெறுகிறேன்..

* தினேஷ்மாயா *

பிடித்ததை செய்

I'm Tired

Take what you need

Excuse Me !

மனதை தொட்ட வரிகள்

என்றோ யாரோ உன் கையை தொடுவார்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவார்
அன்பே அது நானாக கூடாதா ?
**********
அடி கோயில் மூடினால் கூட
கிளி கவலைப்படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது
அதன் காதல் குறைவதே இல்லை..
**********
சில நாட்களாக என்னுள் அடிக்கடி ஒலிக்கும் பாடல் வரிகள் இவை..
* தினேஷ்மாயா *

Happily Single

Am Happy Single..
Happy Valentine's Day to all Couples..
* தினேஷ்மாயா *

தோழி



எனக்கு மனைவி வேண்டாம்..

எனக்கும் என் பிள்ளைக்கும் ஒரு தோழி போதும்..

* தினேஷ்மாயா *

இவ்வுலகில்

முகமூடி அணியும் இவ்வுலகில்

உண்மையான என்

அகமும் முகமும் உனக்காய்

சமர்ப்பிக்கிறேன்..

* தினேஷ்மாயா *

உனதாகும்

உன் கவலைகளை எனதாக்கு..

என் இன்பங்கள் உனதாகும்..

* தினேஷ்மாயா *