இன்னும் என்ன தோழா..

Monday, May 21, 2012




இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!
தொடு வானம் இனி தொடும் தூரம்!
பல கைகளை சேர்க்கலாம்!

விதை விதைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?

ஒரே பலம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே இடம்
அகம் புறம் நம் தேகத்தில்

கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிறோம்

பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா?

இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு!
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுன்வோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!


திரைப்படம்: ஏழாம் அறிவு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: பா.விஜய்
பாடியவர்கள்: பல்ராம், நரேஷ் ஐயர், சுரேஷன்


- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா 

வேணாம் மச்சான் வேணாம்


வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!
வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!


வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு
ஏ..வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும்பொதே நீ தூக்கி போட்டுடு..!!

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணான்டா
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா

வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!
வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!

வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!
வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு

பைக்குல தினமும் ஒன்னா போனோம்
பேக்குல இப்போ அவள காணோம்
பீச்சுல சொகமா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கண்ணீ முட்டும்..

பைக்குல தினமும் ஒன்னா போனோம்
பேக்குல இப்போ அவள காணோம்
பீச்சுல சொகமா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கண்ணீ முட்டும்..


காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது
உன் கன்னு முழிச்சுக்கிட்டா அங்க காதல் கிடையாது..
அவ போனாலே போனா தண்ணீர விட்டு மீனா
நா காயம் பட்ட மைனா இப்போ பாடுறேன் கானா..!!
பிகரு சுகரு மதரி
ஜனக்கு ஜனக்கு வவ்வாலு
நட்பு தடுப்பு ஊசீட
ஜனக்கு ஜாலி கோபாலு
பிகரு சுகரு மதரி
பசங்க மனச உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசிடா
ஒடஞ்சா மனச தேத்திடும்..!!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு

பாதியில் வந்த பொண்ண நம்பி
ஆதியில் வளர்ந்த நட்ப விட்டேன்..!!
தேதிய போல கிழிச்சிப் புட்டா
தேவதை அவளை நம்பி கெட்டேன்..!!

தோலு மட்டும் வெள்ள உன்ன கவுட்துப்புட்டா மெல்ல
என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்..!!
அவ போட்டாளே போட்டா நல்ல திண்டுகல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேண்டா!!

கண்ணுல மைய வெப்பாடா
அதுல பொய்ய வெப்பாடா
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு காயம் வெப்பாடா..
கண்ணுல மைய வெப்பாடா
அதுல பொய்யோ பொய்யையோ
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு கையோ கையையோ


வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு
ஏ..வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும்பொதே நீ தூக்கி போட்டுடு..!!



மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணான்டா
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா



திரைப்படம்: ஒரு கல் ஒரு கண்ணாடி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: நா.முத்துகுமார்
பாடியவர்கள்: வேல்முருகன், நரேஷ் ஐயர்..


- என்றும் அன்புடன்..


தினேஷ்மாயா

ரொம்ப நாள் கழிச்சு...





கிட்டதட்ட இரண்டு மாசம் கழிச்சு திரும்ப என் வலைப்பக்கத்தில் பதிவு செய்ய வந்திருக்கேன்.. நான் அதிகம் விரும்பி ரசித்த பாடல் வரிகளை முதலில் கொஞ்சம் பதிந்துவிட்டு பின்னர் நான் என் வழக்கமான பதிவுகளை தொடர்கிறேன்...

- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா 

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்..





ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்..
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்..
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்..
அது எப்பவுமே போதையான நிலவரம்..

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்..
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்..
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்..
அது எப்பவுமே போதையான நிலவரம்..

அப்போ ஆணும் பெண்ணும் ஒத்துமையா இருந்துச்சு..
அது காதலுல உலகத்தையே மறந்துச்சு..
அது வாழ்ந்த போதிலும் இல்ல இறந்த போதிலும்..
அது பிரிஞ்சதே இல்ல.. அது மறைஞ்சதே இல்ல..
தெனம் ஜோடி ஜோடியா இங்க செத்து கிடக்கும்டா..
அத தூக்கும் போதெல்லாம் என் நெஞ்சு வலிக்கும்டா..

நீ சொல்லும் காதல் எல்லாம் மலை ஏரி போச்சு சித்து..
தும்மல போல வந்து போகுது இந்த காதலு..
காதலுன்னு சொல்லுராங்க.. கண்டபடி சுத்துராங்க..
டப்பு கொறைஞ்சா.. மப்பு கொறைஞ்சா.. தள்ளி போறாங்க..
காதல் எல்லாமே ஒரு கண்ணாமூச்சி..
இதில் ஆணும் பெண்ணுமே தினம் காணாபோச்சி..
காதலிலே தற்கொலைகள் கொறைஞ்சே போச்சி..
உண்மை காதலே இங்கே இல்ல சித்தப்பு..
இங்க ஒருதன் சாகுறான் ஆனா ஒருதன் வாழுறான்..
அட என்னடா உலகம்... இதில் எத்தனை கலகம்..
இந்த காதலே பாவம்.. இது யார் விட்ட சாபம்..

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்..
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்..

இன்னிக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடிச்சு..
கண்ண பாக்குது.. கைய கோக்குது.. ரூமு கேக்குது..
எல்லாம் முடிஞ்ச பின்னும் பிரன்டுனு சொல்லிக்கிட்டு..
வாழுறவங்க ரொம்ப பேருடா.. கேட்டு பாருடா..
இப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல..
அட ஒன்னு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள..
இப்பல்லாம் தேவதாசு எவனும் இல்ல..
அவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குரான்..
அவ செலவு பண்ணதான் ஒரு லூச தெடுரா..
ரெண்டு பேருமே இங்கே பொய்யா பழகுரா..
ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியுரான்..


அவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குரான்..
அவ செலவு பண்ணதான் ஒரு லூச தெடுரா..
ரெண்டு பேருமே இங்கே பொய்யா பழகுரா..
ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியுரான்..



திரைப்படம் : கழுகு
இசை : யுவன் சங்கர் ராஜா
வரிகள்: சினேகன்
பாடியவர்கள்: வேல்முருகன், சிருஷ்ணராஜ், சத்யன்..



- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா 

அச்சமில்லை அச்சமில்லை..

Monday, May 07, 2012





அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.


துச்சமாக வெண்ணிநம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.


பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.


இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.


கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.


நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.


பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.


உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.




- மஹாகவி சுப்ரமணிய பாரதியார்




- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா 

காதலித்துப் பார்...

Sunday, May 06, 2012



காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்!


- கவிப்பேரரசு வைரமுத்து...


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

அந்தந்த வயதுகளில்...





இருபதுகளில்...

எழு உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு...
ஜன்னல்களை திறந்து வை...
படி.. எதையும் படி...
வாத்சாயனம் கூடக் காமம் அல்ல - கல்வி தான் படி...
உன் சட்டைப் பொத்தான் கடிகாரம்
காதல் சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில் விழுந்து விட்டதால் எந்திர அறிவுக் கொள்...
சப்தங்கள் படி
சூழ்ச்சிகள் அறி
பூமியில் நின்று வானத்தைப் பார்...
வானத்தில் நின்று பூமியைப் பார்...
உன் திசையை தெரிவு செய் நுரைக்க நுரைக்கக் காதலி
காதலை சுகி காதலில் அழு...
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்

முப்பதுகளில்....

சுருசுருப்பில் தேனீயாய் இரு நிதானத்தில் ஞானியாய் இரு...
உறங்குதல் சுருக்கு உழை நித்தம் கலவிகொள்
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்... கைப்பற்று...
ஆயுதம் தயாரி பயன்படுத்தாதே...
எதிரிகளை பேசவிடு.. சிறுநீர் கழிக்கையில் சிரி...
வேர்களை இடிப் பிழக்காத ஆழத்துக்கு அனுப்பு...
கிளைகளை சூரியனுக்கு நிழழ் கொடுக்கும் உயரத்திற்கு பரப்பு...
நிலைகொள்.

நாற்பதுகளில்...

இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்
செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி
எதிரிகளை ஒழி..
ஆயுதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு
பொருள் சேர்
இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு
பகல் தூக்கம் போடு
கவனம்... இன்னொருக் காதல் வரும்..
புன்னகை வரைப் போ... புடவை தொடாதே...
இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு...
இனிமேல் இலட்சியத்திற்கு நீதான் இலக்கு...

ஐம்பதுகளில்...

வாழ்க்கை - வழுக்கை இரண்டையும் ரசி
கொழுப்பை குறை... முட்டையின் வெண்கரு
காய்கறி கீரைகொள்
கணக்குப்பார்
நீ மனிதனா என்று வாழ்கையைக் கேள்..

அறுபதுகளில்....

இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது...
இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்...
விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு...
மனிதர்கள் போதும்
முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு
மனைவிக்குப் பேன்பார்
பழைய டைரி எடு... இப்போதாவது உண்மை எழுது...

எழுபதுகளில்...

இந்தியாவில் இது உபரி...
சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ
ஜன கண மன..!!!


- கவிப்பேரரசு வைரமுத்து எழுதியது...



- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா 

வைரமுத்து..

Friday, May 04, 2012




சில மாதங்களாக, ஒரு கருப்பு மனிதன் என்னை கொலை செய்துக்கொண்டிருக்கிறான் தன் வரிகளால்...

கத்தி முனையைவிட பேனா முனை கூர்மையானது என்பார்கள்.. ஆம் அது உண்மைதான்..

எந்த கத்தியும் என்னை கொன்றதில்லை, இவன் பேனா முனையைப்போல...

- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா