கடவுள் பாதி மிருகம் பாதி..

Sunday, April 08, 2012




அனைவருக்குள்ளும் கடவுள் பாதி, மிருகம் பாதி இருக்கிறது..
சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகளால் ஒரு சில நேரத்தில் கடவுள் குணம் வெளி வருகிறது, சில நேரங்களில் மிருகம் வெளிவருகிறது...
அதனால், ஒருவன் மிருகத்தனமாய் நடந்துக்கொண்டால் அவனிடத்தில் கடவுள் குணம் என்பது இருக்கவே இருக்காது என்று நினைப்பது தவறு...
அதே நேரத்தில், ஒருவனிடத்தில் தெய்வ குணம் இருக்குமேயானால், அவனிடத்தில் மிருக குணமும் மறைந்திருக்கும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது...

- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா

வலி

Wednesday, February 22, 2012



உனக்கு என்ன தெரியும்
என் வலியைப் பற்றி...

இரண்டு இதயத்தோடு
நீ இருக்கிறாய்...

என் இதயத்தையும் உனக்கு
கொடுத்துவிட்டு,
இதயம் இல்லாதவனாய் நான்...

-என்றும் அன்புடன்..


தினேஷ்மாயா

இன்னும் கொஞ்ச நாள்...



இணையதிற்கு அடிக்கடி என்னால் பழையபடி வர நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரத்தை படிப்பதற்காக எடுத்துக்கொள்வதால், வலையில் எழுத முடியவில்லை...

இன்னும் கொஞ்ச நாள் கழித்து பழையபடி என் எழுத்தை தொடர்வேன்..

- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா