ஒரு விநோதமான சிந்தனை

Friday, September 04, 2020


 

இன்று மதியம் வீட்டு பால்கனியில் நின்று காற்று வாங்கிக்கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு விசித்திரமான, விநோதமான சிந்தனை வந்து மறைந்தது.

இறக்கும் போது எப்படி இருக்கும். இறக்கும் உணர்வு எவ்வாறு இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன்.

அந்த நொடி சிலருக்கு வயது மூப்பின் காரணமாக உடனே வந்துவிடும், சிலருக்கு பிணிக் காரணமாக இழு இழு என்று இழுத்து பிறகே உயிர் பிரியும், சிலருக்கு எதிர்பாராமல் எந்த நேரத்திலும் எந்த விதத்திலும் வந்து சேரும்,  சிலர் தாங்களாகவே அந்த நொடியை தேடிக்கொள்வர்.

ஆனாலும், அனைவருக்கும் அந்த ஒரு நொடி ஒரேமாதிரியாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த மனித மூளைக்கு தெரியும். உயிர் என்றால் என்ன, உயிர் பிரியும் தருவாயில் அந்த மூளைக்கு உயிர் பிரியப்போகிறது என்று உணர முடியுமா ? அப்படி மனித உடல் உயிர் வாழ்வதை நீட்டிக்க எதையாவது செய்யுமா அல்லது, போதுமென தன் உழைப்பை முடித்துக்கொண்டு உயிரிடம் சரணடைந்துவிடுமா ?

உயிர் பிரியும் அந்த தருவாய் எப்படி இருக்கும் ?

வலி நிறைந்ததாக இருக்குமா ? ? ?

ஒரு விடயம் நீங்கள் கவனித்தீர்களா. இதுவரை மரணித்த எவரும் அந்த தருணம் எப்படி இருக்கும் என்று மீண்டு வந்து வாழ்பவர்களிடம் சொன்னதுமில்லை, அப்படி சொல்ல நினைத்தாலும் சொல்ல முடிவதுமில்லை. மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதையும் அவர்களால் நம்மிடம் பகிர்ந்துக் கொள்ளவும் முடிவதில்லை.

இதுதான் வாழ்க்கையின் இரகசியம் என்பதோ ?

அல்லது, இதனால்தான் வாழ்க்கையே இரகசியமாக இருக்கிறதோ ?

* தினேஷ்மாயா *



0 Comments: