இன்றைய இளைய சமுதாயத்தினர்
தங்கள் பெற்றோர்களையும், சமூகத்தில் சந்திக்கும் வயதானோரையும் கோபத்துடனும் அவ மரியாதையாகவும்
நடத்துவதை சில இடங்களில், சில நேரங்களில் பார்க்க முடிகிறது.
அவர்கள் அனைவருக்கும்
நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். முதுமை என்பது இயற்கையானது, ஒவ்வொரு மனிதருக்கும்
முதுமை வந்தே தீரும். இன்று நாம் இளமையாக இருக்கிறோம் என்கிற ஒரே காரணத்தால் நம்மைவிட
வயதில் முதியவர்களை என்றும் தவறாக எண்ணக்கூடாது, தவறாக பேசக்கூடாது. இன்று நாம் இளமையாக
இருக்கலாம், ஆனால் நாளை முதுமை நமக்கும் வரும்.
முதுமை என்பது கொடியது,
இளமை நிரந்தரமானதல்ல ஆனால் முதுமை நிச்சயமானது.
அதை என்றும் மறந்து விடக்கூடாது.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment