skip to main |
skip to sidebar
எனது உடலும்
* தினேஷ்மாயா *
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
* தினேஷ்மாயா *
மதுரசம்
Tuesday, December 31, 2019
Posted by
தினேஷ்மாயா
@
12/31/2019 10:25:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
எனது உடலும்
Sunday, December 29, 2019
எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…
எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…
கொடுக்கும் குணமே
அதுவும் உனது
பொறுத்து எனை ஏற்கனும்
கொடுக்கும் குணமே
அதுவும் உனது
பொறுத்து எனை ஏற்கனும்
எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…
எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…
ஆதி அந்தம் கடந்த அறிவே
அனைத்தும் உனதாணையே
ஆதி அந்தம் கடந்த அறிவே
அனைத்தும் உனதாணையே
ஜோதி வடிவாய் திகழும் அருளே
துதிக்கும் அடியேனையே
ஜோதி வடிவாய் திகழும் அருளே
துதிக்கும் அடியேனையே
கருணை கொண்டு கனிந்து இரங்கி
காத்து கரை சேர்க்கணும்
எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…
எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…
செய்த வினையும் செய்யும் வினையும்
உனது தவ தீயிலே
செய்த வினையும் செய்யும் வினையும்
உனது தவ தீயிலே
தீந்து கருகி தணிந்து
நீராய் ஈர்ந்த நிலையாகவே
தீந்து கருகி தணிந்து
நீராய் ஈர்ந்த நிலையாகவே
ஐந்து புலனும் அடங்கி போகும்
ஆணை தனை போடணும்
எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…
எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…
கொடுக்கும் குணமே
அதுவும் உனது
பொறுத்து எனை ஏற்கனும்
கொடுக்கும் குணமே
அதுவும் உனது
பொறுத்து எனை ஏற்கனும்
எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…
எனது உடலும்
உயிரும் பொருளும்
சகலம் ரமணார்ப்பணம்…
இசை தொகுப்பு: ராஜாவின் ரமணமாலை
இசை, வரிகள், குரல்: இசைஞானி
இளையராஜா
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
12/29/2019 05:42:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
சுற்றுகிற உலகத்திலே
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப்
பிடித்தவரே.....
இன்னும் ஒருமுறை பிறப்பீரா?மறுபடி
மறுபடி இறப்பீரா?
நற்பெருவழி வருவீரா?இல்லை ஒரு
சிறுவழி போவீரா?
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து
போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து
போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப்
பிடித்தவரே.....
அப்பனைசுற்றும் அம்மை உண்டு....அன்னையைசுற்றும்
பிள்ளை உண்டு....
அப்பனைசுற்றும் அம்மை உண்டு....அன்னையைசுற்றும்
பிள்ளை உண்டு....
கன்னியை சுற்றி வரும் காளையும்
இங்குண்டு...
கன்னியையும் காளையையும் சுற்ற வைக்கும் காதலும்
இங்குண்டு....
அட பாட்டன் போனான் ,அப்பன்
போனான்,பிள்ளைகளும் அவன் பின்னாலே..
அரசன் போனான் ,ஆண்டி போனான்,தொடர்ந்து
சென்றவரும் பின்னாலே...
சுற்றிச்சுழன்றவர் வாழ்க்கையிலே,சுகத்தில் இருப்பவர்கள் யாருமில்லே...
எதை எதையோ சுற்றாதீர்,பதைபதைத்து
நிற்க்காதீர்...
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து
போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து
போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப்
பிடித்தவரே.....
கல்விக்கு சுற்றும் மாணவரும்,வேலைக்குச் சுற்றும் பட்டதாரியும்,
மேல் பதவிக்காகச் சுற்றும் மனிதர்களும்,சிறு உதவிக்காகச் சுற்றும்
எளியவரும்,
கல்வியும் பதவியும் கலை தரும் ஞானமும்
மனிதனைச் சுற்றவில்லை...
வல்வினை தொல்வினை தன்னைச் சுற்றி வருவதை
மனிதனும் உணரவில்லை...
உன்மேல் உன்னை விட பிரியமுள்ளாவர்
உலகதிலுண்டோ?
உன்சுமைகளையே தன்சுமையென்று சுமப்பவருண்டோ?
பாரத்தை அண்ணாமலையில் போட்டு சுகமாய் பாடி
ஆடிப்போ...
நேரத்தை வீணாய் கழிக்காமல் நீ
சரணம் என்றே பாடிப்போ...
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப்
பிடித்தவரே.....
இன்னும் ஒருமுறை பிறப்பீரா?மறுபடி
மறுபடி இறப்பீரா?
நற்பெருவழி வருவீரா?இல்லை ஒரு
சிறுவழி போவீரா?
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து
போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து
போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
இசை தொகுப்பு: ராஜாவின் ரமணமாலை
இசை, வரிகள், குரல்: இசைஞானி
இளையராஜா
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
12/29/2019 05:36:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
மீட்டெடு
Monday, December 23, 2019
Posted by
தினேஷ்மாயா
@
12/23/2019 10:43:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
காதல் மழை
Posted by
தினேஷ்மாயா
@
12/23/2019 10:34:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
நேசம்
Posted by
தினேஷ்மாயா
@
12/23/2019 09:57:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
வாழ்க்கைப் பயணம்
Posted by
தினேஷ்மாயா
@
12/23/2019 09:47:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
அவள் ஸ்பரிசம்
Posted by
தினேஷ்மாயா
@
12/23/2019 09:40:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
கண்ணாடிப் பாவை
Posted by
தினேஷ்மாயா
@
12/23/2019 09:33:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
பெண்சிலை
Posted by
தினேஷ்மாயா
@
12/23/2019 09:27:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
தேவதை வருகை
Sunday, December 22, 2019
Posted by
தினேஷ்மாயா
@
12/22/2019 08:04:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
வானவில் மங்கை
Posted by
தினேஷ்மாயா
@
12/22/2019 08:03:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
ஓட்டப் பந்தயம்
Posted by
தினேஷ்மாயா
@
12/22/2019 07:55:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
பேரீச்சம் அழகி
Posted by
தினேஷ்மாயா
@
12/22/2019 07:45:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
Saturday, December 21, 2019
சின்னப் பயலே சின்னப்
பயலே சேதி கேளடா
சின்னப் பயலே சின்னப்
பயலே சேதி கேளடா நான்
சொல்லப் போற வார்த்தையை
நல்லா
எண்ணிப் பாரடா நீ
எண்ணிப் பாரடா
சின்னப் பயலே சின்னப்
பயலே சேதி கேளடா
ஆளும் வளரணும் அறிவும்
வளரணும்
அது தாண்டா வளர்ச்சி
ஆளும் வளரணும் அறிவும்
வளரணும்
அது தாண்டா வளர்ச்சி
உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே
நீ தரும் மகிழ்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே
நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம்
கூறும் காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடு தான்
பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி
உன் நரம்போடு தான்
பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி
சின்னப் பயலே சின்னப்
பயலே சேதி கேளடா
மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா தம்பி
மனதில் வையடா
மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா தம்பி
மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே
நீ வலது கையடா
நீ வலது கையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே
நீ வலது கையடா
நீ வலது கையடா
தனியுடமைக் கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா நீ
தொண்டு செய்யடா
தனியுடமைக் கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா நீ
தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும்
என்பது பழைய பொய்யடா
எல்லாம் பழைய பொய்யடா
சின்னப் பயலே சின்னப்
பயலே சேதி கேளடா
வேப்பமர உச்சியில் நின்னு
பேயொண்ணு ஆடுதுண்ணு...
வேப்பமர உச்சியில் நின்னு
பேயொண்ணு ஆடுதுண்ணு
விளையாடப் போகும் போது சொல்லி
வைப்பாங்க உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே
நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி
விடாதே நீ வெம்பி விடாதே
சின்னப் பயலே சின்னப்
பயலே சேதி கேளடா
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
12/21/2019 06:31:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
சூழ்ச்சியிலே சுவரமைத்து
சுயநலத்தால் கோட்டைகட்டிச்
சுடர்விட்ட நீதிதனைத்
தூக்கி எறிந்துவிட்டுச்
சாட்சிகள் வேண்டாம்
சகலமும் நானென்று
சதிராடும் வீணர்களின்
அதிகார உலகமடா
புதிரான உலகமடா _ உண்மைக்கு
எதிரான உலகமடா _ இதில்
பொறுமையைக் கிண்டிவிடும்
போக்கிரிகள் அதிகமடா
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா
இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை
ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும்
உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா
அன்பு படர்ந்த கொம்பினிலே
ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும்
குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
12/21/2019 06:21:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
என்னபண்ணிக் கிழிச்சீங்க?
சொல்லுறத சொல்லிப்புட்டேன்
செய்யுறதச் செஞ்சிடுங்க
செய்யுறதச் செஞ்சிடுங்க
நல்லதுன்னா கேட்டுக்குங்க
கெட்டதுன்னா விட்டுடுங்க
முன்னாலே வந்தவங்க
என்னென்னமோ சொன்னாங்க
மூளையிலே ஏறுமுன்னு
முயற்சியும் செஞ்சாங்க
ஒண்ணுமே நடக்காம
உள்ளம் நொந்து செத்தாங்க
என்னாலும் ஆகாதுன்னு
எனக்கும் தெரியுமுங்க
முடியிருந்தும் மொட்டைகளாய்
மூச்சிருந்தும் கட்டைகளாய்
விழியிருந்தும் பொட்டைகளாய்
விழுந்துகிடக்கப் போறீங்களா?
முறையைத் தெரிந்து நடந்து
பழைய நினைப்பை மறந்து
உலகம் போற பாதையில
உள்ளம் தெளிஞ்சு வாரீங்களா?
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாம்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
திரைப்படம்: பாண்டித் தேவன்
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
12/21/2019 06:14:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Subscribe to:
Posts (Atom)
பதிவுகள்...
-
▼
2019
(138)
-
▼
December
(34)
- மதுரசம்
- எனது உடலும்
- சுற்றுகிற உலகத்திலே
- மீட்டெடு
- காதல் மழை
- நேசம்
- வாழ்க்கைப் பயணம்
- அவள் ஸ்பரிசம்
- கண்ணாடிப் பாவை
- பெண்சிலை
- தேவதை வருகை
- வானவில் மங்கை
- ஓட்டப் பந்தயம்
- பேரீச்சம் அழகி
- சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
- குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
- என்னபண்ணிக் கிழிச்சீங்க?
- உள்ளதைச் சொன்னா குத்தமில்லை...
- காசேதான் கடவுளோ !
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்..
- இயர்ஃபோன்ஸ்
- என்னவென்று அழைக்க ?!
- உடனடி கவிதை !!
- வாழ்வின் பயணம்
- கை கூடும் நாளை !!
- என் கண்கள் வழியே
- புதுக்கவிதை
- நான்காம் பால்
- மறுபிறவி
- முள்
- வர்ணம்
- இதுதான் சமூகம் !
- தீப்பொறி
- மழை சிறை
-
▼
December
(34)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !