ஏ .......
ஈரோட்டுக் கிழவா,
நீ என்ன செய்யவில்லை எங்களுக்கு?
கோவணம் மட்டுமே கட்டிக் கொண்டிருந்தவனின் பேரன்
இன்று அரசு அலுவலகத்தில் அதிகாரி!
வயலில் நாற்றுநட்டுக் கொண்டிருந்தவளின் மகள்
இன்று மருத்துவக் கல்லூரி மாணவி!
மழைக்கு ஒழுகும் குடிசையில் பிறந்தவன்
இன்று ஊரில் பெரிய சிவில் இன்ஜினியர்!
சாக்கடை அள்ளிவன் வீட்டுப் பிள்ளை
இன்று நகராட்சி ஆணையர்!
பேனா பிடித்து எழுத தெரியாத பெற்றோர்க்கு பிறந்தவன்
இன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்!
கோயிலில் நுழையக் கூடாத ஜாதியில் பிறந்தவன்
இன்று இந்துசமய அறநிலையத் துறை அதிகாரி!
ஜமீன்தார் தோட்டத்து பண்ணையாளின் மகன்
இன்று ஜில்லா கலெக்டர்!
பேருந்து வசதியில்லாத ஊரில் பிறந்தவன்
இன்று போக்குவரத்து ஆய்வாளர்!
உயர்ஜாதியினர் முன்பு நிமிர்ந்து நிற்க முடியாத ஜாதியில் பிறந்தவன்
இன்று மிடுக்காக நிற்கும் போலீஸ் அதிகாரி!
ஏடெடுத்துப் படிக்கத் தெரியாதவன் வீட்டுப் பிள்ளை
இன்று ஐடி துறையில் அமெரிக்காவில்!
இவை அனைத்தும்,
கல்விக் கடவுள் சரஸ்வதியால் கிடைத்ததல்ல
மூத்திரச்சட்டியை ஒரு கையில் பிடித்துக் கொண்டே
ஈரோட்டுக் கிழவன் போராடியதால் கிடைத்தது!
நன்றி என்ற உணர்ச்சி இருக்கும்வரை
பெரியார் வாழ்வார்!
#பகிர்ந்தது..
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment