பெரியார் வாழ்வார்!

Monday, May 27, 2019



ஏ .......
ஈரோட்டுக் கிழவா,

நீ என்ன செய்யவில்லை எங்களுக்கு?

கோவணம் மட்டுமே கட்டிக் கொண்டிருந்தவனின் பேரன்
இன்று அரசு அலுவலகத்தில் அதிகாரி!

வயலில் நாற்றுநட்டுக் கொண்டிருந்தவளின் மகள்
இன்று மருத்துவக் கல்லூரி மாணவி!

மழைக்கு ஒழுகும் குடிசையில் பிறந்தவன்
இன்று ஊரில் பெரிய சிவில் இன்ஜினியர்!

சாக்கடை அள்ளிவன் வீட்டுப் பிள்ளை
இன்று நகராட்சி ஆணையர்!

பேனா பிடித்து எழுத தெரியாத பெற்றோர்க்கு பிறந்தவன்
இன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்!

கோயிலில் நுழையக் கூடாத ஜாதியில் பிறந்தவன்
இன்று இந்துசமய அறநிலையத் துறை அதிகாரி!

ஜமீன்தார் தோட்டத்து பண்ணையாளின் மகன்
இன்று ஜில்லா கலெக்டர்!

பேருந்து வசதியில்லாத ஊரில் பிறந்தவன்
இன்று போக்குவரத்து ஆய்வாளர்!

உயர்ஜாதியினர் முன்பு நிமிர்ந்து நிற்க முடியாத ஜாதியில் பிறந்தவன்
இன்று மிடுக்காக நிற்கும் போலீஸ் அதிகாரி!

ஏடெடுத்துப் படிக்கத் தெரியாதவன் வீட்டுப் பிள்ளை
இன்று ஐடி துறையில் அமெரிக்காவில்!

இவை அனைத்தும்,
கல்விக் கடவுள் சரஸ்வதியால் கிடைத்ததல்ல
மூத்திரச்சட்டியை ஒரு கையில் பிடித்துக் கொண்டே
ஈரோட்டுக் கிழவன் போராடியதால் கிடைத்தது!

நன்றி என்ற உணர்ச்சி இருக்கும்வரை
பெரியார் வாழ்வார்!

#பகிர்ந்தது..

* தினேஷ்மாயா *

அரசியல் முதிர்ச்சி

Friday, May 24, 2019


   


   நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் வெற்றியை கொண்டாடுவதை பார்க்கும்போது தங்கள் கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடுவதைவிட மற்ற கட்சி தோற்றுவிட்டதை கொண்டாடும் மக்களே அதிகமாக இருக்கிறார்கள். இதுவே இந்த மக்களின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது

* தினேஷ்மாயா *

மனதில் இருந்து...

Thursday, May 16, 2019


     என்னவளுக்கும் எனக்கும் சண்டைகள் வரும். பலநேரம் சிறிதாய், சிலநேரம் பெரிதாய். இதுபொன்ற சண்டைகள் வரும்போதெல்லாம், இருவருமே கோபத்தில், அவசரத்தில் ஏதாச்சும் வார்த்தையை பேசிவிடுவது சகஜம். ஆனால், அந்த வார்த்தையே எங்களுக்குள் பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிட கூடாது என்பதற்காக, நாங்கள் இருவருமே ஒரு உடன்படிக்கைக்கு வந்துவிட்டோம். என்னவென்றால், இதுபோன்ற சண்டையிடும் நேரத்தில், நாங்கள் கோபமக பேசும் வார்த்தைகள் எதுவும் எங்கள் மனதில் இருந்து வந்ததில்லை, அந்த வார்த்தைகளை மற்றொருவரை வேண்டுமென்று புண்படுத்த பேசிய வார்த்தையில்லை என்கிற புரிதலை கொண்டிருக்கிறோம். 

   அதனால், கோபத்தில் பேசும் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அந்த சண்டையை பெரிதாக்க மாட்டோம். இதுபோல் நீங்களும் பின்பற்றி பாருங்கள். கணவன் மனைவி உறவு அதன் புனிதத்தன்மை கெடாமல் என்றும் இனிமையாக இருக்கும்...


அன்புடன்

* தினேஷ்பூர்ணிஷா *

இணையே என் உயிர் துணையே

Wednesday, May 08, 2019



இணையே என் உயிர் துணையே
உன் இமை திறந்தால்
நான் உறைவது ஏனடி ?
அழகே என் முழு உலகம்
உன் விழிகளிலே
கண் உறங்குது பாரடி

அருகே.. நீ இருந்தால்..
என் கைபேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
தேனீரில் தேன் கூடுமே

துணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா ?
யுகமாய் கை விரல் பிடித்து
நான் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா ?
இணையே....

மையல் காதலாய் மாறிய புள்ளி
என்றோ மனம் கேட்குதே

காதல் காமமாய் உருகொண்ட தருணம்
நினைக்கையில் உயிர் வேர்க்குதே

உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்

எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்

இணையே என் உயிர் துணையே
உன் இமையினலே
நான் கரைவது ஏனடி ?

யுகமாய் கை விரல் பிடித்து
நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா ?

அருகே நீ இருந்தால்
என் கைபேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே

இணையே என் உயிர் துணையே
உன் இமையினிலே
நான் கரைவது ஏனடி
யுகமாய் கை விரல் பிடித்து
நான் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா
இணையே

படம் : தடம்
வரிகள் : மதன் கார்க்கி
இசை : அருண் ராஜ்
குரல் : சித் ஸ்ரீராம் , பத்மலதா

இப்பாடல் வரிகள் என்னவளுக்கு சமர்ப்பணம் செய்ய விரும்புகிறேன்..

* தினேஷ்மாயா *

மண்ணுக்குள்

Monday, May 06, 2019




மண்ணுக்குள் செல்வதை எண்ணி வருந்தாதே...

மண்ணுக்குள் செல்வதுதான் விதையாகிறது..

மண்ணுக்குள் செல்வதுதான் வைரமாகிறது..

* தினேஷ்மாயா *