வான் தூறல்...

Monday, February 04, 2019

வான் தூறல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே மின்னும் மின்மினியே...

விதையே புரட்டி போட்டாலும் விண்ணை பார்த்துதான் முளைக்கும் 
பேரன்பினால் வாழ்க்கையின் கோணல்கள் நேர்படும் 

பருவம் கடந்து போனாலும் அருகம்புள் சாகாது 
ஓர் தூறலில் மொத்தமாய் பச்சையாய் மாறிடும் 

வான் தூறல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே மின்னும் மின்மினியே...

எங்கே சென்று வீழ்வதென்று
சிந்தும் மழை அறிந்ததில்லை
சொந்த பந்தம் யார்வசம் என்று
தேடும் உயிர் தெரிந்ததில்லை

மேகம் அற்ற வானத்தின் கீழே
தாகம் உற்ற பறவையே போல
ஏதும் அற்று பறந்த போதும்
நாடும் துணைகள்

ஈரப்பதம் காற்றில் இருந்தால் 
தூரத்திலே காடு தெரிந்தால் 
பக்கம் தானே நீர்நிலை என்று பேசும் குரல்கள் 

வான் தூறல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே

மெல்ல தானே சொல்லும் மாறும்
சொல்லித்தானே சோகம் தீரும்
வாழும் ஆசை உள்ள பேர்க்கே
வாழ்க்கை என்றும் இனிக்கும்

ஊனம் பட்ட ஜீவன் ஏதும் 
பட்டினியால் சாவதில்லை 
எங்கோ செல்லும் எறும்பு கூட இரை கொடுக்கும் 

மேகம் மட்டும் வானம் இல்லை
தேகம் மட்டும் வாழ்க்கை இல்லை
புலன்களை கடந்துகூட இன்பம் இருக்கும்...

வான் தூறல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே மின்னும் மின்மினியே...

படம்: பேரன்பு
இசை: யுவன்
வரிகள்: வைரமுத்து
குரல்: ஸ்ரீராம் பார்த்தசாரதி

நா.முத்துகுமார் அவர்கள் இல்லாத குறையை வைரமுத்து அவர்கள் இந்த பாடலின் வழியாக பூர்த்தி செய்துவிட்டார் என்றே நான் சொல்வேன். வரிகளில் ததும்பும் அன்பும் அதன் ஆழமும் அற்புதம்.

* தினேஷ்மாயா *

0 Comments: