அனுபவமே கடவுள் - கண்ணதாசன்

Wednesday, February 06, 2019



பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்

அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்

பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்

பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்

முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்

வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்

இறந்து பாரென இறைவன் பணித்தான்!

'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்

ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி

'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

 - கவியரசர் கண்ணதாசன்

* தினேஷ்மாயா *

ஏக்கத்துக் கொருவர் போதும்.



அன்புக்கோ இருவர் வேண்டும்

அழுகைக்கோ ஒருவர் போதும்

இன்பத்துக் கிருவர் வேண்டும்

ஏக்கத்துக் கொருவர் போதும்.


- கவியரசர் கண்ணதாசன்


* தினேஷ்மாயா *

அவளுக்கும் தமிழ் என்று பேர்




அவளுக்கும் தமிழ் என்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர் அசைகின்ற தேர்

அவளுக்கு நிலவென்று பேர்
வண்ண மலர் கொஞ்சும்
குழல் அந்த முகிலுக்கு நேர்

அவளுக்கு குயிலென்று பேர்
அந்த குயில் கொண்ட குரல்
கண்டு கொண்டாடும் ஊர்

அவளுக்கு அன்பென்று பேர்
அவளுக்கு அன்பென்று பேர்
அந்த அன்பென்ற பொருள் நல்ல
பெண்மைக்கு வேர் பெண்மைக்கு வேர்

அவளுக்கும் தமிழ் என்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர் அசைகின்ற தேர்

அவள் எந்தன் அறிவுக்கு நூல்
அவள் மொழிகின்ற வார்த்தைகள்
கவிதைக்கு மேல் கவிதைக்கு மேல்

அவளுக்கு அழகென்று பேர்
அந்த அழகெந்தன் உள்ளத்தை
உழுகின்ற ஏர் உழுகின்ற ஏர்

அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர் அசைகின்ற தேர்

அவளுக்கு உயிர் என்று பேர்
என்றும் அவள் எந்தன் வாழ்வெனும்
வயலுக்கு நீர் வயலுக்கு நீர்

அவள் எந்தன் நினைவுக்கு தேன்
இந்த மனம் எனும் கடலுக்கு கரை கண்ட வான்
அவள் எந்தன் நினைவுக்கு தேன்
இந்த மனம் எனும் கடலுக்கு கரை கண்ட வான்

அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர் அசைகின்ற தேர்

படம்: பஞ்சவர்ண கிளி
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: வாலி
குரல்: டி.எம்.சௌந்தர்ராஜன்

 * தினேஷ்மாயா *

தமிழுக்கும் அமுதென்று பேர்





தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)

ஆசிரியர்: பாவேந்தர் பாரதிதாசன்



எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை....

* தினேஷ்மாயா *

தாயும் யாரோ ? தந்தை யாரோ ?




தாயும் யாரோ ?
தந்தை யாரோ ?
நானும் யாரோ?
யார் யாரோ?

ஜனனத்தின் முன்னும்
சாவின் பின்னும்
சொந்தம் பந்தம்
யார் யாரோ?

பறவை எல்லாம் றெக்கை வந்தால்
தாயைக் கூட்டில் தேடாது
மனிதன்
கொண்ட பாசம் மட்டும்
வேகும்போதும் போகாது

தாயும் யாரோ ?
தந்தை யாரோ ?
நானும் யாரோ?
யார் யாரோ?

மனிதன் யாரப்பா ?
சிந்திக்கும் மிருகம்
இரை தந்தால் பழகும்
பசி வந்தால்
விலகும்

பாசம் பந்தங்கள்
கற்பித்த உலகம்
இதயங்கள் கருகும்
என்றாலும் உருகும்..

சொந்தம் என்கின்ற
சுமையே கூடாது
பட்டாம் பூச்சிக்கு
பாரம் ஆகாது

அவமானம் தாங்கும்
வாழ்க்கை வந்தால்
அன்பு தொல்லையே

கடலில் பிறந்தாலும்
முகில் எங்கோ அலையும்
மழை எங்கோ பொழியும்
அதுபோல்தான் உறவும்

தாய்க்குப் பிறந்தாலும்
தாய் வேறு உலகம்
மகன் வேறு உலகம்
இதில் என்ன பாசம்?

வீசும் காற்றுக்கு
தேசம் கிடையாது
வீதிக்கு வந்த மனம்
பாசம் அறியாது

நான் என்னை மட்டும்
நம்பி நம்பிப் பயணம் போகின்றேன்...

தாயும் யாரோ ?
தந்தை யாரோ ?
நானும் யாரோ?
யார் யாரோ?

ஜனனத்தின் முன்னும்
சாவின் பின்னும்
சொந்தம் பந்தம் 
யார் யாரோ?

பறவை எல்லாம் றெக்கை வந்தால்
தாயைக் கூட்டில் தேடாது
மனிதன்
கொண்ட பாசம் மட்டும்
வேகும்போதும் போகாது

தாயும் யாரோ ?
தந்தை யாரோ ?
நானும் யாரோ?
யார் யாரோ?

படம்: பெரியார்
இசை: வித்யாசாகர்
வரிகள்: வைரமுத்து
குரல்: கே.ஜே.ஏசுதாஸ்

பாடலை தனியாக கேட்கும்போது ஒரு உணர்வை தருகிறது. படத்தில் பார்க்கும்போது துயரத்தையும் கண்ணீரையும் தருகிறது. வரிகள், இசை, குரல் என அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த பாடல் ஏதோ செய்கிறது..

 * தினேஷ்மாயா *

வளர்ந்த குழந்தை


வளர்ந்த குழந்தை நீ !

* தினேஷ்மாயா *

பனி தேவதை


பனிப்பொழிவில் இருந்து

உயிர்த்தெழுந்து வந்த

தேவதை !!

* தினேஷ்மாயா *

அடிமை நிலா !


ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறாய்

உன் பார்வையினாலே அந்த நிலாவை

உனக்கு அடிமையாக்கிவிடலாமே நீ ?

* தினேஷ்மாயா *

நீதானே கரு !



நான் வடிக்கும் கவிதைகள் உன்னைப்பற்றி இல்லை என நினைக்கிறாயா !?

கவியெழுத கரு கொடுப்பவளும் நீதான், கவியெழுதும் ஆர்வத்தையும், இரசனையையும் நீதானே கொடுக்கிறாய்... பிறகென்ன ?

* தினேஷ்மாயா *

அவள் சினுங்கல்கள்



   இரவு முழுவதும் இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களை கேட்டால் என்ன மாதிரியான ஓர் உணர்வு கிடைக்குமோ, அதே உணர்வை உன் சினுங்கல்கள் எனக்கு தந்துவிடுகிறதே !


























நான் விழுகிறேன்




அவள் எட்டி பார்க்கிறாள்

நான் விழுகிறேன் !


* தினேஷ்மாயா *

சர்வம் தாளமயம்..

Monday, February 04, 2019


   சர்வம் தாளமயம்..


  இயக்குனர் ராஜிவ் மேனன் கொஞ்சம் கமர்ஷியலாக கொடுத்திருக்கும் இசை விருந்து. கதைக்கரு அருமை. திரைக்கதை இழுவையாக தெரிந்தாலும், ஒட்டுமொத்தமாக இரசிக்கும்படியான ஒரு திரைப்படம் சர்வம் தாளமயம். ARR அவர்களின் இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது. 

    இசை பிரியர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வகையான இரசிகர்களுக்குமான படம் இது.


* தினேஷ்மாயா *

பேரன்பு



   இயக்குனர் ராம் அவர்களின் மற்றுமொரு உயிரை வருடும் படைப்பு “பேரன்பு”

          படத்தின் முதல்பாதி முழுவதும், இயற்கை காட்சிகளால் அழகான காட்சியமைப்பால் மனதுக்குள் ஏதோ செய்கிறது. அருமையான கதை, திரைக்கதை. படத்திற்கு பிண்ணனி இசை ஒரு மிகப்பெரிய பலம். யுவனிடமிருந்து மீண்டும் ஒரு அருமையான இசைக்கோர்வை கிடைத்திருக்கிறது.

        12 அத்தியாயங்களாக பேரன்பை விளக்குகிறார் இயக்குனர்.

இயற்கை அதிசயமாந்து, இயற்கை ஆபத்தானது, இயற்கை அற்புதமானது, இயற்கை கொடூரமானது.. இப்படி பல அத்தியாயங்களாக கதை நகர்கிறது. இயற்கைக்குத்தான் ஆண் பெண் என்கிற பாகுபாடெல்லாம். ஆனால் அன்பிற்கும் பேரன்பிற்கும் அந்த பாகுபாடெல்லாம் தெரியாது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

இயற்கையை நம் தேவைக்காக வளைக்காமல் இயற்கையின் போக்கில் வாழ்க்கையை வாழ சொல்கிறது இந்த பேரன்பு !

* தினேஷ்மாயா *

அன்பே அன்பின் அத்தனையும் நீயே




அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
வானத்தையும் நிலத்தையும் நிரப்பிடவே
ஒரு பறவை போதும் போதும்.....

கடல் சுமந்த.. சிறு படகே ...

அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே...

குருவி நீந்தும் நதியே
மீன்கள் பறக்கும் வனமே
சுட்டும் குளிரும் சுடரே மாயமே...

ஏரி நீரில் உன் முகம்தான் விழுகையிலே
ஏந்தி கொள்ள தேவதைகள் வந்திடுமே
திசைகள் தொலைத்தேனே... அலையில் மிதந்தேனே..
தீவை போல வந்தாய் நின்றாய் நீயே...
கடல் சுமந்த சிறு படகே..

அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே...

ஓஹ்... கடவுளின் கைகளை கண்டது உன்னிடம் மட்டும்தான் 
என் உயிர் பூமியில் பிறந்தது பிடித்தது இந்நொடி மட்டும்தான்

இடியும் மின்னலும் முறிந்தது இன்று
தனியாய் மரம் ஒன்று வென்றது நின்று

நிலவின் மொழியில் நீ
நிலத்தின் மொழியில் நான்
பேச பேச பூக்கள் பேசுதே
ஓஹ் என் மகளே...
ஓஹ் என் மகளே...
ஓஹ் என் மகளே...
ஓஹ்...

படம்: பேரன்பு
இசை: யுவன்
வரிகள்: சுமதி ராம்
குரல்: கார்த்திக்

* தினேஷ்மாயா *

செத்து போச்சு மனசு...



செத்து போச்சு மனசு...
செவிடாச்சு பூமி...
குருடாச்சு சாமி
யார நானும் கேப்பேன் இந்த பூமி பந்துல
என்ன விட்டு போன நீயும் எங்க தெரியல ?

செத்து போச்சு மனசு...

இருள் இங்கு ஆச்சு
நிலா எங்கு போச்சு
யார நானும் கேப்பேன் அட விதியே சொல்லிடு
மரமானா செடியை தோளில் எப்படி சுமப்பது
செத்து போச்சு மனசு...
செத்து போச்சு மனசு...

அட நின்னு உறங்க கூடத்தான் இந்த மண்ணில் இடம் இல்லை
மர கிளையில் தங்க போனாலும் அட பறவையும் அங்கு விட வில்லை
செத்து போச்சு மனசு...
செத்து போச்சு மனசு...

காக்கா குஞ்சி போல கரையாத காலம் இல்ல
மரத்து கீழ நிக்கும் நீயும் நிமிர்ந்து கூட பாக்க வில்லை
முடியாது என்றான போதும் நான் முயன்றுதான் தோற்கிறேன்
விடியாது என்றான போதும் நான் கிழக்கையே பார்க்கிறேன்

இறக்கையின் தீர்ப்பில் நான் குற்றவாளியா
அதை திருத்தி எழுத யாரும் இல்லையா
செத்து போச்சு மனசு...
செத்து போச்சு மனசு...

என்ன போல ஜீவன் எல்லாம் ஒதுங்கி கொள்ள இடமும் இல்ல
உன்ன விட வாழ்வில் இங்கு எனக்குன்னு யாரும் இல்ல
என் மீதினில் மோதும் காத்து...

என் மீதினில் மோதும் காத்து...
அது பாவத்தின் ஈறமே
உன் மீதினில் சாயும் போது
என் சாபங்கள் தீருமே

குடைகளை கண்டு மழையும் வானில் நிற்காதே
தடைகளை கண்டு வாழ்க்கை பாதியில் முடியாதே
மெல்ல துடிக்கும் மனசு...

படம்: பேரன்பு
இசை: யுவன்
வரிகள்: கருணாகரன்
குரல்: மது


* தினேஷ்மாயா *

வான் தூறல்...




வான் தூறல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே மின்னும் மின்மினியே...

விதையே புரட்டி போட்டாலும் விண்ணை பார்த்துதான் முளைக்கும் 
பேரன்பினால் வாழ்க்கையின் கோணல்கள் நேர்படும் 

பருவம் கடந்து போனாலும் அருகம்புள் சாகாது 
ஓர் தூறலில் மொத்தமாய் பச்சையாய் மாறிடும் 

வான் தூறல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே மின்னும் மின்மினியே...


எங்கே சென்று வீழ்வதென்று
சிந்தும் மழை அறிந்ததில்லை
சொந்த பந்தம் யார்வசம் என்று
தேடும் உயிர் தெரிந்ததில்லை

மேகம் அற்ற வானத்தின் கீழே
தாகம் உற்ற பறவையே போல
ஏதும் அற்று பறந்த போதும்
நாடும் துணைகள்

ஈரப்பதம் காற்றில் இருந்தால் 
தூரத்திலே காடு தெரிந்தால் 
பக்கம் தானே நீர்நிலை என்று பேசும் குரல்கள் 

வான் தூறல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே

மெல்ல தானே சொல்லும் மாறும்
சொல்லித்தானே சோகம் தீரும்
வாழும் ஆசை உள்ள பேர்க்கே
வாழ்க்கை என்றும் இனிக்கும்

ஊனம் பட்ட ஜீவன் ஏதும் 
பட்டினியால் சாவதில்லை 
எங்கோ செல்லும் எறும்பு கூட இரை கொடுக்கும் 

மேகம் மட்டும் வானம் இல்லை
தேகம் மட்டும் வாழ்க்கை இல்லை
புலன்களை கடந்துகூட இன்பம் இருக்கும்...

வான் தூறல் என் தோள்கள் மேலே வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே மின்னும் மின்மினியே...


படம்: பேரன்பு
இசை: யுவன்
வரிகள்: வைரமுத்து
குரல்: ஸ்ரீராம் பார்த்தசாரதி


நா.முத்துகுமார் அவர்கள் இல்லாத குறையை வைரமுத்து அவர்கள் இந்த பாடலின் வழியாக பூர்த்தி செய்துவிட்டார் என்றே நான் சொல்வேன். வரிகளில் ததும்பும் அன்பும் அதன் ஆழமும் அற்புதம்.

* தினேஷ்மாயா *