தோழா தோழா

Tuesday, August 21, 2018


Ji, Bro, Boss.. நமக்கு அறிமுகம் இல்லாதவர்களை இந்த பெயர்களை சொல்லி அழைப்போம். இவை அந்நிய மொழிகளாக இருந்தாலும், அவை நமக்கு பரிச்சயமாகிவிட்டது.

ஆனால், நம்.தாய்மொழியாகிய தமிழில், "தோழர், தோழா, தோழரே, நண்பா" இப்படி அழைப்பதற்கு தயக்கம் காட்டுகிறோம்.

இதில் புது வதந்தி ஒன்று பரவி வருகிறது. ஒருமுறை அதிகம் பழக்கம் இல்லாத நபர் ஒருவரை தோழர் என்று அழைத்தேன். அதற்கு அவர் கேட்டார், ஜி, நீங்க ஏதோ இயக்கத்தில் இருக்கி மாதிரி பேசுறீங்களே என்றார். நான் அவருக்கு என்ன பதில் சொல்வது ?

தோழர் என்பது ஒரு அழகான தமிழ் சொல். அது சகோதரத்துவம் ஓங்க பயன்படுத்தும் சொல். அதை மக்கள் மனதில் எப்படி விதைக்கப்பட்டிருக்கிறது பாருங்கள் !?

சல்லிக்கட்டு போராட்டத்தின்போது, கோவை காவல்துறை உயரதிகாரி ஒருவர் இப்படி பேட்டியளித்தார். உங்களை யாராவது தோழர் என்று அழைத்தால் அவரிடமிருந்து விலகியிருக்க பாருங்கள். அவர் ஏதாவது இயக்கத்தை சேர்ந்தவராக இருக்கலாம்.

மக்களுக்கு பகுத்தறிவு புகட்ட உருவான "இயக்கங்கள்" தான் இன்று ஆட்சியில் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. இயக்கம் என்பது தவறானது அல்லவே. தவறான நோக்கத்தில் இயங்குவதுதான் தவறானது.

என்ன தோழரே !

நான் சொல்வது சரிதானே !?

* தினேஷ்மாய்

0 Comments: