சமூக போராளிகள்..

Saturday, August 25, 2018


இன்றைய சமூக போராளிகளை

வெறும் சமூக ஊடகங்களில் மட்டுமே

காணமுடிகிறது...

* தினேஷ்மாயா *

60 நிமிட குழந்தை

Tuesday, August 21, 2018


         பூமிக்கு வந்து 60 நிமிடங்கள் மட்டுமே ஆன மற்றுமொரு புதிய விருந்தினர் இந்த குழந்தை. இந்த பிஞ்சு குழந்தையின் கண்களில் அப்படியொரு அமைதி. இன்னும் 60 ஆண்டுகளுக்கு மேல் இப்பூமியில் ஓடி ஆடி நடமாடப்போகும் இவனுக்கு சக மனிதன் என்கிற முறையில் மனமார்ந்த வாழ்த்துகள் :-)

புகைப்படம் : இணையத்தில் இருந்து எடுத்தது. 

* தினேஷ்

தோழா தோழா


Ji, Bro, Boss.. நமக்கு அறிமுகம் இல்லாதவர்களை இந்த பெயர்களை சொல்லி அழைப்போம். இவை அந்நிய மொழிகளாக இருந்தாலும், அவை நமக்கு பரிச்சயமாகிவிட்டது.

ஆனால், நம்.தாய்மொழியாகிய தமிழில், "தோழர், தோழா, தோழரே, நண்பா" இப்படி அழைப்பதற்கு தயக்கம் காட்டுகிறோம்.

இதில் புது வதந்தி ஒன்று பரவி வருகிறது. ஒருமுறை அதிகம் பழக்கம் இல்லாத நபர் ஒருவரை தோழர் என்று அழைத்தேன். அதற்கு அவர் கேட்டார், ஜி, நீங்க ஏதோ இயக்கத்தில் இருக்கி மாதிரி பேசுறீங்களே என்றார். நான் அவருக்கு என்ன பதில் சொல்வது ?

தோழர் என்பது ஒரு அழகான தமிழ் சொல். அது சகோதரத்துவம் ஓங்க பயன்படுத்தும் சொல். அதை மக்கள் மனதில் எப்படி விதைக்கப்பட்டிருக்கிறது பாருங்கள் !?

சல்லிக்கட்டு போராட்டத்தின்போது, கோவை காவல்துறை உயரதிகாரி ஒருவர் இப்படி பேட்டியளித்தார். உங்களை யாராவது தோழர் என்று அழைத்தால் அவரிடமிருந்து விலகியிருக்க பாருங்கள். அவர் ஏதாவது இயக்கத்தை சேர்ந்தவராக இருக்கலாம்.

மக்களுக்கு பகுத்தறிவு புகட்ட உருவான "இயக்கங்கள்" தான் இன்று ஆட்சியில் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. இயக்கம் என்பது தவறானது அல்லவே. தவறான நோக்கத்தில் இயங்குவதுதான் தவறானது.

என்ன தோழரே !

நான் சொல்வது சரிதானே !?

* தினேஷ்மாய்

படித்ததில் பிடித்தது

Thursday, August 09, 2018

அன்பும் கடன் மாதிரிதான் 

திருப்பி கொடுக்காத போதுதான் 

பிரச்சனையே..!

- படித்ததில் பிடித்தது

* தினேஷ்மாயா *

ஆதிராவிடன்



தி.மு.கழகத்தின் தலையாய தலைவர் டாக்டர்.கலைஞர்.கருணாநிதி ஐயா அவர்களின் மறைவு, திராவிடத்தின் கடைசி தூண் சரிந்து விழுந்ததற்கு சமம்.

இன்றுதான் திரு.ஞானராஜசேகரன் அவர்கள் இயக்கத்தில் திரு.சத்யராஜ் அவர்கள் நடிப்பில் வெளியான “பெரியார்” திரைப்படம் பார்த்து முடித்தேன். திராவிடத்தின் விதைகளை இம்மண்ணிலும், நம் மனதிலும் விதைத்தவர். சுயமரியாதை என்பதை நம் தமிழ் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கி புரியவைத்தவர்

திராவிட கொள்கைகள் இன்று இருக்கும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் இல்லை. வெறும் கட்சி பெயர்களில் மட்டுமே இருக்கிறதென்பதை புரிந்துக்கொண்டேன். நம் சரித்திரத்தை படிக்க நான் விரும்புகிறேன். ஆதி திராவிடனைப்பற்றி, லெமூரியாப்பற்றி, பண்டைத்தமிழ் சமூகம்பற்றி, திராவிடத்தைப்பற்றி, திராவிடம் பேசிய தலைவர்கள் பற்றி, ஆங்கிலேயன் வந்தது முதல் போனது வரையான வரலாறுப்பற்றி, அன்றைய மற்றும் இன்றைய அரசியல் கட்சிகள் பற்றி, அன்றைய மற்றூம் இன்றைய சமூக கட்டமைப்பு பற்றி, இன்றைக்கு இன்னமும் இருக்கின்ற சமூக அவலங்கள் பற்றியெல்லாம் படித்து தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். இவைகளைப்பற்றிய என் தேடலும், இதன்மூலம் கிடைக்கப்போகும் அறிவும் என்னுடனே நின்றுவிடாமல், என் சமூகத்திற்கு நிச்சயம் தாரைவார்ப்பேன். சமூகம் இன்னும் வளர, சமூகநீதி இன்னும் தழைத்தோங்க என்னால் இயன்றதை செய்யப்போகிறேன்.

* தினேஷ்மாயா *