அவளும் நானும்...

Thursday, May 03, 2018



இதுநாள்வரை என் வாழ்க்கை வேறுமாதிரி இருந்தது.. அவள் வந்தபிறகு என் வாழ்க்கையின் வானவில் காலம், வசந்த காலம் துவங்கிவிட்டது என்றே சொல்லலாம்.

ம்.. அடிக்கடி சண்டக்கோழியாய் மாறிடுவாள். பல நேரங்களில் சின்ன சண்டைகள். சில நேரங்களில் பெரிய சண்டைகள். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவள் சண்டைப்போடும்போது நான் பெரும்பாலான நேரம் அமைதியாகவும்.பொறுமையாகவும் இருப்பேன். அவள் சண்டைப்போடும்போது அவளுடன் நானும் சண்டைப்போடுவதில்லை என்கிற காரணத்துக்காகவெல்லாம் சண்டை வரும். எவ்வளவு சண்டை வந்தாலும் அந்த சண்டைக்கு பிறகு சமாதானம் ஆவது சுவையாக இருக்கும்.

பல நேரங்களில் கொஞ்சுவாள். சில நேரங்களில் எரிமலையாய் பொங்குவாள். 
இரண்டுமே இரசிக்கும்படியாய் இருக்கும்..

அவள் தன் வாழ்நாளில் இதுவரை சமைக்காத பல உணவு வகைகளை எனக்காக முயற்சி செய்து சமைப்பாள். வித்தியாசமான உணவுகளையும் சமைப்பாள். இருப்பினும் அவளின் உணவுகள் அத்தனையும் வித்தியாசமாகவே இருக்கும் !

சுவற்றில் எங்கு பார்த்தாலும் அவளின் நெற்றிப்பொட்டுகள் வானத்தை நட்சத்திரங்கள் அலங்கரிப்பதுபோல் அலங்கரிக்கும்.

புதுப்புது சடங்குகள் சம்பிரதாயங்கள் சொல்லி கொடுப்பாள். கேள்வி கேட்டால், திட்டுதான் கிடைக்கும். விதண்டாவாதம் செய்யாமல் அதை கேட்டுக்கொள்வது சால சிறந்தது.

தியாகங்கள் நிறைய செய்து இருக்கிறாள், எனக்காக, இன்னமும் பல தியாகங்கள் செய்துக்கொண்டுதான் இருக்கிறாள்..

அவளின் செல்ல விளையாட்டில் நான் கட்டாயம் பங்கு பெறனும். இல்லாவிட்டால், குழந்தையை விட அதிகமாக அடம் பிடிப்பாள்.

இதுவரை எனக்கு தெரியாத பல விஷயங்களை தெளியப்படுத்தினால். அதில் சந்தேகம் கேட்டால், முதலில் சிறிய அடி கிடைக்கும் அப்புறம் விளக்கமும் கிடைக்கும்.

சாப்பாடு ஊட்டி விடுவது, எனக்கு விளையாட்டாய் அலங்காரம் செய்வது என என்னை தன் குழந்தையாகவே மாற்றிவிட்டாள்..

கொஞ்சம் சோம்பல், நிறைய வெகுளித்தனம், அதிக பேச்சு, அதீத சிந்தனை, எக்கச்சக்க குழந்தைத்தனம், ஏடாகூடமான சேஷ்டைகள், அப்பப்போ எட்டிப்பார்க்கும் திமிர், இப்படி ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம்.

அதிக பொறுப்புகளை தாங்கிக்கொண்டிருப்பதால், இங்கே பதிய நேரம் கிடைப்பதில்லை. இன்னும் இரு மாதங்களில் மீண்டு வருகிறேன் மீண்டும் வருகிறேன் இங்கே..

அப்போது அதிகம் பகிர்கிறேன் என்னவளைப்பற்றி.. ...

நன்றி..

* தினேஷ்பூர்ணிஷா *

0 Comments: