என் சிந்தையில் உதித்த ஞான சிறுகதை இது..
" ஒருவன் என்னிடம் கேட்கிறான்..
மூன்று பேர் ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர்..
முதலாமவர் அந்த விஷயத்தை வாதம் செய்துக்கொண்டு இருக்கிறார்.
இரண்டாமவர் அந்த விஷயத்தை விவாதம் செய்துக்கொண்டு இருக்கிறார்.
மூன்றாமவர் அந்த விஷயத்தை விதண்டாவாதம் செய்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த மூவரில், யார் செய்வது சரி என்று என்னிடம் வந்து கேட்கிறான்.
நான் மௌனமாக இருந்தேன். மீண்டும் என்னிடம் இதே கேள்வியை கேட்கிறான். அப்போதும் நான் மௌனமாக இருந்தேன். அவன் இந்த கேள்வியை என்னிடம் பலமுறை கேட்டான். ஆனாலும் நான் ஒவ்வொருமுறையும் மௌனமாகவே இருந்தேன். அவன் பொறுமை இழந்து சென்றுவிட்டான்.
நான் அவனுக்கு சொன்னது அவனுக்கு புரியவில்லை. எந்த ஒரு விஷயமானாலும், அதில் வாதம் செய்வதோ விவாதம் செய்வதோ அல்லது விதண்டாவாதம் செய்வதோ சரியல்ல. அனைத்து நிலையிலும் மௌனம் காப்பதே சிறந்தது என்பதை நான் அவனுக்கு குறிப்பால் உணர்த்தினேன். ஞானம் உள்ளவர்கள் புரிந்துக்கொள்வார்கள். ஞானமற்றவர்களுக்கு ஞானம் வரும்போது மௌனத்தின் சக்தி புரியும் !"
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment