சத்தியம்

Friday, November 10, 2017


 நான் பெரும்பாலும், ஒருவர் என்னிடம் சத்தியம் கேட்கும்போது பலமுறை சிந்திப்பேன்.  இந்த சத்தியத்தை என்னால் காப்பாற்ற முடியுமா, ஏன் சத்தியம் கேட்கிறார், எதற்காக கேட்கிறார், சந்தர்ப்ப சூழ்நிலையால் அதை காப்பாற்ற முடியாவிட்டால் ஏற்படும் பாதிப்பின் தன்மை என்ன என்றெல்லாம் பலமுறை ஆராய்ந்துவிட்டுதான் சத்தியம் செய்ய முன் வருவேன். என் மனம் வேண்டாம் என்றால், சத்தியம் செய்ய மாட்டேன். செய்த சத்தியத்தின்படி நடக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.

ஆனால், என்னவள் என்னிடம் ஒரு சத்தியம் செய்துகொடு என்பாள். நான், ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்கவே மாட்டேன். அவள் என்ன சத்தியம் கேட்கிறாள், பெரியதா சிறியதா, எதற்காக கேட்கிறாள் இப்படியெல்லாம் ஒன்றுமே சிந்திக்க மாட்டேன். அவள் கேட்ட அடுத்த நிமிடமே சத்தியம் செய்து கொடுத்துவிடுவேன். அவளுக்காக எப்பாடுபட்டாவது அந்த சத்தியத்தை நிறைவேற்றுவேன். அதற்கு எங்கள் காதல் எனக்கு உறுதுணையாக இருக்கும். அதனால்தான். அவளுக்கு நான் செய்து கொடுக்கும் சத்தியம் அனைத்தையும் நிறைவேற்ற முடிகிறது என்னாள்.

சமீபத்தில் அவளுக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தேன். அவள் கேட்காமலே நானே செய்து கொடுத்த சத்தியம் அது. இந்த நொடியில் உன் கரம் பற்றினேன். இனி ஒருபோதும் பிரிய மாட்டேன் என்று !!

* தினேஷ்மாயா *

0 Comments: