நேற்று நான் வழக்கமாக உணவருந்தும் அந்த உணவகம் சென்றேன். மதிய நேரம். நல்ல பசி. சுத்த சைவ சாப்பாடு மட்டுமே அங்கே கிடைக்கும். பசியோடு சாப்பிட அமர்ந்தேன். இந்த உணவகத்தில் பெரும்பாலும் எதைக்கேட்டாலும் சுடச்சுட கிடைக்கும், அப்பளம் தவிர. நான் சாப்பிட்டு முடிக்கும் நேரம், என்னருகில் ஒரு நபர் வந்து அமர்ந்தார். அவர் இலையில் தண்ணீரை தெளித்து, சாப்பிட அமர்ந்தார். பின்னர், தான் கொண்டுவந்த ஆனந்த விகடனை திறந்து தன்னருகே வைத்தார். உணவருந்தியவாரே, அதை படிக்க ஆரம்பித்தார். சொல்லப்போனால், ஆ.வி. படிப்பதில்தான் அதிக கவனமும் சாப்பிடுவதில் கவனம் இல்லாமலும் இருந்தார். இதை நான் எதுவும் சொல்லவில்லை. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆவி பறக்க பறக்க சாப்பிட்ட காலம் போய், ஆ.வி. படிக்க படிக்க சாப்பிடும் காலம் தான் இதுவோ ?
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment