கனிமொழியே என்னை கொன்று போகிறாய்

Monday, January 18, 2016



கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடைவிழியால் என்னை தின்று போகிறாய்

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடைவிழியால் என்னை தின்று போகிறாய்

இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய

நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா

நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா

உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால்
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்பேன்
அடி உந்தன் கன்ன குழியில் என்னை புதைத்து வைத்தால்
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே
சிறு காதல் பேசு ஊமை கிளியே
நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே
தென்றலே வா முன்னே முத்தமா கேட்கிறேன்
முருவல் தான் கேட்கிறேன்

கனிமொழியே… ம்ம்ம்ம்ம்
கடைவிழியே… ம்ம்ம்ம்ம்

பறவை பார்க்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்

விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்

என்னை கட்டி போடும் காந்த சிமிழே
ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே
என் காலை கனவின் ஈரம் நீதானே
வாழலாம் வா பெண்ணே வலது கால் எட்டு வை
வாழ்க்கையை தொட்டு வை

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்

ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்

நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டில்
நான் பட்டாம்பூச்சி ஆவதா

நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டில்
நான் பட்டாம்பூச்சி ஆவதா


படம்: இரண்டாவது உலகம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: வைரமுத்து
குரல்: கார்த்திக்

* தினேஷ்மாயா *

0 Comments: