கலைஞனை ஊக்குவிப்போம்

Wednesday, January 27, 2016


   திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்ம விபூஷன் வழங்கப்பட்டது தவறு என்று சொல்லவில்லை.. ஆனால், தமிழகத்தில் விருது வழங்கி கௌரவிக்க வேண்டியவர்கள் பலர் உள்ளனர். சினிமா மட்டுமே கலை அல்ல. மற்ற கலைகளையும் போற்றுவோம். அரசாங்கமே மற்ற கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் அங்கீகாரம் அளிக்கவில்லையென்றால் எப்படி ?
* தினேஷ்மாயா *
 

நிம்மதி


நிம்மதியும் கடவுளும் ஒன்றுதான்..
அனைவரும் வெளியே தேடிக்கொண்டு அலைகிறார்கள்...
* தினேஷ்மாயா *
 

காதல் ஆத்திச்சூடி

Saturday, January 23, 2016


ஔவை இல்லை இன்று..
இருந்திருந்தால், அவளிடம் வார்த்தைகள் கடன் வாங்கி
உனக்காக புதியதோர்
காதல் ஆத்திச்சூடி எழுதியிருப்பேனடி..
* தினேஷ்மாயா *
 

வெற்றி

Friday, January 22, 2016


வெற்றிக்கான வழிகளை தேடுவதைவிட
தோல்விக்கான வழிகளை கண்டுபிடி..
அதை தவிர்த்தாலே போதும்
நீ வென்றிடுவாய் !!
* தினேஷ்மாயா *
 

கிடைக்கவில்லை

Wednesday, January 20, 2016

பிறக்கப்போகும் தேவதைக்கு
பெயர்கூட வைத்துவிட்டேன்..
ஆனால் என்ன !
காதலிதான் கிடைக்கவில்லை....
காதலித்து மணந்துக்கொள்ள...
* தினேஷ்மாயா *
 

துடிக்கிறது


நீ கண்களை சிமிட்டவில்லை..
என் இதயத்துடிப்புதான்
உன் கண் சிமிட்டல்களாய்...
* தினேஷ்மாயா *
 

சமர்ப்பிக்கிறேன்



சரியென்று சொல் கண்ணே..
உலகை உன் காலடியில்
சமர்ப்பிக்கிறேன்..
* தினேஷ்மாயா *
 

தவிப்பு


காதலில் தவிப்பு இருவகைப்படும்..
காதலித்த பின்னர் தவிப்பது
காதலை சொல்லமுடியாமல் தவிப்பது..
* தினேஷ்மாயா *
 

கர்வமா ?




அனைத்து பெண்களும் சொந்தம் கொண்டாடும் நாணத்தை...
ஒட்டுமொத்தமாய் குத்தகைக்கு எடுத்துவிட்ட கர்வமோ உனக்கு ?
* தினேஷ்மாயா *
 

சாதி எதற்கு ?



திருமணத்திற்கு இரண்டு மனம் போதுமே..
காகிதத்தில் இருக்கும் சாதி எதற்கு ?
* தினேஷ்மாயா *

இரகசியங்கள்



சில உண்மைகள்
தெரியாமலே இருக்கட்டும்..
சில இரகசியங்களால்
நாம் மகிழ்ந்திருப்போமே !
* தினேஷ்மாயா *

நினைவுகள்

Tuesday, January 19, 2016


    நினைவுகள்தாம் நம்மை சுழல செய்கிறது. இன்று என் பள்ளிப்பருவ நண்பன் சுந்தரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவன் கேட்டான், எப்படிடா அனைத்து நினைவுகளையும் தைரியமாக இங்கே பதிவு செய்கிறாய் என்று..

 இந்த நினைவுகள்தான் இன்று என்னை பக்குவப்படுத்தி ஒரு நல்ல சிந்தனையாளனாய் மாற்றியிருக்கிறது. காதல், நட்பு, தோல்வி, அவமானம், குரோதம், வெற்றி, மகிழ்ச்சி இப்படி பல உணர்வுகள் என்னுள் புதைந்து இருக்கிறது. அவை இல்லாமல் இன்று நான் இந்நிலைக்கு வந்திருக்க முடியாது. எனக்கென்று ஒருத்தி வருவாள். அவளிடமும் என் நினைவுகளை பகிர்வேன். நானென்பது என் நினைவுகளையும் அடக்கியதே. என்னை ஏற்றுக்கொள்பவள் என் நினைவுகளை மட்டும் ஏற்காமல் போவாளா என்ன ?

   இந்த பதிவுகளை ஒரு 10 - 15 வருடம் கழித்து படித்துப்பார்க்கும் போது இவையெல்லாம் எனக்கு பொக்கிஷமாய் தெரியும். பலர் இங்கே வருங்காலத்திற்காக பணத்தை சேர்க்க ஓடிக்கொண்டிருக்க, நானோ நினைவுகளை சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.. இதுதான் பிடித்திருக்கு எனக்கு..

* தினேஷ்மாயா *

புனிதம்


நம் காதல்

உன் சம்மதத்திற்கு பிறகு

புனிதமானது..

* தினேஷ்மாயா *

இது காதல் இல்லை


உன்னையும் என்னையும் இணைப்பது

காதல் என்று நினைத்தாயா ?

இல்லையடி...

அது வெளிப்படுத்த முடியாத ஒரு உணர்வு..

அதுதான் நமக்கு பாலமாய் இருக்கிறது..

* தினேஷ்மாயா *

தோழியாக இரு...


நீ எனக்கு காதலியும் அல்ல

மனைவியும் அல்ல

ஒரு நல்ல தோழியாக இரு...

காதலி, மனைவி இரண்டையும் விட

நான் உன்னை அதிகம் தோழியாய்தான் பார்க்கிறேன்..

* தினேஷ்மாயா *

காந்த தாஜ்மஹால்...


காந்தத்தை கண்களில் மட்டும் வைத்திருப்பாள்

என்று எண்ணி அருகே சென்றேன்..

அவள் ஒரு நடமாடும்

காந்த தாஜ்மஹால்...

* தினேஷ்மாயா *

எனக்கு தெரியும்..


எனக்கு தெரியும்..

நீ ஏன் உன் கண்களை

என் கண்களில் படாமல் மறைத்துவைக்கிறாய் என்பதை..

உன் கண்களில் இருந்து சிந்தும் காதலை

என் கண்கள் கண்டுபிடித்துவிடும் என்றுதானே ?

* தினேஷ்மாயா *

ஊடல் கலையின் தாயே..


ஊடல் கலையின் தாயே..

போதும் முடித்துக்கொள்

உன் ஊடலை...

* தினேஷ்மாயா *

எப்பொது வருவாய் ?


என் இதயத்தின் அத்தனை அறைகளும்

உனக்காகவே திறந்து வைத்திருக்கிறேன்..

வலது கால் எடுத்துவைத்து எப்போது வரப்போகிறாய் ?

* தினேஷ்மாயா *

சத்தம் போடாதே


சரி...

இனிமேல் சத்தம் வராமல்

உன்னை வந்து பார்த்துவிட்டு செல்கிறேன் போதுமா...

* தினேஷ்மாயா *

நீதானே


மனதில் பறக்கும் பட்டாம்பூச்சிக்கு

வண்ணம் தந்தவள் நீதானே..

என் மனதில் விதைத்த காதலுக்கு

எண்ணம் தந்தவளும் நீதானே !

* தினேஷ்மாயா *

விழி உன்னை காணும் போது


என் விழிகள் உன்னை காணும்போது

இவ்வுலகமே மறைந்துவிடுகிறது...

சூரியனை பார்த்துவிட்டு எங்காவது பார்த்தால்

அத்தனையும் இருட்டாய் தெரியுமே !

அதுபோல...

* தினேஷ்மாயா *

இரக்கம்


அன்பின் மொத்த உருவம் நீ

இருப்பினும் -

இப்படி இரக்கம் இல்லாமல்

என்னை கொல்கிறாயே ?

* தினேஷ்மாயா *

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்

Monday, January 18, 2016



கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடைவிழியால் என்னை தின்று போகிறாய்

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடைவிழியால் என்னை தின்று போகிறாய்

இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய

நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா

நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா

உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால்
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்பேன்
அடி உந்தன் கன்ன குழியில் என்னை புதைத்து வைத்தால்
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே
சிறு காதல் பேசு ஊமை கிளியே
நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே
தென்றலே வா முன்னே முத்தமா கேட்கிறேன்
முருவல் தான் கேட்கிறேன்

கனிமொழியே… ம்ம்ம்ம்ம்
கடைவிழியே… ம்ம்ம்ம்ம்

பறவை பார்க்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்

விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்

என்னை கட்டி போடும் காந்த சிமிழே
ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே
என் காலை கனவின் ஈரம் நீதானே
வாழலாம் வா பெண்ணே வலது கால் எட்டு வை
வாழ்க்கையை தொட்டு வை

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்

ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்

நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டில்
நான் பட்டாம்பூச்சி ஆவதா

நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டில்
நான் பட்டாம்பூச்சி ஆவதா


படம்: இரண்டாவது உலகம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: வைரமுத்து
குரல்: கார்த்திக்

* தினேஷ்மாயா *

எனை மாற்றும் காதலே


எதுக்காக கிட்ட வந்தாலோ
எதைத் தேடி விட்டுப் போனாலோ விழுந்தாலும்
நான் ஒடைஞ்சே போயிருந்தாலும்
உன் நினைவிருந்தாலே போதும்
நிமிர்ந்திடுவேனே நானும்

அடக் காதல் என்பது மாயவலை
சிக்காமல் போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை தேவையில்லை தேவையில்லை

அடக் காதல் என்பது மாயவலை
கண்ணீரும் கூட சொந்தமில்லை
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை தேவையில்லை தேவையில்லை

எனை மாற்றும் காதலே
எனை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே
காதலே...

எனை மாற்றும் காதலே
உனை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே
காதலே...

எனை மாற்றும் காதலே
உனை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே
காதலே...

எதுக்காக கிட்ட வந்தாலோ
எதைத் தேடி விட்டுப் போனாலோ விழுந்தாலும்
நான் ஒடைஞ்சே போயிருந்தாலும்
உன் நினைவிருந்தாலே போதும்
நிமிர்ந்திடுவேனே நானும்..

அடக் காதல் என்பது மாயவலை
சிக்காமல் போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை தேவையில்லை தேவையில்லை

அடக் காதல் என்பது மாயவலை
கண்ணீரும் கூட சொந்தமில்லை
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை தேவையில்லை தேவையில்லை

எனை மாற்றும் காதலே
எனை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே
காதலே...

எனை மாற்றும் காதலே
உனை மாற்றும் காதலே
எதையும் மாற்றும் காதலே
காதலே...

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடிதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான்
நானும் ரவுடிதான்

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடிதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான்
நானும் ரவுடிதான்

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடிதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான்
நானும் ரவுடிதான்

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடிதான்
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான்
நானும் ரவுடிதான்...

படம்  : நானும் ரவுடிதான்
இசை : அனிருத் ரவிச்சந்திரன்
வரிகள் : விக்னேஷ் சிவன்
குரல் : சிட் ஸ்ரீராம், அனிருத் ரவிச்சந்திரன்

* தினேஷ்மாயா *

கண்ணான கண்ணே நீ கலங்காதடி



கண்ணான கண்ணே நீ கலங்காதடி
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
நீ கலங்காதடி நீ கலங்காதடி
யார் போன யார் போன என்ன
யார் போன யார் போன யார் போன என்ன
நான் இருப்பேனடி
நீ.... கலங்காதடி..

ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவெதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே

கிடைச்சதை இழக்கிறதும்
இழந்தது கிடைக்கிறதும்
அதுக்கு பழகிறதும் நியாயம்தானடி
குடுத்ததை எடுக்கிறதும்
வேற ஒன்ன குடுக்கிறதும்
நடந்ததை மறக்கிறதும் வழக்கம் தானடி

கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீ தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போன என்ன நான் இருப்பேனடி

என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நான் புடிக்கணும்
நான் கண்ண  திறக்கையில் உன் முகம் தெரியனும்
உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்

கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மன்ன போல உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி

கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போன என்ன நான் இருப்பேனடி

ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவெதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே

நித்தம் நித்தம் நீ ஒடைஞ்சா
ஒட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வைச்சு பாத்துக்கவே உயிர் வாழுரேண்டி
பெத்தவங்க போனா என்ன
சத்தமில்லா உன் உலகில்
நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான் உயிர் வாழுரேண்டி


படம் : நானும் ரவுடிதான்
இசை : அனிருத் ரவிச்சந்திரன்
வரிகள் : விக்னேஷ் சிவன்
குரல் : சீன் ரோல்டன்

* தினேஷ்மாயா *

மழை


அவள் வீதிகளில் மட்டும் மழை..

குளித்துவிட்டு மொட்டைமாடியில் நின்று

தலையை துவட்டுகிறாள் என் தேவதை..

* தினேஷ்மாயா *

காதல் கள்ளி



கதகளி பயில்கிறாள்

என் காதல் கள்ளி !

* தினேஷ்மாயா *

வரம் கேட்கிறேன்


அனைவரும் இயற்கையிடம் வரம் கேட்பார்கள்..

நான் -

அந்த இயற்கையையே வரமாய் கேட்கிறேன்..

உன்னை !

* தினேஷ்மாயா *

இப்போது புரிகிறது


இப்போது புரிகிறது

ஏன் இந்த காவிரியை தர மறுக்கிறார்கள் என்று !

* தினேஷ்மாயா *

கடிகாரம்

கடிகாரம் வைக்காமல் தூங்கி,

கடிகாரம் எழுப்பாமல் எழும் வாழ்க்கை வேண்டும் எனக்கு..

* தினேஷ்மாயா *