பணதாபிமானம்

Tuesday, September 29, 2015



    கோடிக்கணக்கில் செலவு செய்து வேற்று கிரகத்தில் வசிக்க வாய்ப்பிருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்யும் நாம், ஏற்கெனவே நம் வீடாய் இருக்கும் இத்தாய் பூமியை பாதுகாக்க ஏன் மறந்துவிடுகிறோம் ?

* தினேஷ்மாயா *

அழகில்லை ஆபத்து

Thursday, September 10, 2015









    மேலே பார்க்கும் பூக்கள், செடிகள் அனைத்தும் கண்ணுக்கு அழகாய் தெரியும். ஆனால் அவையனைத்திலும் ஆபத்து மறைந்திருப்பதை பலர் அறிந்திருக்க மாட்டீர்கள். 

     இத்தாவரங்கள் விவசாயத்திற்கும், மக்களுக்கும், சுற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியவை. எனவே இந்தவகை தாவரங்களை உங்கள் இருப்பிடங்களில் எங்காவது காண நேர்ந்தால், தவறாமல் இதை அழித்துவிட முயலுங்கள். நம் சுற்றுசூழலை பாதுகாக்க யாரோ ஒருவர் வருவார் என்றெல்ல்லாம் கனவு காண்பதைவிடுத்து நாமே களத்தில் இறங்குவோம் தோழர்களே..

* தினேஷ்மாயா *

கழுகு

Wednesday, September 09, 2015



         கழுகு தன் உணவை பிடிப்பதை பார்த்திருக்கிறீர்களா ?

   உயரத்தில் பல மணி நேரம் கூட வட்டமடித்துக்கொண்டே இருக்கும். ஆனால் தன் இரை வந்ததும் அந்த வாய்ப்பை தவறவிடாமல் தன் இரையை ஒரே முயற்சியில் பிடித்துவிடும். அதுவரை அது வெறுமனே வானில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது என்று நினைக்க வேண்டாம். தன் இரையை பிடிக்க தேவையான அனைத்தும் அது அங்கே செய்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். 

     அதுபோல நாமும் நம் வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பை அதுதான் கடைசி வாய்ப்பு என்று நாம் நினைத்து அதை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

* தினேஷ்மாயா *

சிந்தித்து செய்

Tuesday, September 08, 2015


       நீ முதல்முறையாக ஏதாவது தவறு செய்யும் போது ஆயிரம் முறை யோசனை செய். ஒருமுறை அந்த தவறை நீ செய்துவிட்டால் அதுவே உனக்கு பழக்கமாகிவிடும்.
      பின்னர் அந்த தவறை செய்ய நீ இனிமேல் யோசிக்கமாட்டாய். என்ன ஆனாலும் தவறு தவறுதான். நல்லதோ, கெட்டதோ எதையும் பலமுறை சிந்தித்து செய்.

* தினேஷ்மாயா 

வானம்...... வசப்படுமே!!

Monday, September 07, 2015



வானம்...... வசப்படுமே!!
வானம்...... வசப்படுமே!!

கனவெல்லாம் இனிமை படுமே..
அழகினை பாட மொழி கூட என் வசமாகுமே!!

வானம்...... வசப்படுமே!!

மூடி வைத்திருந்தும் இதயம் காதல் வசப்படுமே..
புன்னகை பூவின் இமையசைந்தால் இடியும் புயலும் வசப்படுமே..

மூடி வைத்திருந்தும் இதயம் காதல் வசப்படுமே..
புன்னகை பூவின் இமையசைந்தால் இடியும் புயலும் வசப்படுமே..

வானம்...... வசப்படுமே!!

கவிதை பார்வையை படித்தால் தமிழ் இலக்கியம் வசப்படுமே..
செவியில் புன்னகை விழுந்தால் இசை நொடியினில் வசப்படுமே..

வான் போலே.....நீளாதே..............
நீளாதே.. நீளாதே..

தீண்டாமல்.......தாளாதே...........
தாளாதே.... தாளாதே....

ஆனாலும் விரல் படுமே...
பட்டால் ஆகாயம் வசப்படுமே....

மூடி வைத்திருந்தும் இதயம் காதல் வசப்படுமே..
புன்னகை பூவின் இமையசைந்தால் இடியும் புயலும் வசப்படுமே..

மூடி வைத்திருந்தும் இதயம் காதல் வசப்படுமே..
புன்னகை பூவின் இமையசைந்தால் இடியும் புயலும் வசப்படுமே..

வானம்...... வசப்படுமே!!

விழியில் நீ விழும் வரையில் நான் நிறங்களை ரசிக்கவில்லை..
மனதில் நீ வரும் வரையில் நான் இரவினில் விழித்ததில்லை..

காற்றாக............. வாழ்ந்தேனே..........
வாழ்ந்தேனே..... வாழ்ந்தேனே.....

கண் கூண்டில்.........அடைத்தாயே...........
அடைத்தாயே........ அடைத்தாயே........

எல்லாம் என் வசப்படுமே...,.....
எந்தன் நெஞ்சோ உன் வசப்படுமே......

வானம்...... வசப்படுமே!!
வானம்...... வசப்படுமே!!

கனவெல்லாம் இனிமை படுமே..
அழகினை பாட மொழி கூட என் வசமாகுமே!!.......

வானம்...... வசப்படுமே!!

மூடி வைத்திருந்தும் இதயம் காதல் வசப்படுமே..
புன்னகை பூவின் இமையசைந்தால் இடியும் புயலும் வசப்படுமே..

மூடி வைத்திருந்தும் இதயம் காதல் வசப்படுமே..
புன்னகை பூவின் இமையசைந்தால் இடியும் புயலும் வசப்படுமே..

வானம்...... வசப்படுமே!!

படம்: வானம் வசப்படுமே
இசை: மஹேஷ் மாஹவன்
குரல்: டிம்மி, ஸ்ரீனிவாஸ்

* தினேஷ்மாயா *

மனைவிக்கு ஒரு கவிதை




எவ்வளவு நாட்கள்தான் காதலிக்காகவே கவிதை எழுதுவது ?

இன்று கொஞ்சம் வித்தியாசமாக, மனைவிக்கு கவிதை எழுதலாம் என்று விரும்பினேன். கொஞ்சம் நகைக்கும்படியும் எழுதுகிறேன். ஒருநாள் வந்து அவள் படித்து சிரித்து ரசிப்பதற்காக..

“ சூரியன் சீக்கிரமே வந்து உன் தூக்கத்தை கலைக்கிறான்.
அவனை நாடு கடத்திவிடட்டுமா  ?

காலையில் எழுந்ததும் எனக்கு நீ காஃபி போடவேண்டிய அவசியம் இல்லை.

நீ கஷ்டப்படுவாய் என்றுதான் நான் தேநீர் காஃபி பருகுவதையே நிறுத்திவிட்டேனடி..

தினமும் நீ கோலம்போட வேண்டும் என்றில்லை.

வாசலில் கொஞ்ச நேரம் நடந்துவிட்டு போ.
அதுவே கோலமாகிவிடும்..

குளிக்க செல்லும் முன் மறக்காமல் துண்டு எடுத்துக்கொண்டு செல்..

இல்லாவிடில் நீ குளிக்காமல் இருப்பாய் !!

இருவரும் ஒரே நேரத்தில்தான் உறங்குகிறோம்.

நீ மட்டும் எப்படி எனக்கு முன்னர் விழித்துக்கொள்கிறாய்?
நீ எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கிறாய்.
நான் உன் விழிகளுடன் எப்போதும் விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறேன் !

நீ துணி துவைத்து முடித்துவிட்டாய்..

துணிகளை காய வைக்க அந்த வானவில்லை கொண்டுவரட்டுமா ?

காய்கறிகளை நறுக்க கத்தி வேண்டாம் உனக்கு

உன் மின்னல் பார்வை போதுமடி..

நீ செய்யும் சமையல் மட்டும் எவ்வளவு நாட்கள் ஆனாலும்

கெட்டுப்போவதில்லையே ! கண்ணே, அந்த மாயம் என்னவோ ?

வாரத்தில் இரண்டு நாட்கள்

எனக்கு மட்டுமல்ல உனக்கும் விடுமுறைதான்..
அப்போது உன் வேலைகள் அனைத்தும் என் பொறுப்பு..

அழகின் மொத்த உருவமும் நீ..

அன்பின் மொத்த உருவமும் நீ..

நிர்வாகத்திறன் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிகம் என்பதை

நம் வீட்டை நீ நிர்வகிப்பதில் நிரூபித்துவிட்டாய்..

நான் போட்ட மூன்று முடிச்சு இவ்வளவு உறுதியானதா ?

உன் மூச்சுக்காற்றில் பாதியை எனக்காகவே சுவாசிக்கிறாயே !

நீ மீன் குழம்பு வைக்கும்போது தவறாமல் உன் கண்களை மூடிக்கொள்
உன் கண்கள் குழம்பில் குதித்துவிடப்போகிறது..

என்னருகில் உறங்கும்போது மறக்காமல் மூக்குத்தி அணிந்துக்கொள்
நீ மூக்குத்தியை கழட்டிவிட்டால், உன் மூச்சு எனக்கு புல்லாங்குழலாய் கேட்கிறதே..

நான் முத்தம் கொடுக்கும்போது சத்தம் வருகிறதோ இல்லையோ
உனக்கு தவறாமல் வெட்கம் வந்துவிடுகிறது.. ”


- சமர்ப்பணம் : வரப்போகும் என் மனைவிக்கு(?)

* தினேஷ்மாயா *

நல்ல சிந்தனை



முடியாது என்கிற எண்ணத்தோடு அனுகும் 

எந்தவொரு விஷயமும் முடியாமல்தான் போகும். 

நல்லதோர் முடிவுக்கு நல்லதோர் தொடக்கம் மட்டும் போதாது, 

நல்லதோர் சிந்தனையும் வேண்டும்.

* தினேஷ்மாயா *

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Saturday, September 05, 2015



“ நீ உன் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் நீ கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். ஆகவே நீ உன் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரும் உன் ஆசிரியர் தான்”
- சாக்ரடீஸ்

நான் என் வாழ்க்கையில், நான்கு சுவர்களுக்குள்ளும் அச்சடித்த காகிதங்களிலும் படித்ததைவிட இந்த சமூகத்தில் வாழ்ந்து கற்றுக்கொண்டதுதான் அதிகம். ஒவ்வொருவரும் இங்கு ஆசிரியர்தான் ஒவ்வொருவரும் இங்கு மாணவர்தான்.

அனைவருக்கும் என் மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

* தினேஷ்மாயா *

சோம்பேறிகள்

Tuesday, September 01, 2015



   தொழில்நுட்பம் நம் வாழ்வை எளிமையாக்கியது என்று சொல்வதைவிட, நம்மை அதிகம் சோம்பேறிகளாகவும் முட்டாள்களாகவும் மாற்றிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை..

* தினேஷ்மாயா *

எல்லாம் நம் சொந்தம்



       இவ்வுலகில் எதுவும் நம் சொந்தம் இல்லை என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் அப்படி சிந்திப்பதை விடுத்து, இவ்வுலகமே ஏன் இந்த பிரபஞ்சமே நம் சொந்தம் என்று நினைப்போம். நாம் இப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமே. அதில் இருந்துதான் பிரிந்து வந்திருக்கிறோம். எப்போதும் அதனுடன்தான் சேர்வோம். என்ன நடந்தாலும், நாம் இப்பிரபஞ்சத்தின் ஓர் அங்கம் என்பதை என்றும் மறக்காதீர்கள். இங்கு, எல்லாமே நம் சொந்தம் !!

* தினேஷ்மாயா *