சென்ற வாரம்

Monday, March 16, 2015

சென்ற வாரம் 4 திரைப்படங்கள் பார்த்தேன். அனைத்தும் மனதை கவர்ந்தன.

1. காக்கி சட்டை



        வழக்கமான சிவகார்த்திகேயன் படம் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது. சில பாடல்கள் மட்டும் ரசிக்கும்படியாக இருந்தது. படத்தில் இரண்டாம் பாகம் வேகம் சற்று குறைவு. கதாநாயகி அவ்வப்போது வந்து போகிறார். நடனம் ஓ.கே. ஒளிப்பதிவு சில பாடல்களில் ரசிக்கும்படியாக இருந்தது. 

2. எனக்குள் ஒருவன்


        கன்னட படத்தின் மறு ஆக்கம் என்று சொல்லியிருந்தார்கள். படம் அருமையாக இருந்தது. இரண்டுமுறை திரையரங்கம் சென்று பார்த்தேன். கதையை நகர்த்திய விதம் பிரமாதம். இதுபோன்ற கதையை ரசிகர்களை கணிக்க வைத்து அவர்களின் கணிப்பு தவறு என்று ஒவ்வொரு முடிச்சுகளாக கடைசியில் அவிழ்த்த விதம் பாராட்டுக்குறியது. அனைத்து பாடல்களும் அருமை. “யார்? என் மனமா ? ” , “ பூ அவிழும் பொழுதில்” இந்த இரண்டு பாடல்களும் திரும்ப திரும்ப கேட்கும்படி இருக்கிறது. கதாநாயகி சில நேரங்களில் சமந்தா போல் திரையில் தெரிகிறார். ஒட்டுமொத்தமாக, ஒரு புதிய முயற்சி. சில இடங்களில் ஹாலிவுட்டை நினைவுப்படுத்தினாலும். தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

3. ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை.


       இயக்குனர் சேரனின் C2H என்னும் திட்டம் மூலம் வீட்டிலேயே படம் பார்க்கும் வசதியில் முதலில் வெளிவந்த படம். அவரின் முயற்சிக்கு ஆதரவளிக்கவே இந்த படத்தை வாங்கி பார்த்தோம். வீட்டில் அமர்ந்து பார்ப்பதற்கு ஏற்ற கதை. கதை மெதுவாக நகர்ந்தாலும், படம் பார்க்க சலிக்கவில்லை. சில இடத்தில் மட்டும் கதையை கொஞ்சம் இழுத்ததுபோல் தெரிகிறது. படத்தில் காதல் காமம் இப்படி எதுவும் இல்லை. அதற்கும் மேலாக புனிதமான நட்பை காட்டி நம்மை கட்டிப்போடுகிறார் சேரன். மிக அருமையான கதைக்களம். மறுபடியும் பார்க்கலாம்.

4. ராஜதந்திரம்


       அதிகம் பரிச்சயமில்லாத ஆனால் மறக்காத திரை பிரபலங்களை வைத்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. நல்ல படம். ஏற்கெனவே வந்த பல கதைகளை நினைவூட்டினாலும், திரைக்கதை வித்தியாசமாக இருப்பதால், படத்தில் எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படவில்லை. ஒரே பாடல் வந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது. 

* தினேஷ்மாயா *

0 Comments: