இன்று காலை 8:30 மணிக்கு என் நணபனின் அவசர சிகிச்சைக்காக அருகில் இருக்கும் 24 மணி நேர மருத்துவமனைக்கு சென்றேன். நான் சென்ற நேரம் இரவு நேரமோ அல்லது அதிகாலை நேரமோ இல்லை. காலை 8:30 மணிக்கு சென்று மருத்துவரை பார்க்க வேண்டும் என்று சொன்னால், அங்கே ஒரு மருத்துவர்கூட இல்லை. செவிலியர்களும் எதுவும் செய்ய முன்வரவில்லை. இவர்கள் எதாவது மருத்துவம் செய்தால் மருத்துவர் வந்ததும் அவர்களை திட்டுவாராம்.
ஒரு அவசர சிகிச்சைக்காக செல்லும்போது இப்படி நடந்துக்கொள்கிறார்களே என்று கோபம்தான் வந்தது. ஆனால் இது கோபம்கொள்ள சரியான தருணம் இல்லை என்று பக்கத்தில் இருந்த வேறொரு மருத்துவமனைக்கு சென்றுவிட்டேன்.
இது எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இதுபோல நடந்திருக்கும். ஆனால் நம்மால் இதுப்போன்ற அவசர தருணங்களில் என்னத்தான் செய்ய முடியும் ?
அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் இருந்தாலும் அங்கே பராமரிப்பு சரியில்லாத காரணத்தால் பலரும் அங்கே செல்ல தயங்குகின்றனர். மருத்துவமனையில் தனியார் இருப்பது ஒருவகையில் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், மருத்துவ துறையை ஒரு சேவையாக நினைக்காமல் அதையும் ஒரு வியாபாரமாக பார்க்கின்றனர் என்பதுதான் வேதனையாக இருக்கிறது.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment