இந்திய ஒற்றுமைக்கு பேராபத்து

Friday, May 23, 2014




   இன்றைய செய்தித்தாளில் ( மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு ), புதிதாக உருகாகவிருக்கும் தெலுங்கானா பற்றிய செய்தி ஒன்றைப் படித்தேன். 

  அதில், புதிதாக பதவியேற்கவுள்ள அரசு தெலுங்கானா இல்லாமல் ஆந்திராவில் பிறந்து தெலுங்கானாவில் வேலை செய்யும் அனைவரையும் ஆந்திராவிற்கே திருப்பி அனுப்பவிருப்பதாய் தெரிவித்திருக்கிறது.

  இந்திய அரசியல் சாசனத்தில் நம் அடிப்படை உரிமைகள் பற்றி சொல்லப்பட்டிடுக்கிறது. 

  அதில் ஷரத்து 14-ல் அனைவரும் சட்டத்தின் முன்னர் சமம். அரசாங்கம் எந்த ஒரு குடிமகனையும் மதம், இனம், ஜாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் இவற்றைக்கொண்டு ஒருவரின் உரிமையை பறிக்கக்கூடாது.

   ஆனால், ஆந்திராவில் பிறந்தவர் என்கிற ஒரே காரணத்தால் தெலுங்கானாவில் இன்று ஒருவர் தன் வேலையை விடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதுவும் அரசாங்க ஊழியர்.

 இந்த செயல் நம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது அதைவிட நம் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான செயல். இதுப்போன்ற அந்நிய சக்திகள் எவராக இருந்தாலும் உடனே அதை எதிர்க்க வேண்டும். இதுப்போன்ற செயல்கள் இனியும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக தார்மீக பொறுப்பு உச்சநீதி மன்றத்திடம் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...

* தினேஷ்மாயா *

0 Comments: