தாலாட்டு

Thursday, June 27, 2013


தாலாட்டு ...

நாம் குழந்தையாய் இருக்கும்போது, நம் அழுகையை மறந்து நாம் தூங்க, நம் அன்னை நமக்காக பாடிய பாட்டு..

ஆனால், வளர்ந்து விவரம் தெரிந்த பின்னர் அன்னையின் தாலாட்டை கேட்கும் பாக்கியம் எவர்க்குமே கிட்டுவதில்லை...

* தினேஷ்மாயா *

புன்னகையும் மௌனமும்

Tuesday, June 25, 2013


* தினேஷ்மாயா *

நட்பு நேரம்


* தினேஷ்மாயா *

பெரும் தவறு


* தினேஷ்மாயா *

வெற்றிக்கான முதல் படி

Monday, June 24, 2013


* தினேஷ்மாயா *

எனக்கு நீ உனக்கு நான்


எனக்கு நீ

உனக்கு நான்...

* தினேஷ்மாயா *

தீ


கண்கள் உரசும் போது,

இதயங்களில் தீ பற்றிக்கொள்கிறது..

* தினேஷ்மாயா *

வெள்ளை ரோஜா


   ஆயிரம் வண்ணங்களில் ரோஜாக்களைப் பார்த்தாலும் எனக்கு அதிகம் பிடித்தது வெள்ளை ரோஜா தான்..

* தினேஷ்மாயா *

உழைக்கும் பாதங்கள் !!


உழைக்கும் பாதங்கள் !!

* தினேஷ்மாயா *

அழகு குட்டிச்செல்லம்


* தினேஷ்மாயா *

பூ பெண்


     இது பார்க்க ஒரு பூ போன்று தெரியும். ஆனால், இந்த பூவின் உள்ளே ஒரு பெண் இருக்கிறாள் என்பதை பார்த்தீர்களா ?

  பெண் பூப்போன்றவள் என்பதை உணர்த்துகிறதோ இந்த புகைப்படம் !!

* தினேஷ்மாயா *

கொய்யாப்பழம்


   கொய்யாப்பழத்தின் இயற்கை குணங்கள், அது தரும் பயன்கள் பற்றி நான் எழுதப்போவதில்லை.. அதற்கு பல வலைப்பக்கங்கள் இருக்கிறது. எனக்கு கொய்யாப்பழம் பிடிக்கும் அவ்ளோதாங்க. அதான் இங்கே இதை பதிவு செய்கிறேன்..

* தினேஷ்மாயா *

நல்லா இருக்கில்ல...


* தினேஷ்மாயா *

என் புதிய வேலை...


    இறைவனின் ஆசியோடு, இந்திய அரசாங்கத்தின் ஆயத்தீர்வை ஆய்வாளர் பணியில் சேர்ந்திருக்கிறேன். அடுத்த இலக்கான குடிமைப்பணிக்காக தீவிரமாக உழைக்க ஆரம்பித்துவிட்டேன். எனினும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் பதிவுகளுக்கு இங்கே வலையில் உயிர் கொடுத்துக்கொண்டே இருப்பேன்.

- அன்புடன்
* தினேஷ்மாயா *

காயப்பட்ட இதயம்


     காயப்பட்ட இதயத்தை கையில் வைத்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்துவது ரொம்பவே கடினமான விஷயம். இதுப்போன்ற சூழலில் நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, காயப்பட்ட இதயத்தை ஒட்டவைத்து மீண்டும் புத்துணர்ச்சியுடன் நம் வாழ்க்கையை நோக்கி செல்வதுதான்...

* தினேஷ்மாயா *

குழந்தை மனம்


குழந்தைக்கு நாம் பல விஷயம் கற்றுகொடுக்கிறோம். ஆனால், எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கும் கலையை குழந்தையிடமிருந்து எவரும் கற்றுக்கொள்வதே இல்லை....

* தினேஷ்மாயா *

வாழ்க்கைப் பயணம்

Thursday, June 20, 2013


      நம் வாழ்க்கைப் பயணம் தனிமையானது. அவரவரின் பாதையில் அவரவர் பயணிக்கிறோம். ஆனால் எவர்க்கும் இது புரிவதில்லை. நம் பயணத்தில் சிலர் கூடவே வருவர், சிலர் பாதியிலே நின்று விடுவர், சிலர் மனதில் நிற்பர், சிலர் மறந்துப்போவர், சிலர் பேச்சுத்துணைக்காகவும் வருவர்..

      இப்படியாக, நம் பயணத்தில் பலர் வருவார்கள் பலர் போவார்கள். ஆனால் ஒரு உண்மையை மட்டும் புரிந்துக்கொள்ள வேண்டும். நம் பயணமும் நம் பாதையும் நமக்கானது என்பதுதான் உண்மை. யாரும் கடைசிவரை மாட்டார்கள் என்ற உண்மை உணர வேண்டும்...

* தினேஷ்மாயா *







இயற்-கை


    மனித இனம் வளர கைகொடுத்த இயற்கை, இன்று அழியும் நிலையில் இருக்கிறது. அதற்கு நாம் கைகொடுக்கும் நேரம் இது. 

* தினேஷ்மாயா *

கலங்காதே


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

மாலை நேரம்


ஜன்னலோரம் நின்று 

வேடிக்கை பார்க்கிறாய்..

சூரியன் வெட்கப்பட்டு 

ஒளிந்துக்கொள்கிறான்..

மாலை நேரம் !!

* தினேஷ்மாயா *


நீ நானாக..



நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

உனக்காக மட்டும் வாழ

Monday, June 17, 2013


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

மழலை


* தினேஷ்மாயா *

என் சோகங்களே..


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

உன் நினைவுகளை மட்டும்


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

மகிழ்ந்தேன்


நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

நினைவுகள்


* தினேஷ்மாயா *

நெஞ்சின் உள்ளில்..


* தினேஷ்மாயா *

நினைத்து பார்


* தினேஷ்மாயா *

திருமணம் என்பது

Tuesday, June 04, 2013


  காதலில் சேராதவர்கள் திருமணம் செய்துக்கொள்ள கூடாது என்றால், இங்கே பெரும்பாலானவர்களுக்கு திருமணமே நடந்திருக்காது. விவரம் தெரியாத வயதில் காதல் வந்தாலும் , விவரம் தெரிந்த வயதில் காதல் வந்தாலும் சரி. அது திருமணத்தில் முடிவதும் முடியாமல் போவதும் அவர்களின் கைகளில் இல்லை. காதல் என்பது வேண்டுமானால் இருவரின் தனிப்பட்ட உணர்வாக இருக்கலாம் அதற்கு சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமே போதும். ஆனால், நமது வாழ்க்கை சமூகத்தை சார்ந்த ஒன்று. திருமணம் என்பதும் சமூகம் சார்ந்த ஒன்று என்பதாலேயே பெரும்பாலான காதல் திருமணத்தை நெருங்குவதில்லை.

   திருமணம் என்பது இரண்டு மனம் ஒன்றற கலந்து இன்பத்திலும் துன்பத்திலும் துணையாக இருந்து தலைமுறை பலக்கண்டு வாழ்ந்து காட்டுவதே திருமண பந்தம். அப்படியானால், என்னைப்பொருத்தவரை காதல் என்பது திருமணத்தில் முடியகூடாது. திருமணத்தில் இருந்துதான் உண்மையாக காதல் ஆரம்பமாகும். அனைத்து உயிர்களுக் தங்களுக்கு ஏற்ற இணையை தேர்ந்தெடுத்து திருமண பந்தத்தில் இணைந்து, இயற்கை நியதியை கடைப்பிடித்து வாழவேண்டும்...

* தினேஷ்மாயா *

இரண்டு குழந்தைகள்


      நாமிருவர் நமக்கொருவர் என்கின்றனர் சமீபகாலமாக. இருப்பினும்
பின்னாளில், அவள் விருப்பத்தோடு எங்களுக்கு இரண்டு குழந்தைகள் போதும் !!

* தினேஷ்மாயா *

மாயா அருங்காட்சியகம்




   பல மாதங்களுக்குப் பிறகு என் அறையை அலசிப் பார்த்தேன். என் மாயா நினைவாக பல பொருட்களை என்னுடைய மாயா அருங்காட்சியகத்தில் சேமித்து வைத்திருக்கிறேன் பல வருடங்களாக.

* அவளின் கூந்தல்முடி

* அவளின் எழுதிக்கொடுத்த வாழ்த்து கவிதை

* அவள் கொடுத்த மோதிரம்

* அவள் 5th Semester Observation note

* அவள் வாங்கிக்கொடுத்த ஹீரோ பேனா

* அவளின் உடைந்த வளையல்

* அவளை உரசி சென்ற மரத்தின் இலை

* அவளும் நானும் சென்று உணவருந்திய உணவு விடுதியில் அவள் பயன்படுத்திய Tissue Paper

* அவள் உபயோகித்த நெற்றிப்பொட்டு

* அவள் வீட்டு குடும்ப அட்டையின் நகல் - அவளுக்கே தெரியாமல் சுட்டது

* அவள் எனக்கு கொடுத்த 10 ரூபாய்,50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுக்கள். அவள் எதேச்சையாக கொடுத்ததை நான் பத்திரப்படுத்திக்கொண்டேன்

* அவள் சாப்பிட்டுவிட்டு எனக்கு கொஞ்சம் கொடுத்த முந்திரி திராட்சை

* அவள் அணிந்த மோதிரம்

* அவளும் நானும் நண்பர்களோடு சேர்ந்து விளையாடியபோது அவள் எழுதிய/ கிறுக்கிய நோட்டு

* அவள் கைரேகை

இன்னும் ஏராளம் ஏராளம் இருக்கிறது என் மாயா அருங்காட்சியகத்தில். எல்லாவற்றையும் பட்டியலிட்டால் இடம் பத்தாது இங்கே. என்றாவது ஒரு நாள் படிக்கும்போது இவையெல்லாம் என் நினைவில் வந்துபோகும் என்றே சிலவற்றை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

- அன்புடன் -

*  தினேஷ்மாயா *

கற்பனை கதாபாத்திரம்



  நாம் செய்த தவறுகளுக்காக பிறரை கைக்காட்டுவதுதான் மனிதனின் இயல்பு. ஒட்டுமொத்த மனிதனும் ஒன்று சேர்ந்து தன் தவறுகளை மறைக்க உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம்தான் கடவுள் !!

* தினேஷ்மாயா *

காகிதப் பூக்கள்

Sunday, June 02, 2013




உண்மையான அன்பும்
காகிதப்பூவும் ஒன்றுதான்
என்றுமே வாடாது !!

* தினேஷ்மாயா *

என்ன வாழ்க்கடா இது !!



    இப்போது என் பெற்றோர்கள், நான் யாரை காதலித்தாலும் சம்மதம் தெரிவிக்க தயார். இந்த நிலைக்கு நான் வரும்போது என் காதல் என்னிடம் இல்லை.

என் காதல் என்னிடம் இருந்தபோது என் பெற்றோர்கள் என் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. என்ன வாழ்க்கடா இது !!

* தினேஷ்மாயா *

நீ இல்லனா



“ நீ இல்லனா நான் செத்துருவேன்”
- பெரும்பாலும் இப்படி வசனம் பேசிய காதலர்கள்தான் பிரிந்து சென்றிருக்கிறார்கள்..

* தினேஷ்மாயா *

ஒரு கேள்வி



ஒரு கேள்வி :  கோடிக்கணக்கில் நம் இந்தியாவில் வழக்குகள் தேங்கி இருக்கிறது என்று செய்திகள் வருகிறது.

அப்படி இருக்கையில், நீதித்துறைக்கு கோடை விடுமுறை விடுகிறார்களே. இது எதற்கு ??


* தினேஷ்மாயா *

மாணவ மணிகள் !!



     ஒவ்வொரு வருஷமும் +2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதலிடம் பிடித்தவர்கள் எல்லோரும், மருத்துவம் பயின்று இலவசமாக ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்தவர்கள்தான்.
      ஆனால் இதுநாள்வரை பேட்டிக்கொடுத்தது போல, எந்த மாணவ மணிகளும் இலவச மருத்துவம் செய்ததாக சரித்திரம் இல்லையே !!

* தினேஷ்மாயா *