ஸ்ரீரங்கத்து தேவதைகள்..

Tuesday, July 31, 2012




இன்று இந்த புத்தகத்தை வாங்கினேன். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. நேரம் கிடைக்கும்போது படித்துவிட்டு இந்நூலைப்பற்றி எழுதுகிறேன்.

நான் ஒன்று சொல்ல மறந்துட்டேன். நான் எழுத ஆரம்பித்ததற்கு காரணம் சுஜாதா அவர்கள்தான். அவரின் புத்தகங்களை இளம் வயதில் நிறைய படித்திருக்கேன். அதுதான் என்னையும் எழுத தூண்டியது. ஏதோ எழுத ஆரம்பித்து பின்னர் ஏதேதோ எழுதி பின்னர் மனதிற்கு சரியென பட்டதை மனதை தொட்டதை எழுத ஆரம்பித்து இப்போது இங்கே வந்து நிற்கிறேன். நான் எந்த அளவிற்கு எழுதுகிறேனோ அதைவிட அதிகமாக படிப்பவன். பல நூல்களை படிக்கும் ஒருவானால்தான் அதிகம் எழுத முடியும். எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியரின் நூலை படித்துவிட்டு விரைவில் இந்நூலை படித்துவிட்டு என் அனுபவத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

மவுனம்

Saturday, July 28, 2012




அன்று நீயும் நானும்
அருகருகே இருந்தும்
உனக்கும் எனக்கும் இடையே
தடையாய் இருந்தது
மவுனம்தான்.

இன்று நீயும் நானும்
தொலைவாய் இருந்தும்
உனக்கும் எனக்கும் இடையே
தொடர்பாய் இருப்பதும்
மவுனம்தான்.

-- தபூ சங்கரின் “இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது” நூலில் இருந்து

-என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

குட்டி இதயங்கள்




எனக்குப் பிறகு
உன்னை நினைத்துக் கொண்டிருப்பதற்காக
நான் செய்த குட்டி இதயங்கள்தாம்
இந்த கவிதைகள்

- - தபூ சங்கரின் “நெஞ்சவர்ணக் கிளி” நூலில் இருந்து

-என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

கெட்ட வார்த்தை




நல்ல வார்த்தைகள்
போதவில்லை
கொஞ்சம்
கெட்ட வார்த்தைகளும்
வேண்டும்போல..
உன் அழகை வர்ணிக்க

- தபூ சங்கரின் “அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ” நூலில் இருந்து

-என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

தோடு



என் தோடுகளைக்
கழற்றி வீசவேண்டும்
முதலில்.

அவன் சொல்லும்
காதல் மொழிகளை எல்லாம்
ஒட்டுக்கேட்பது மட்டுமல்லாமல்
அவனில்லாத நேரங்களில்
திரும்ப சொல்லி
கேலி வேறு செய்கின்றன.

- தபூ சங்கரின் “அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ” நூலில் இருந்து

-என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

மழை கண்ணீர்



உன்னைத் தொடமுடியாத
மழைத் துளிகளெல்லாம்
ஒன்றாகச் சேர்ந்து 
வீதியெல்லாம்
துக்க ஊர்வலம் சென்று
ஆற்றிலும் குளத்திலும் போய்
விழுந்துவிடுகின்றன

- “நீ முகம் கழுவிய நீரைக் கொடு” நூலில் இருந்து..
ஆசிரியர்: கட்டளை ஜெயா

நல்ல ஒரு சிந்தனை... 

-என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

மரணம் என்ற அழகு




மரணத்தை கண்டு அழுபவனே!
மரணம் உன் அறியாமையைக் கண்டு
சிரிக்கிறது

மரணத்தின் இரக்கமற்ற கை
உனக்கு பிரியமானவற்றைப்
பிடுங்கிக்கொள்கிறது என்று
ஏசுகிறாய்

அந்த பிரியமே
மரணத்தால்தான்
உண்டாகிறது என்பதை
நீ அறிவதில்லை

பறிபோகாதவற்றின் மீது
பிரியம் உண்டாவதில்லை

ஒன்றையே பற்றிக்கொண்டிருக்கும்
உன் பார்வைக்கு
மற்றவற்றை அறிமுகம் செய்வது
மரணம்தான்

பகல் மரணமடையவில்லை என்றால்
அழகான நட்சத்திரங்களை
நீ பார்க்கமாட்டாய்

அழகிய மலர்
அற்ப ஆயுளில்
மடிந்து விடுகிறதே என்று
வருந்துகிறாய்

மலரின் அந்த அற்ப ஆயுள்தான்
அதன் அழகை
நீ அதிகமாக ரசிப்பதற்குக்
காரணமாகிறது

நிரந்தர அழகு
கவர்ச்சியை இழந்துவிடும்

எது அதிக அழகோ
அது விரைவில்
மரணமடைகிறது

மரணம் அவலட்சணம் என்று
அருவருக்கிறாய்
ஆனால் நாள்
அதன் மரணத்தில்
அழகாய் இருப்பதை
நீ கவனித்ததில்லையா?

விடியலை அழகு என்கிறாய்
அது இரவின் மரணம் அல்லவா?

புதுமையை வரவேற்பவனே!
பழமையின் மரணம் இல்லையென்றால்
புதுமை ஏது?

மரணம் நஷ்டம் என்கிறாய்
அது லாபமாக இருப்பதை
நீ கவனித்ததில்லையா?

வயலில் அறுவடை என்றால்
மகிழ்கிறாயே
மரணமும்
அத்தைத்தானே செய்கிறது

மரணம் என்றால்
முடிவு என்கிறாய்
அது தொடக்கமாகவும் இருப்பதை
நீ கவனித்ததில்லையா?

ஒரு பூவின் மரணத்தில்தான்
காய் பிறக்கிறது

கன்னிமையின் மரணத்தில்தான்
தாய்மை பிறக்கிறது

மரணம் என்றால்
அழிவு என்கிறாய்
அது நிறைவு என்பதை
நீ கவனித்ததில்லையா?

ஒரு ராகம்
நிறைவடையும்போது
நின்று போகிறதல்லவா?


- “ஆலாபனை” நூலில் இருந்து
ஆசிரியர் : கவிக்கோ அப்துல் ரகுமான்


மரணம் பற்றி ரொம்ப அருமையாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.. மனதை தொட்ட கவிதையாதலால் இங்கே பதிந்தேன்.


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

Exercise



யோகா - மனதுக்னகும் உடலுக்குமான Exercise

காதல் - இதயத்திற்கான Exercise


முன்னர் இதயத்திற்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தேன்..
அவள் சென்றதும் யோகா சென்று, மனதுக்கும் உடலுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்...

****தினேஷ்மாயா****

நிழலோடு வாழ்கிறேன்.




எல்லோரும் நிஜத்தோடுதான்
அதிகம் வாழ விரும்புவார்கள்...

ஆனால் நானோ,
அவள் நிஐவுகளோடுதான்
அதிகம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்
அதிகம் வாழ விரும்புகிறேன்..

பல நேரங்களில் நிஜம் கசக்கிறது,
நிழலான நினைவுகள் இனிக்கிறது..

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

காதல் ரகசியம்



பெண்ணிடம்
ரகசியத்தைத்தான் சொல்லக்கூடாது
என்பார்கள்....


ஆனால்,
நான் என் காதலையல்லவா
சொல்லாமல் மறைக்கிறேன்..

ஓ..
என் காதல் யாருக்கும் தெரியாமல்
ரகசியமாகவே இருப்பதால் என்னவோ
அவளிடம் சொல்ல யோசிக்கிறேனோ...



- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

உடலினைஉறுதிசெய்

Friday, July 20, 2012



         இன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து யோகா வகுப்பிற்கு சென்றேன். வகுப்பு அமைந்த இடம் ஒரு பெரிய மைதானத்தின் அருகில். அந்த மைதானத்தில் கிட்டத்தட்ட 200-300 பேர் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அதில் 95% பேர் 45 அல்லது 50 வயதிற்கு மேற்பட்டோர். நான் அவர்களைப் பார்க்கையில் எனக்குள் ஒரு ஆழ்ந்த சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. இவர்கள் அதிகம் வாழப்போவது இன்னும் 20 அல்லது 30 வருடங்கள் இருக்கும். அவர்கள் தங்கள் வாழ்க்கையை இன்னும் அதிகப்படுத்த, தங்கள் உடல் மீது அக்கறைக் கொண்டு நடைப்பயிற்சி செய்து வந்தனர். ஆனால், பெரும்பாலான இன்றைய சமூகத்தினரோ தங்கள் உடல்மீது அதிகம் அக்கறைக் கொள்ளாமல் உடலுக்கு அழிவைத்தரும் செயல்களில்தான் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்று புகையிலையை விற்கும்போதே எழுதிப்போட்டாலும் அதை கிழித்துப்போட்டுவிட்டு புகைக்க துவங்குகின்றனர். இன்று யோகாவில் மூச்சுப்பயிற்சியும், சூரிய நமஸ்காரமும் அதிகம் எனக்கு பிடித்திருந்தது. ஒரு மணி நேரம் யோகா வகுப்பு முடிந்த பின்னர் என் மனதும் உடலும் ஏதோ ஒரு புதிய அதிர்வை உணர்ந்தது அது நன்றாகவும் இருந்தது. மனதிற்கும் உடலுக்கும் ஒரு புதுவித சக்தி கிடைத்த அனுபவத்தை உணர்ந்தேன். 
பாரதியின் புதிய ஆத்திசூடியின் வரி ஒன்று மனதில் பட்டது.

“உடலினைஉறுதிசெய்”

நான் சொல்வதெல்லாம் உடலினை உறுதி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, வயதானவர்களே தங்கள் உடல்மீது அவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ளும் போது இன்றைய இளைஞர்கள் தங்கள் உடல் மீது கொஞ்சம் அக்கறை வைத்து அதை அழிக்கும் விதமான் செயல்களை தவிர்த்தாலே போதும். உடல் நன்றாக இருந்தால்தான் மனது நன்றாக இருக்கும், மனம் நன்றாக இருந்தால்தான் செயல் நன்றாக அமையும். செயல் நன்றாக இருந்தால்தான் நமது வாழ்க்கை நன்றாக அமையும். ஆகவே, நம் உடல் மீதும் கொஞ்சம் அக்கறையை வைத்துதான் பார்ப்போமே தோழர்களே....

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

நல்வழி

Thursday, July 19, 2012




அவ்வையின் “நல்வழி” நூலில் இருந்து எனக்கு பிடித்த ஒரு செய்யுளை இங்கே பதிவு செய்கிறேன். அக்காலம் மட்டுமின்றி இக்காலத்திற்கும், எக்காலத்திற்கும் பொருந்தும்படி எழுதியிருக்கிறார் அவ்வை. அவ்வையின் பாடல்களையும் நான் படிக்க ஆரம்பித்துவிட்டேன் என்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சி, எனது நீண்ட கால கனவை இன்று முடித்துக்கொண்டேன். அத்தோடு அவ்வையின் பாடல்களை என் வலையில் பதிப்பதில் பெரு மகிழ்ச்சி எனக்கு..

“ பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
  கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்கு
  ஆவிதான் போயினபின்பு யாரே அனுபவிப்பார்
   பாவிகாள் அந்தப் பணம்”

பாடல் 23, நல்வழி
எழுதியவர்: ஔவையார்



- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

கிட்டாதாயின் வெட்டென மற





பல நாட்களுக்குப் பிறகு என் மடியில் என் கணிணி. இன்று மீண்டும் துவங்குகிறேன் என் வலைப்பயணத்தை..



இன்று ஔவையாரின் ஆத்திசூடி மற்றும் கொன்றை வேந்தன் புத்தகங்களை  படித்துக் கொண்டிருந்தேன். அதில் பல விஷயங்கள் மனதை தொட்டாலும், மனதை தொட்ட விஷயங்களில் மனதை விட்டு நீங்காமல் இருந்தது 
“ கிட்டாதாயின் வெட்டென மற” 

ஒரு பொருள் உனக்கு கிடைக்காது என தீர்மானமாய் தெரிந்த பிறகு அதை மறந்துவிடுவதே நல்லது என்று சொல்லியிருக்கிறார் அவ்வை.

அப்போது என்னவள் தான் எனக்கு நினைவில் வந்தாள். கிடைக்காத, கிடைக்க வாய்ப்பே இல்லாத அவளை எண்ணி வருந்துவது தவறுதான் என்பதை புரிந்துக் கொண்டேன். நாளை முதல் யோகா மற்றும் தியானம் வகுப்பு செல்ல திட்டமிட்டிருக்கேன். நான் பல வருடங்களாக தியானம் செய்து வந்தாலும் இன்னும் என் மனதை ஆற்றிக்கொள்ள, இறைவனை நோக்கி இன்னொரு படி எடுத்துவைக்க இந்த பயிற்சி வகுப்பு பயன்படும் என்பதால் இந்த முடிவை எடுத்தேன்.

இன்னும் சில தினங்களில் என் தியான மற்றும் யோகா வகுப்பின் அனுபவங்களை பதிவு செய்கிறேன்.

உங்களுக்கும் அவ்வை சொன்னதையே நானும் சொல்கிறேன்.

“கிட்டாதாயின் வெட்டென மற”

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

பிறைத்தேடும் இரவிலே உயிரே

Tuesday, July 03, 2012





பிறைத்தேடும் இரவிலே உயிரே
எதைத்தேடி அலைகிறாய்..
கதைசொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..

பிறைத்தேடும் இரவிலே உயிரே
எதைத்தேடி அலைகிறாய்..
கதைசொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..

இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண்மூடவா..
அழகே இந்த சோகம் எதற்கு
நானுன் தாயுமல்லவா..

உனக்கென்ன மட்டும்
வாழும் இதயமடி..
உயிருள்ளவரை
நானுன் அடிமையடி...


பிறைத்தேடும் இரவிலே உயிரே
எதைத்தேடி அலைகிறாய்..
கதைசொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..

அழுதால் உன் பார்வையும்
அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில்
சோகம் தீர்க்கும் போதுமா..
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில்
வாழுமின்பம் தெய்வம்
தந்த சொந்தமா...
என் ஆயுள் ரேகை நீயடி..
என் ஆயுள் வேரடி..
சுமை தாங்கும் எந்தன் கண்மனி,
எனை சுடும் பனி..

உனக்கென்ன மட்டும்
வாழும் இதயமடி..
உயிருள்ளவரை
நானுன் அடிமையடி...


பிறைத்தேடும் இரவிலே உயிரே
எதைத்தேடி அலைகிறாய்..
கதைசொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..


விழியின் அந்த தேடலும்
அலையும் உந்த நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதிப்போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே
மீசை வைத்த பிள்ளையே..
இதை காதல் என்று சொல்வதா
என் காய்ந்து கொள்வதா
தினம் கொல்லுமிந்த பூமியில்
நீ.. வரம் தரும் இடம்...


திரைப்படம்: மயக்கம் என்ன
பாடியவர்: சைந்தவி, ஜி.வி.பிரகாஷ்
இசை: ஜி.வி.பிரகாஷ்
வரிகள்: தனுஷ்.




பல நாட்கள் கழித்து மனதை வருடிச்செல்லும்படியான ஒரு பாடல்.. இசையும், வரிகளும், பாடியவர்களின் இனிமையான குரலும் ஒன்று சேர்ந்து எனை ஏதோ செய்கிறது. இப்போதெல்லாம், எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் கைப்பேசியில் ஒலிக்கும் பாடல் இதுதான்... இணையத்தில் எவ்வளவோ தேடியும் இப்பாடலின் வரிகள் முழுவதையும் எவரும் பதியவில்லை என்பதை  தெரிந்துக்கொண்டு, என் மனதை திருடிய பாடலின் வரிகளை பதிவு செய்யும் வேலையை நானே எடுத்துக்கொண்டேன்..

- என்றும் அன்புடன்


தினேஷ்மாயா