சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
- மகாகவி பாரதியார்
இன்றைய நிலையில் எனக்கு மிகவும் தேவைபடும் கவிதையை பாரதி அன்றே எழுதிவிட்டு சென்றிருக்கிறான்..
நன்றி
பாரதி...
என்றும் அன்புடன்
**** தினேஷ்மாயா ****
2 Comments:
KANDIPPA SENRATHUINI THIRUMBATHU....
THEDUVATHU KADAIKATHU...
KIDAITHATHU NILAIKKATHU...
NIRANTHARAMATRA IVAAZHKAIYIL
THEDALUM THOLAITHALUME NIRANTHARAM...
மிகச்சரியாக சொன்னாய்...
தேடலும் தொலைத்தலும் தான் நிரந்தரம் இவ்வாழ்க்கையில்..
தொலைத்துவிட்ட பிறகு, தேடுவதை நான் நிறுத்திவிட்டேன்.
இனியும் தொலைத்தால் அதை தாங்கிக்கொள்ள எனக்கு சக்தியில்லை..
Post a Comment