நீலவானம் நீயும் நானும்

Friday, January 21, 2011



நீலவானம்.... நீயும் நானும்....

கண்களே பாசையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பாம்பிணி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்...!
இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே...!!!

நீலவானம் (The Blue Sky..).... நீயும் நானும் ( You and I..)....

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசந்தனை
நீபாதி நான்பாதியாய் கோர்
க்கின்ற பாசந்தனை
காதல் என்று பேர் சூட்டியே காலம் தந்த சொந்தமிது...!
என்னைபோலே பெண் குழந்தை உன்னை போலொரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி....!!!

நீலவானம்.... நீ
யும் நானும்....  

(பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்)

ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசம்தனை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம்தனை
செய்யும் விந்தை காதலுக்கு கைவந்ததொரு கலைதானடி ...!
உன்னை என்னை ஊற்றி ஊற்றி உயிர் செய்யும் மாயமும் அதுதானடி ...!!
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி ...!!!

நீலவானம்.... நீயும் நானும்..



படம் : மன்மதன் அம்பு
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடல் : கமலஹாசன்
பாடியவர் : கமலஹாசன்

என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

நான் பார்த்த சமீபத்திய படங்கள்



நந்தலாலா 

சிறுத்தை



மன்மதன் அம்பு



மைனா

மந்திரப் புன்னகை



- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே






ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா?
அன்பு ஒன்னுதான் அனாதையா?
ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா?
அன்பு ஒன்னுதான் அனாதையா?

யாரு இதை கண்டுகொள்வார்?
கைகளிலே ஏந்திக்கொள்வார்?
சொந்தம் சொல்ல யார் வருவார்?
அன்புக்கு யார் அன்பு செய்வார்?
ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா?
அன்பு ஒன்னுதான் அனாதையா?

உன்னைப் போல என்னை எண்ணினால்
நெஞ்சில் கங்கை ஆறு ஓடுமே
துன்பம் தீர்க்க நீளும் கைகளில்
சொர்க்கம் வந்து கை கோர்க்குமே
கோவில் குளம் யாவும் இங்கே
அன்பின் அடையாளம் அல்லவா
ஏழைக்கென்று தந்ததெல்லாம்
ஈசன் கையில் சேருமல்லவா
கண்களில்லா மனிதருக்கு
கால்களென நாம் நடந்தால்
நம் பூமியில் அனாதை யார்? அனாதை யார்?
ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா?
அன்பு ஒன்னுதான் அனாதையா?


மண்ணில் தானே எல்லைக்கோடுகள்
மனதில் கோடு யார் போட்டது?
பெற்றால்தானா பிள்ளை பூமியில்?
எல்லாம் எல்லாம் நம் பார்வையில்
நாதியற்ற பூவும் இல்லை
நட்டு வைத்ததால் வந்தது
நாதியற்றா நாம் பிறந்தோம்?
அன்னை இன்றி யார் வந்தது?
எங்கிருந்தோ இங்கு வந்தோம்
வந்ததெல்லாம் சொந்தங்களே
நம் பூமியில் அனாதை யார்? அனாதை யார்?  

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா?
அன்பு ஒன்னுதான் அனாதையா?

யாரு இதை கண்டுகொள்வார்?
கைகளிலே ஏந்திக்கொள்வார்?
சொந்தம் சொல்ல யார் வருவார்?
அன்புக்கு யார் அன்பு செய்வார்?
ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா?
அன்பு ஒன்னுதான் அனாதையா?




படம்: நந்தலாலா
பாடல்: மு.மேத்தா
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ் 


என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா