மாயன் பிரமிட்

Sunday, August 12, 2012



- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

உனக்கென்ன மேலே நின்றாய்

Friday, August 10, 2012





1..2..3..4..
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா..
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா..
உனதானை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா..
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா..

தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம் ...

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை

சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா (ஹ) நீ சொல்லு நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு

பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று

பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா..
உனதானை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா..

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா....


திரைப்படம்: சிம்லா ஸ்பெஷல்
இசை: MSV
பாடியவர்: SPB

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

முன் பனியா முதல் மழையா




முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே .... உயிர் நனைகிறதே....!
புரியாத உறவில் நின்றேன்!
அறியாத சுகங்கள் கண்டேன்!
மாற்றம் தந்தவள் நீதானே!


முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே .... உயிர் நனைகிறதே....!


மனசில் எதையோ மறைக்கும் கிளியே!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே!
கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!

என் இதயத்தை ... என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்!
உன் விழியினில்... உன் விழியினில் அதனை,
இப்போது கண்டு பிடித்து விட்டேன்!
இதுவரை எனக்கில்லை முகவரிகள்!
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்..!
வாழ்கிறேன்... நான் உன் மூச்சிலே.....!


முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே .... உயிர் நனைகிறதே....!




முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே .... உயிர் நனைகிறதே....!



சலங்கை குலுங்க ஓடும் அலையே!
சங்கதி என்ன சொல்லடி வெளியே!
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நெலவ புடிச்சுக்க நெனைப்பது எதுக்கு?
ஏலோ ஏலோ... ஏலே ஏலோ....!

என் பாதைகள் .... என் பாதைகள்
உனது வழி பார்த்து வந்து முடியுதடி!
என் இரவுகள், என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி!
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்!
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்!
மூழ்கினேன் .... நான் உன் கண்ணிலே...!

முன் பனியா? முதல் மழையா?

என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே .... உயிர் நனைகிறதே....!

திரைப்படம்: நந்தா
இசை: இளையராஜா
வரிகள்: பழனிபாரதி


-என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

லேசா லேசா





லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா..
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா..
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா..
காதல் தேவன் கோவில் தேடி வருகிறதே விரைவினிலே..
கலர் கலர் கனவுகள் விழிகளிலே..
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே..


லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா..
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா..
காதல் தேவன் கோவில் தேடி வருகிறதே விரைவினிலே..
கலர் கலர் கனவுகள் விழிகளிலே..
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே.


நான் தூங்கி நாளாச்சு நாளெல்லாம் பாலாச்சு
கொல்லாமல் என்னைக்கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனியிரவும் அனல் மழையை பொழிகிறதே


லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா..
லேசா லேசா நீண்டகால உறவிது உறவிது உறவிது...

வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல

நான் வாங்கும் மூச்சுக்காற்று உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா



வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல

நான் வாங்கும் மூச்சுக்காற்று உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா

நீயென்றால் நான் தானென்று உறவறிய ஊரறிய
ஒருவரில் ஒருவரின் உயிர் கரைய
உடனடியாய் உதடுகளால் உயிலெழுது


லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா..
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா..
காதல் தேவன் கோவில் தேடி வருகிறதே விரைவினிலே..
கலர் கலர் கனவுகள் விழிகளிலே..
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே..
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே..

திரைப்படம்: லேசா லேசா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

ஆடாத ஆட்டமெல்லாம்


ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

வாழ்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே!!
வந்தவனும் வருபவனும்.. நிலைப்பதிலையே!!
ஏன்.. நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு.

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

நித்தம் கோடி சுகங்கள் தேடி
கண்கள் மூடி அலைகின்றோம்.
பாவங்களை மேலும் மேலும்
சேர்த்துக்கொண்டே போகின்றோம்.

மனிதன் என்னும் வேடம் போட்டு,
மிருகமாக வாழ்கின்றோம்.
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து,
தீமைகளை செய்கின்றோம்.

காலம் மீண்டும் திரும்பாதே!
பாதை மாறி போகாதே!!
பூமி கொஞ்சம் குலுங்கினாலே
நின்று போகும் ஆட்டமே!

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

ஹேய்.. கருவறைக்குள் தானாக
கற்றுக்கொண்ட சிறு ஆட்டம்,
தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே!
பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம்,
காதல் வந்த பின்னாலே, போதையாட்டமே!

பேருக்காக ஒரு ஆட்டம்,
காசுக்காக பல ஆட்டம்.
எட்டு காலில் போகும்போது,
ஊரு போடும் ஆட்டமே!

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

வாழ்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே!!
வந்தவனும் வருபவனும்.. நிலைப்பதிலையே!!
ஏன்.. நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு.

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?



திரைப்படம்: மௌனம் பேசியதே
இசை: யுவன் சங்கர் ராஜா
வரிகள் சினேகன்


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

துல்லியம்





எனக்கு ரொம்ப பிடித்தமான புகைப்படம் இது. மிகவும் துல்லியமாக எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தை இங்கே பதிய நினைத்தேன்.



- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

ஒன்றுபட்டால்..




ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே
நம் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே....

- பாரதி



- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

அழகு



ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விஷயம் அழகாய் தோன்றும். என்னைப்பொறுத்தமட்டும் இவ்வுலகில் பேரழகாய் நான் கருதுவடு இரண்டே விஷயங்கள்தான். இன்று இயற்கை. மற்றொன்று குழந்தைகள்....


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

தாய்ப்பாசம்



இவ்வுலகில் ஈடுஇணை  இல்லா பாசம் தாயின் பாசம் மட்டும்தான். இவ்வுலகில் நமக்கு கிடைத்த உறவும் பாசமும் நம்மைப்பற்றி தெரிந்த பின்னர்தான் நமக்கு கிடைத்தவை. ஆனால், நம் முகத்தைப்பார்க்கும் முன்னரே தாயின் பாசம் நமக்கு கிடைத்துவிட்டது. ஆதிமுதல் அந்தம்வரை அவளது பாசம்  நம் வாழ்க்கையின் கடைசி வரை கூடவே வரும்..


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

மனிதநேயம்


மனிதநேயம் என்றோ செத்துவிட்டது என்பதை இந்த படம் நன்றாக உணர்த்துகிறது. தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால் இன்றைய நிலைக்கு பார்த்தால், இவ்வுலகை தினமும் பல கோடிமுறை அழிக்கவேண்டுமே. சாவதற்கு எந்த காரணமாய் இருந்தாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், பட்டினி ஓரு மனிதனின் மரணத்திற்கு காரணம் என்றால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தேவையில்லை என எவ்வளவோ பண்டங்களை கீழே கொட்டுகிறோம், ஆனால் அதை தேவைப்படுவோர்க்கு தானமாய் தரக்கூட தயங்குகிறோம். என்னடா உலகம் இது மனிதா....


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

ஏமாறாதே..



ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் இவ்வுலகில் இருக்கத்தான் செய்வான். நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த கலிகாலத்தில் யாரைத்தான் நம்புவது என்று தெரியவில்லை. அனைவரையும் நேசி. ஆனால் உடனே நம்பிவிடாதே. நம்பிவிட்டால் ஒருபோதும் சந்தேகிக்காதே.


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

முதலாளித்துவம்



  எங்கும் முதலாளித்துவம்தான் மேலோங்கி நிற்கிறது. உழைப்பவன் என்றும் மேலே வர முடிவதில்லை. உழைக்கும் வர்க்கம் என்றும் உழைத்துக்கொண்டேதான் இருக்க வேண்டும் என்பது முதலாளிகள் வர்க்கம் என்றோ முடிவு செய்தது. நம் உரிமைக்காக நாம் போராடினால் மட்டுமே நம் உரிமைகளை நாம் மீட்டெடுக்க முடியும்... உழைப்பாளர் தினங்களை கொண்டாடுவதை விடுத்து, என் உழைப்பாளிகளை கொண்டாடுங்கள். இவ்வுலகமே நல்லதொரு மாற்றம் காணும்...

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

கண்ணீர்




கண்ணீருக்கு பல காரணங்கள் உண்டு.

மகிழ்ச்சி
துன்பம்
வலி
பிரிவு
தோல்வி
வெற்றி
காதல்
பக்தி
முக்தி...

இப்படி கண்ணீருக்கு பல காரணங்கள் உண்டு. கண்ணீரின் தனித்துவம் என்னவென்றால், உங்களை யாராவது சிரிக்க சொன்னால் உடனே சிரித்து விடுவீர்கள். பொய்யாகவேனும் சிரிப்பீர்கள். ஆனால், உங்களை யாராவது உடனே அழ சொன்னால், அழுகையும் வராது, பொய்யாய் கண்ணீரும் வராது.

உண்மையான கண்ணீர் பொய்யாய் வராது..


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

சின்னத் தாயவள் தந்த ராசாவே




சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ..
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே


தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

பால்மணம் வீசும் பூமுகம்.. பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஓர் வரம் வேண்டிட வந்த ஓர் வரம்
வெயில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வம் கோயிலைச் சென்று சேருமோ
எந்தன் தேனாறே..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே


திரைப்படம்: தளபதி
இசை: இளையராஜா
வரிகள்: வாலி
பாடியவர்: ஜானகி


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

வீழ்வேனென்று நினைத்தாயோ



- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

Sunday, August 05, 2012




.. கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

காற்றின் அலைவரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிகின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்

கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..

வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் முன்னே
ஓடோடி வா..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

திரைப்படம்: உயிரே
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னிமேனன், ஸ்வர்ணலதா

நான் எப்படி இந்த பாடலை என் வலையில் இதுநாள் வரை பதியாமல் இருந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. என் வாழ்நாளில் இதுவரை கேட்ட பாடல்களிலும் இனிமேல் கேட்கப்போகும் பாடல்களிலும் சரி, இந்த பாடலைத்தான் என் உயிர் என்றும் முதலாய் சொல்லும். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் கண்ணீரையும் பல நினைவுகளையும் எனக்கு தந்துவிட்டு செல்லும் இந்த பாடலை என் மரணத்திலும் மறக்கமுடியாத பாடல் என்று சொல்வேன்...

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

இளைய நிலா பொழிகிறதே



இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே

வரும் வழியில் பனி மழையில்
பருவநிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வரும் வழியில் பனி மழையில்
பருவநிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவமகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

கரு கரு விழிகளால்




கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க..

நீ..
ஒரு மல்லிச் சரமே
நீ..
இலை சிந்தும் மரமே
என்..
புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்..
நீ தங்கச்சிலையா
வெண்..
நுரை பொங்கும் மழையா
மண்..
மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்

புது புது வரிகளால் என் கவிதைத் தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரை இலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா

நீ..
ஒரு மல்லிச் சரமே
மண்ணில்
இலை சிந்தும் மரமே
மின்னும்
புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்..
நீ தங்கச்சிலையா
வெள்ளை
நுரை பொங்கும் மழையா
அன்பால்
மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்
கையில் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே ஒச்சுக்கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை

கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க..
தாமரை இலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா

தாமரை
 இலை நீர் நீதானா
ஒரு மல்லிச் சரமே
தனியொரு அன்றில் நீதானா
இலை சிந்தும் மரமே
புயல் தரும் தென்றல் நீதானா
நீ தங்கச்சிலையா
புதையல் நீதானா
மனம் பின்னும் வலையா

ஒரு மல்லிச் சரமே....


படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், க்ரீஷ், நரேஷ் ஐயர்

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****



வா வா நிலவ புடிச்சி தரவா




வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா

வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா

வானத்தில் ஏறி ஏனைக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு

வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ... ஹோ.. ஹோ...
ஓஹோ... ஹோ.. ஹோ...

வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா

கவலை நம்மை சிலநேரம் கூறுபோட்டு கொண்டாட்டும்
தீயினை தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலை சேரும் நதியும் தன்னை தொலைத்து உப்பாகும்
ஆயினும்கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும் அதில் முதலும் இல்லை
முடிவும் இல்லை புரிந்தால் துயரம் இல்லை

வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ... ஹோ.. ஹோ...
ஓஹோ... ஹோ.. ஹோ...

வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா


ஹா ஹா ஹா இரவை பார்த்து மிரளாதே
இதயம் வேர்த்து துவளாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால்
நிலவின் அழகு தெரியாதே
கனவில் நீயும் வாழாதே
கலையும் போது வருந்தாதே
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம்
கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்தது போனால் மறுபடி ஒன்று புதியதாய் உருவாகும்

வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ... ஹோ.. ஹோ...
ஓஹோ... ஹோ.. ஹோ...


திரைப்படம்: நான் மகான் அல்ல
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: ராகுல் நம்பியார்


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****