திருக்குறள் - 64

Friday, February 02, 2024

அதிகாரம்: மக்கட்பேறு

திருக்குறள்: 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.


விளக்கம்:

குடிக்கிறது கூழோ கஞ்சியோ அது நம்ம குழந்தை ஊட்டிவிடும் போது தேனாவும் பஞ்சாமிர்தமாவும் மாறிடும்..


* தினேஷ்மாயா *

திருக்குறள் - 53

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்

திருக்குறள்: 53

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை.


விளக்கம்:

வாழ்க்கைத்துணை நல்லா அமைஞ்சுட்டா வாழ்க்கை சொர்க்கம்... இல்லனா நரகம்..


* தினேஷ்மாயா *

திருக்குறள் - 45

அதிகாரம்: இல்வாழ்க்கை

திருக்குறள்: 45


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது.


விளக்கம்:

மனசுல தூய்மையும், உண்மையான அன்பும் இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்..


* தினேஷ்மாயா *

திருக்குறள் - 34

அதிகாரம்: அறன் வலியுறுத்தல்

திருக்குறள்: 34


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 

ஆகுல நீர பிற....    குறள்:34


விளக்கம்:

வாழ்வின் உயர்ந்த அறம் என்ன தெரியுமா?

மனசளவில் நல்லவரா இருங்க. அதுவே போதும்..


* தினேஷ்மாயா *



திருக்குறள் - 29

அதிகாரம்: நீத்தார் பெருமை

திருக்குறள்: 29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 

கணமேயும் காத்தல் அரிது.


விளக்கம்:


நல்ல குணம் கொண்டவங்க, கோவப்பட மாட்டாங்க...


* தினேஷ்மாயா *

திருக்குறள் - 12

அதிகாரம்: வான் சிறப்பு

திருக்குறள்: 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 

துப்பாய தூஉம் மழை .


விளக்கம்:


மழை - நீர்


நீரால் தான் இங்கே சாப்பாடு கிடைக்கிறது. 

சிலருக்கு அந்த நீரே சாப்பாடாகவும் கிடைக்கிறது.


* தினேஷ்மாயா *

திருக்குறள் - 1

அதிகாரம்: கடவுள் வாழ்த்து

திருக்குறள்: 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு.


விளக்கம்:

தமிழுக்கு - அ


உலகிற்கு - சூரியன்


ஆதி பகவன் - ஆதி பகலவன் !


இயற்கையை வழிப்பட்ட தமிழர் மரபை ஒத்து, இவ்விளக்கத்தை கொடுத்துள்ளேன்..


* தினேஷ்மாயா *

நீண்ட நாள் கனவு

 திருக்குறள் எனும் அதி அற்புத நூல், ஈரடி வெண்பாவில் அழகாக உலக நீதியை எடுத்து சொல்கிறது. அதை இக்காலத்தின் மக்களுக்கு இன்னமும் எளிதாக புரியும்வண்ணம் அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளில் விளக்கிக்கூறி ஒரு நூல் வெளியிடலாம் என்பது என் நீண்ட நாள் கனவு...

1330 குறளுக்கும் அவ்வாறு எழுதுவது சாத்தியமா என முதலில் என் மனதே முட்டுக்கட்டைப் போட்டது.. முடியாது என்று நினைத்திருந்தால், உலகம் இந்த நிலைக்கு வந்திருக்காது.. முடியும் என்றே துவங்குவோம் என முடிவெடுத்துவிட்டேன்..

நூலாக வெளியிடும் எண்ணம் இருக்கிறது. அதற்கு முன் என்னால் முடிந்தவரை சில குறட்பாக்களை இங்கே பதிவிடுகிறேன்..

* தினேஷ்மாயா *

கருணைக் கடல்

இறைவனை கருணைக் கடலாய் பார்த்த என் விழிகள்

அவன் இரக்கமற்றவன் என்பதை நான் உணர்ந்த அந்நொடியில்

உண்மையை புரிந்துக்கொண்டவன் மனதில் எனக்கு இடமில்லை என

அவனே என்னுள் இருந்து நீங்கிவிட்டானோ என்னவோ ?

* தினேஷ்மாயா *

போதும்னு சொல்லிப் பழகு

“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு”   - திருக்குறள்: 945


பொருள்: 

உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒவ்வாமையல்லாத உணவினை உண்ணும் அளவிற்கு மேல் செல்ல மறுத்து அளவாக உண்டால் உணவினால் எவ்வித துன்பமும் இல்லை அவ்வுயிர்க்கு.

இக்குறளில்  இரண்டு விஷயங்களை காணலாம்

1. உடலிற்கும் உள்ளத்திற்கும் ஒவ்வாத உணவை உண்ண கூடாது

2. உடலுக்கு ஏற்ற உணவானாலும் அளவாகவே உண்ணவேண்டும்.


சுருக்கமான விளக்கம்:

புடிச்ச சாப்பாடாவே இருந்தாலும் போதும்னு சொல்லிப் பழகு !


* தினேஷ்மாயா *

மனிதம்

 முகம் தெரியாத பெயர் தெரியாத யாரோ ஒரு நபர் முகம் தெரியாத பெயர் தெரியாத வேறுயாரோ ஒரு நபர்மீது காட்டும் அன்புதான், மனிதம் இன்னமும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி.

நீங்கள் அந்த சாட்சியாக இருந்துப்பாருங்களேன்..

* தினேஷ்மாயா *

ஆசான்

வாழ்க்கை எனக்குப் புகட்டிய பாடம்

“ரெட்” திரைப்படத்தின் “கண்ணைக் கசக்கும் சூரியனோ” பாடலில் வரும் சில வரிகள். அதை இங்கே நான் ஏற்கெனவே பதிந்திருக்கிறேன். அது -


உலகத்தை நேசி..

ஒருவரையும் நம்பாதே..

உறங்கிய போதும்

ஒரு கண்ணை மூடாதே..


* தினேஷ்மாயா * 

புரியாத விடை

நீ என்னுடம் ஏன் பேசவில்லை 

என்பதில் எனக்கு - துளியும் 

சந்தேகமும் இல்லை

சலனமும் இல்லை..


ஆனால், காரணமேயின்றி

மீண்டும் ஏன் பேச ஆரம்பிக்கிறாய்

என நினைக்கையில்

பித்துப்பிடிக்கிறது..


* தினேஷ்மாயா *

மீண்டும் பைத்தியமானேன் !

 சுமார் ஏழாண்டுகள் கழித்து

தூக்கத்திலிருந்து அதிகாலையிலேயே விழித்து

இங்கே வலையில் கிறுக்க ஆரம்பித்துள்ளேன்

இதன் அர்த்தம் என்ன ?

தலைப்பை படியுங்கள்..

கவிதையின் அர்த்தமும்

என் மனதும்

புரியும் !

* தினேஷ்மாயா *

தேடல்

இவ்வுலகிற்கு உன் தேவை ஏற்படும்போது

நிச்சயம் நீ தேடப்படுவாய்...

அதுவரை ஓய்ந்திரு மனமே !

* தினேஷ்மாயா *

அவ்வளவு எளிதாக

அவ்வளவு எளிதாக 

மனதினுள் நுழையாதவர்கள்

அவ்வளவு எளிதாக 

மனதைவிட்டு நீங்குவதுமில்லை..

* தினேஷ்மாயா *


எது உண்மை

 

என் மீதான உங்களின் அன்பு

போலியானதாகவே தெரிகிறது..

என் மீது நீங்கள் காட்டும் வெறுப்பில்

அத்தனை உண்மை நிறைந்துள்ளது...

* தினேஷ்மாயா *

இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறேன்

Thursday, February 01, 2024


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

 நான் முன்னமே இங்கே பதிவிட்டிருக்கிறேன். ஒரு ஆறு மாதத்திற்கு இங்கே எந்த பதிவும் இல்லையென்றால் நான் உயிர்ப்புடன் இல்லை என்றும், ஒரு வருடத்திற்கு எந்த பதிவும் இல்லையென்றால் நான் உயிருடன் இல்லை என்றும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று.


நான் இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே இந்தப்பதிவு.

நீண்ட பதிவாக இல்லையென்றாலும், இனி சிறு சிறு பதிவுகள் இங்கே அடிக்கடி நீங்கள் எதிர்ப்பார்க்கலாம்..


என்றும் பேரன்புடன்

* தினேஷ்மாயா *