ஏன் நீங்கள் தலித்தா ?

Saturday, April 15, 2023

சாக்ரடீஸை படியுங்கள் என்றபோது  நீங்கள் கிரேக்கனா என்று கேள்வி எழுப்பவில்லை


கார்ல் மார்க்ஸை படியுங்கள் என்றபோது  நீங்கள் யூதனா என்று கேள்வி எழுப்பவில்லை


ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸை படியுங்கள் என்றபோது  நீங்கள் ஜெர்மானியனா என்று கேள்வி எழுப்பவில்லை


வ்ளாடிமிர் லெனினை படியுங்கள் என்றபோது நீங்கள் ரஷ்யனா என்று கேள்வி எழுப்பவில்லை


எர்னஸ்டோ சே குவேராவை படியுங்கள் என்றபோது நீங்கள் அர்ஜென்ட்டினியனா என்று கேள்வி எழுப்பவில்லை


ஜான் லாக்கை படியுங்கள் என்றபோது  நீங்கள் சுதந்திரவாதியா என்று கேள்வி எழுப்பவில்லை


ஃபிடல் காஸ்ட்ரோவை படியுங்கள் என்றபோது நீங்கள் கியூபனா என்று கேள்வி எழுப்பவில்லை


நெல்சன் மண்டேலாவை படியுங்கள் என்றபோது நீங்கள் தென்ஆப்பிரிக்கனா என்று கேள்வி எழுப்பவில்லை


ஃப்ரெட்ரிக் டக்ளஸ், ஆபிரகாம் லிங்கனை படியுங்கள் என்றபோது நீங்கள் அமெரிக்கனா என்று கேள்வி எழுப்பவில்லை


மார்ட்டின் லூதர் கிங்கை படியுங்கள் என்றபோது நீங்கள் நீக்ரோவா என்று கேள்வி எழுப்பவில்லை


சார்லஸ் டி கோளலை படியுங்கள் என்றபோது நீங்கள் பிரெஞ்சுக்காரனா என்று கேள்வி எழுப்பவில்லை


வில்லியம் வாலஸை படியுங்கள் என்றபோது நீங்கள் ஸ்காடிஷ்ஸா என்று கேள்வி எழுப்பவில்லை


மாவோ சேதுங்கை படியுங்கள் என்றபோது நீங்கள் சீனனா என்று கேள்வி எழுப்பவில்லை

ஆனால்.....

பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை வாசித்த, 

உலகின் மிகப்பெரிய அரசியலமைப்பு சாசனத்தை வடிவமைத்த, 

15000 பக்கங்களை எழுதிய, 

55க்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளியிட்ட, 

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் பகுத்தறிவு பொதுவுடைமையை வலியுறுத்திய, 

காலனி ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவிற்காக போராடிய, 

சாதிமத ஆதிக்க ஒடுக்குமுறையை எதிர்த்து இந்தியாவிற்குள் போராடிய 

“பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் (M.A., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt)” அவர்களை படியுங்கள் என்றால் மட்டும், 


“ஏன் நீங்கள் தலித்தா” என்று மூர்க்கத்தனமான கேள்வி எழுகிறது.!? 


 - படித்தில் எனக்கு பிடித்தது


* தினேஷ்மாயா *

காற்றோடு பட்டம் போல



காற்றோடு பட்டம் போல

இந்த காற்றோடு பட்டம் போல


காற்றோடு பட்டம் போல

இந்த வாழ்க்க தான்


அட யார் சொல்ல கூடும்

அது போகும் போக்க தான்


கண்ணால் காண்பது

இங்கு பொய்யாய் மாறுமா…?


எங்கோ போனது 

என்னிடம் வந்து சேருமா…?


ஒரு தெய்வம் பாக்க வந்து

ஒரு தெய்வம் போச்சு இன்று


நம் வாழ்க்கை எப்போதும்

கண்ணாமூச்சியா…?


இந்த மண் மேலே இப்போது

நான் தான் சாட்சியா…?


காற்றோடு பட்டம் போல

இந்த வாழ்க்க தான்


அட யார் சொல்ல கூடும்

அது போகும் போக்க தான்


பக்கத்துல வாழும்போது

உன்னருமை தெரியல


உன்னருமை தெரியும்போது

பக்கம் நீ இல்ல


தன்னந்தனி படகுபோல

தத்தளிக்கும் வாழ்க்கை போல


தண்டனைகள் ஏதும் இல்ல

இந்த மண்ணுல


நீரிலே பூத்தாலும்

பூக்களின் வாசங்கள்

தண்ணியிடம் சேர்வதில்லையே

என்ன விதியோ?


அன்பிலே அன்பிலே

இந்த மனம் வாடுதே

கண்ணிலே ஈரம் சேருதே

கல்லிலே பூவும் பூக்குதே


காற்றோடு பட்டம் போல

இந்த வாழ்க்க தான்


அட யார் சொல்ல கூடும்

அது போகும் போக்க தான்


சின்னதொரு சோற்றைதானே

சிற்றெறும்பு கூடியே

தன்னுடைய வீட்டைநோக்கி

கொண்டு போகுமே


உள்ளபடி சொல்வதென்றால்

சிற்றெறும்பு போலக்கூட

சொந்தங்களை காக்கவில்லை 

இங்கே நானுமே 


கோயில்தான் போனாலும்

புண்ணியம் செய்தாலும்

என்னுடைய பாவம் தீருமோ

இந்த உலகில்


இன்றுதான் இன்றுதான்

என் முகத்தை பார்க்கிறேன்

கண்ணிலே ஈரம் சேருதே

கல்லையும் காலம் மாற்றுதே


காற்றோடு பட்டம் போல

இந்த வாழ்க்க தான்


அட யார் சொல்ல கூடும்

அது போகும் போக்க தான்


கண்ணால் காண்பது

இங்கு பொய்யாய் மாறுமா…?


எங்கோ போனது என்னிடம்

வந்து சேருமா…?


ஒரு தெய்வம் பாக்க வந்து

ஒரு தெய்வம் போச்சு இன்று


நம் வாழ்க்கை எப்போதும்

கண்ணாமூச்சியா…?


இந்த மண் மேல இப்போது

நான் தான் சாட்சியா…?


திரைப்படம்: அயோத்தி

வரிகள்: சாரதி

இசை: N.R.ரகுநாதன்

குரல்: பிரதீப் குமார்



* தினேஷ்மாயா *

நல்லவர்கள் கூடும் போது..


நல்லவர்கள் கூடும் போது

நன்மைகளும் கூடி போகும்

கண் இமைக்கும் நேரம் போதும்

எல்லாம் மாறுமே


புன்னகையின் வாசமின்றி

இன்று வரை பூமி மேலே

நிம்மதியில் வாழ்ந்ததாக

இல்லை யாருமே


துன்பமும் இன்பமும்

கற்றுத் தரும் காலமே

நம்பினால் யாவும் மாறுமே

நம்பு மனமே


உன்னையும் என்னையும்

ஒன்றிணைக்கும் வாழ்விலே

அன்புதான் பாலமாகுமே

அன்புதான் பாலமாகுமே…


ஆராரோ ஆரிராரோ ஆரிராரிராே

இன்று யார்யாரோ செய்த அன்பால் 

நெஞ்சம் பூத்ததோ

எல்லா நாளுமே

விதை நெல்லாய் ஆகுமே

அன்பால் யாருமே பக்கம் வந்து

நின்றால் போதுமே


சிறு வெள்ளைத் தாள் மீது

பல வண்ணம் சேரும் போது

அங்கே தான் உண்டாகும்

தன்னால் மாற்றமே


இந்த நம்பிக்கை ஒன்றே தான்

நம்மை தேற்றுமே…


திரைப்படம்: அயோத்தி

வரிகள்: சாரதி

இசை: N.R.ரகுநாதன்

குரல்: சாய் விக்னேஷ்


படமும் சரி இந்த பாடலும் சரி, மனதை தொட்டுவிட்டது.

கண்களையும் குளமாக்கியது எனவும் சொல்லலாம்.

ரொம்ப நாள் கழிச்சு மனதை அதிகம் தாக்காமல் கனமாக்காமல் லேசாக வருடி அதே சமயம் கண்ணீரையும் தந்துவிட்டு சென்ற திரைப்படம்.

அன்பையும் மனிதத்தையும் நேசிக்கும் ஒவ்வொரு மனதும் மனிதரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

இந்த வரிகள் வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கையைத் தருகிறது. உணர்வுபூர்வமான வரிகள் !!

* தினேஷ்மாயா *

மனிதம் வாழும்

உலகின் ஏதோ ஒரு ஓரத்தில்

யாரோ ஒருவரின் உருவத்தில்

 “மனிதம்”  எப்போதும்

வாழ்ந்துக்கொண்டேதான் இருக்கும்...


#அயோத்தி திரைப்படத்தின் வாயிலாக

இந்த உண்மையை 

இந்த நம்பிக்கையை

மனதை தொடும் விதமாக விதைத்த

ஒட்டுமொத்த திரைப்பட குழுவிற்கும்

வாழ்த்துகள் கலந்த நன்றி !!

* தினேஷ்மாயா *